உஷா சினாய்
உஷா சினாய் (Usha Chinoy) இந்தியாவின் குசராத்தின் ராஜ்கோட்டை சேர்ந்த இந்தியக் கல்வியாளர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார்.
இளமையும் கல்வியும்
தொகுஉஷா சினாய் முன்னாள் சமசுதானமான ஜாம்நகர் (நவாநகர்) கத்தியவார் தீபகற்பத்தில் (குசராத்தின் சௌராட்டிராவில்) திரம்பக்லால் மணிசங்கர் ஜோஷி மற்றும் யஷோமதி ஜோஷி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். ராஜ்கோட்டில் உள்ள தர்மேந்திரசிங்ஜி கல்லூரியில் இலங்கலைப் (ஆனர்சு) பட்டம் பெற்றார். பின்னர் சங்கீத விசாரத் மற்றும் இந்துசுதானி வினீத் பட்டங்கள் மூலம் இசையில் பட்டயம் பெற்றார். ஜாம்நகர் நகரில், மாநகராட்சியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினராகவும், 1940களின் பிற்பகுதியிலிருந்து 1950களின் முற்பகுதி வரை சஜுபா பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராகவும் இருந்தார்.[1][2] இவரது தாத்தா, கவிஞர் மற்றும் எழுத்தாளர்,[3] வைத்யா சாசுதிரி மணிசங்கர் கோவிந்த்ஜி ஆவார். இவர் 1881ஆம் ஆண்டில் ஜாம்நகரில் புகழ்பெற்ற ஆயுர்வேத நிறுவனமான புகழ்பெற்ற அடாங்க் நிக்ரா மருந்தகத்தை நிறுவினார். இந்நிறுவனம் பம்பாய் (மும்பை), கல்கத்தா (கொல்கத்தா), சென்னை, புனே, கராச்சி, கொழும்பு, ரங்கூன் (யங்கோன்), பினாங்கு[4] மற்றும் சிங்கப்பூர்[5] ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டிருந்தது.
பணி
தொகுஉஷா 1940களில் யங் இந்தியாவுக்காகப் பதிவு செய்யப்பட்ட பாடல்களுடன் தனது பாடும் வாழ்க்கையைத் தொடங்கினார். 1960 மற்றும் 1980களில் அனைத்திந்திய வானொலியிலும் பின்னர் தொலைக்காட்சி அலைவரிசையான தூர்தர்ஷனிலும் இவரது தொகுப்பில் குசராத்தி மற்றும் உருது கஜல்கள், பஜனைகள், தும்ரிகள், குஜராத்தி நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் ஒளி இசை ஆகியவை அடங்கும்.குசராத்தி திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் இருந்தார். 1964 முதல் 1974 வரை, இவர் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்குமார் கல்லூரியில் கலை, கைவினை மற்றும் இசைத் துறையின் நிறுவனத் தலைவராகவும் ஆசிரியராகவும் இருந்தார். 1967ஆம் ஆண்டில் பன்னாட்டு வாழ்க்கை பரிசோதனையின் ஒரு பகுதியாக இவர் அமெரிக்கா சென்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஉஷா மூத்த இந்தியக் காவல் சேவை அதிகாரி ரொமேஷ்சந்திர சினாய் (1925-1991) என்பவரை மணந்தார். இவரது மூத்த சகோதரர் சுரேஷ் டி. ஜோஷி, 1960 மற்றும் 1970களில் ஜாம்நகரில் உள்ள குசராத்து ஆயுர்வேத கல்லூரியின் முதல்வராக இருந்தார்.[6] முன்னாள் சமஸ்தானமான ராஜ்கோட்டின் திவான் பாரிஸ்டர் சி. என். சினாயின் மருமகள் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில் சீனாவின் ஷாங்காயில் இறந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ஒருவர், சுஜான் ஆர். சினாய், மெக்சிகோவிற்கான இந்தியத் தூதராகச் செயல்பட்டவர். மேலும் இவருக்கு ஐந்து பேரக்குழந்தைகள் இருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.motherandsriaurobindo.org/Content.aspx?ContentURL=_staticcontent/sriaurobindoashram/-09%20e-library/-01%20works%20of%20sri%20aurobindo/-01%20english/-02_other%20editions/Arya/A%20Philosophical%20Review%20VOL-1/-14_15th%20July%201915.htm
- ↑ "Page 7 Advertisements Column 4".
- ↑ https://www.google.com.mx/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22Ma%E1%B9%87ica%E1%B9%85kar+K%C5%8Dvintaji%22&gws_rd=ssl
- ↑ "Atank Nigrah Pills".
- ↑ "Page 1 Advertisements Column 3".
- ↑ "Login". Archived from the original on 2023-02-27. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.