ஊர்துஜா
ஊர்துஜா (Urduja) ஒரு புகழ்பெற்ற போர்வீராங்கனையான இளவரசி, மொராக்கோவைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பயணி இப்னு பட்டுட்டாவின் பயணக் குறிப்புகளில் (1304 - கி.பி 1368 அல்லது கி.பி 1377) பதிவு செய்யப்பட்டிருந்தன. தவாலிசி என்ற இடத்தில் காய்லுகாரியின் இளவரசியாக குறிப்பிடப்பட்டிருந்தாள். இந்த இளவரசியின் வசிப்பிடம் தாவலிசி மற்றும் காய்லுகாரி என்ற இடங்கள் சர்ச்சைக்குரியதாக இருப்பினும், பிலிப்பைன்சில் ஊர்துஜா பன்காசினன் என்ற பகுதியிலிருந்து வந்தவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இவர் ஒரு தேசிய கதாநாயகியாகக் கருதப்பட்டவர் ஆவார்.
இப்னு பதூதா
தொகுஇப்னு பதூதா ஊர்துஜாவை தாவாலிசி நிலப்பரப்பின் காய்லுகாரியின் ஆட்சியாளராகக் குறிப்பிடுகிறார். இப்னு பதூதா சமுத்ர பாசை சுல்தானிய ஆட்சிப் பரப்பை அடைந்த பிறகு, (இப்போதுள்ள சுமத்ரா, இந்தோனேஷியா) இபின் பதூதா சீனாவிற்குச் செல்லும் தனது வழியில் இவர் இளவரசி ஊர்துஜாவை சந்தித்ததுள்ளார். இளவரசி உருதுஜா தவாலிசி என்றும் அழைக்கப்படும் ஒரு நிலத்தைச் சேர்ந்த தவாலிசி என்ற ஆட்சியாளரின் மகள் என்று வர்ணிக்கப்பட்டார். தவாலிசியின் ஆட்சியாளர், இப்னு பட்டுட்டாவின் கூற்றுப்படி, பல கப்பல்களைக் கொண்டிருந்தார் மற்றும் சீனாவின் போட்டியாளராக இருந்தார், இந்தப் பகுதி பின்னர் மங்கோலிய வம்சத்தால் ஆளப்பட்டது.[1] தவாலிசி நிலத்திலிருந்து சீனாவை அடைய இப்னு பதூதா17 நாட்கள் பயணம் செய்தார். [2]
இப்னு பதூதா, மெக்கா மற்றும் இசுலாமிய உலகின் பல பாகங்களிலும் பயணத்தினை மேற்கொண்டவர் ஆவார். இந்தியா மற்றும் சுமத்ராவிலிருந்து, இப்னு பதூதா தவாலிசி நிலத்தை அடைந்தார். ஊர்துஜாவை ஒரு போர்வீராங்கனையாகவும் மற்றும் இளவரசியாகவும் இப்னு பதூதா வர்ணித்தார், ஊர்துஜாவின் இராணுவம் ஆண்களையும் பெண்களையும் கொண்டது. ஊர்துஜா ஒரு பெண் வீராங்கனை. அவர் தனிப்பட்ட முறையிலும், பிற வீரர்களுடன் இணைந்து இரட்டை வீரர்களாகவும் சண்டையில் பங்கேற்றார். சண்டையில் தன்னைத் தோற்கடித்தவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் மேற்கோள் காட்டினார். மற்ற வீரர்கள் அவமானப்படுவார்கள் என்ற பயத்தில் அவளுடன் போராடுவதைத் தவிர்த்தனர். [3]
ஊர்துஜா தனது இராணுவத் திறத்தாலும் "மிளகு நாடு" என்று அழைக்கப்படும் இந்தியாவுக்கு ஒரு பயணத்தை வழிநடத்துவதற்கான அவரது இலட்சியத்தினாலும் இப்னு பதூதாவைக் கவர்ந்தார். இப்னு பதூதா மற்றும் அவரது கப்பலில் பயணம் செய்த குழுவினருக்கு விருந்து தயாரிப்பதன் மூலம் அவர் தனது விருந்தோம்பலைக் காட்டினார். ஊர்துஜா இப்னு பதூதாவிற்கு தாராளமாகப் பரிசுகளை வழங்கினார். அதில் அங்கிகள், அரிசி, இரண்டு எருமைகள், மற்றும் நான்கு பெரிய ஜாடிகளில் உப்பு சேர்க்கப்பட்ட இஞ்சி, மிளகு, எலுமிச்சை, மற்றும் மாம்பழங்கள் சீனாவிற்கு இப்னு பட்டுட்டாவின் கடல் பயணத்திற்கான தயாரிப்பிற்காக உள்ளடக்கப்பட்டன.[4]
தோற்றம்
தொகுஊர்துஜா பெரும்பாலும் தங்கமயமான வெண்கல நிறத்தை உடையவளாகவும், நேரான, பளபளப்பான, நறுமணமுள்ள, அடர் கருமையான முடி மற்றும் ஆழமான, அடர் நிறக் கண்கள் கொண்ட உயரமான மற்றும் அழகான பெண்மணி என்று வர்ணிக்கப்படுகிறார். தங்கத்தில் உறைந்தவர் மற்றும் வாள் சண்டை மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் திறமையானவர் எனவும் குறிப்பிடப்படுகிறார். பெண் வீராங்கனைகளின் தலைவர் ஆவார். அவர் ஒரு தைரியமான, புத்திசாலி மற்றும் கனிவான பெண்மணி. காலனித்துவத்திற்கு முந்தைய தென்கிழக்கு ஆசியாவில் பிரபுக்களின் பொதுவான பண்பாக இருந்த பல மொழி பேசும் திறமையாளராகவும் அவர் நம்பப்படுகிறார்.
ஆராய்ச்சி
தொகுதாவாலிசி என்ற இடம் எங்கிருந்தது என்பது தொடர்பான யூகமானது ஒரு நீண்ட பட்டியலைக் கொண்டது. யூகத்தின் அடிப்படையிலான அந்த இடங்கள் பன்காசினன், லுசான், சூலு, சுலவேசி, ஜாவா, கம்போடியா, [5] சீனாவில் உள்ள கொச்சின், சீன முதன்மை நிலப்பகுதியில் குவாங்டாங் மாகாணம், தெற்காசியாவில் "டா" வில் தொடங்கும் ஒவ்வொரு தீவும் என்பவை ஆகும்.
பிலிப்பைன்ஸ் கோட்பாடு
தொகுதவாலிசியில் இருந்து சீனாவிற்கு இப்னு பதூதா பயணம் செய்ய எடுத்துக் கொண்ட ன பயண நேரம் மற்றும் தூரத்தை அவர் கணக்கிட்டதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிலிப்பைன்ஸின் தேசிய வீராங்கனை ஜோஸ் ரிசால், தவாலிசியின் நிலம் பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் இருப்பதாக ஊகித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ibn Battuta, The Travels of Ibn Baṭṭūṭa, A.D. 1325–1354, vol. 4, trans. H. A. R. Gibb and C. F. Beckingham (London: Hakluyt Society, 1994), pp. 884–5.
- ↑ Ibn Battuta, p. 888.
- ↑ Ibn Battuta, p. 887.
- ↑ Ibn Battuta, pp. 886–7.
- ↑ Yule, Henry (1866). Cathay and the Way Thither. London. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4094-2166-5.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)