ஊர்காவற்றுறை பிரதேச சபை

ஊர்காவற்றுறை பிரதேச சபை (Kayts Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இது இரண்டு தீவுகளை முழுமையாகவும் ஒரு தீவைப் பகுதியாகவும் உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலும் இது கடலினால் சூழப்பட்டுள்ளது. கிழக்கில் மட்டும் வேலணைப் பிரதேச சபையுடன் பொது எல்லையைக் கொண்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

ஊர்காவற்றுறை பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
மருதயினார் ஜெயகாந்தன், ஈபிடிபி
19 மார்ச் 2018 முதல்
உறுப்பினர்கள்13
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018

வட்டாரங்கள்

தொகு

ஊர்காவற்றுறைப் பிரதேச சபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர் ஆகிய விபரங்களையும், அவ்வட்டாரங்களுள் அடங்கிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் இலக்கம், பெயர்கள் முதலியவற்றையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.[3]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 எழுவைதீவு J39 எழுவைதீவு
2 ஊர்காவற்றுறை J49 ஊர்காவற்றுறை
J50 பருத்தியடைப்பு
J51 கரம்பன்
3 நாரந்தனை வடமேற்கு J56 நாரந்தனை வடமேற்கு
4 நாரந்தனை J55 நாரந்தனை வடக்கு
J57 நாரந்தனை
5 நாரந்தனை தெற்கு J58 நாரந்தனை தெற்கு
6 கரம்பன் J52 கரம்பன் கிழக்கு
J53 கரம்பன் தென்கிழக்கு
J54 கரம்பன் மேற்கு
7 அனலைதீவு J37 அனலைதீவு வடக்கு
J38 அனலைதீவு தெற்கு
8 புளியங்கூடல் J59 சுருவில்
J60 புளியங்கூடல்

தேர்தல் முடிவுகள்

தொகு

1998 உள்ளூராட்சித் தேர்தல்

தொகு

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 2,771 72.43% 9
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 536 14.01% 1
  சுயேச்சை 411 10.74% 1
  தமிழீழ விடுதலை இயக்கம் 57 1.49% 0
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 51 1.33% 0
செல்லுபடியான வாக்குகள் 3,826 100.00% 11
செல்லாத வாக்குகள் 269
மொத்த வாக்குகள் 4,095
பதிவில் உள்ள வாக்காளர்கள் 30,340
வாக்களித்தோர் 13.50%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

தொகு

22 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி** 2,833 77.45% ?
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு* 805 22.01% ?
  ஐக்கிய தேசியக் கட்சி 20 0.55% 0
செல்லுபடியான வாக்குகள் 3,658 100.00% 8
செல்லாத வாக்குகள் 340
மொத்த வாக்குகள் 3,998
பதிவில் உள்ள வாக்காளர்கள் 6,349
வாக்களித்தோர் 62.97%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

தொகு

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[7]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,884 51.02% 7 6 7
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,982 35.06% 5 1 5
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 548 9.69% 1 1 1
இலங்கை பொதுசன முன்னணி 142 2.51% 0 0 0
  ஐக்கிய தேசியக் கட்சி 45 0.80% 0 0 0
சோசலிச சமத்துவக் கட்சி 44 0.78% 0 0 0
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 8 0.14% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,653 100.00% 13 8 13
செல்லாத வாக்குகள் 53
பதிவான மொத்த வாக்குகள் 5,706
பதிவில் உள்ள வாக்காளர்கள் 7,279
வாக்களித்தோர் 78.39%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்றாவது தடவையாக ஆட்சி அமைத்தது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. Ward Map of Kayts Pradeshiya Sabha – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 21 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Kayts Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-21.
  7. "Local Authorities Election - 10.02.2018 Jaffna District Chavakachcheri Pradeshiya Sabha" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளை மீண்டும் ஏற்பு". தினக்குரல். 19 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 29-04-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்காவற்றுறை_பிரதேச_சபை&oldid=3791757" இலிருந்து மீள்விக்கப்பட்டது