எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம் (Twenty-ninth Dynasty of Egypt or Dynasty XXIX, alternatively 29th Dynasty or Dynasty 29) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காவது வம்சம் ஆகும். இது எகிப்திய மக்களின் வம்சமாகும். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் உள்ள மென்டிஸ் நகரம் ஆகும். இவர்கள் கிமு 398 முதல் கிமு 380 முடிய 18 ஆண்டுகளே கீழ் எகிப்தை மட்டும் ஆண்டனர்.

பிந்தைய கால எகிப்திய இராச்சியம்
29-வது வம்சம்
[[எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்|]]
கிமு 398–கிமு 380 [[எகிப்தின் முப்பதாம் வம்சம்|]]
தலைநகரம் மென்டிஸ்
மொழி(கள்) எகிப்திய மொழி
சமயம் பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் பாரம்பரியக் காலம்
 -  உருவாக்கம் கிமு 398
 -  குலைவு கிமு 380
Warning: Value not specified for "continent"

வரலாறுதொகு

கிமு 398-இல் இருபத்தி எட்டாம் வம்சத்தவர்களை வென்ற 28-ஆம் வம்ச பார்வோன் முதலாம் நெபாருத் என்பவர் இந்த 29-ஆம் வம்ச ஆட்சியை நிறுவினார். நெபாருத்தின் இறப்பிற்குப் பின்னர் அரியணைப் போட்டி நிலவியது. இருப்பினும் ஹாக்கோர் எனும் பார்வோன் அரியணை ஏறினார்.

29-வம்ச பார்வோன்கள்தொகு

பார்வோன் பெயர் உருவம் ஆட்சிக் காலம் குறிப்புகள்
முதலாம் நெபாருத்   கிமு 398–393 இவரை அமியுர்தியுஸ் என்பர் போட்டியில் கொன்றார்
சாமுத்தியுஸ்   கிமு 393 ஹாக்கோர் என்பவர் இவரை அரியணையிலிருந்து இறக்கினார்.
ஹாக்கோர்   கிமு 393–380 சாமுத்தியுஸ் என்பவர் இவரை அரியனையிலிருந்து விரட்டினார்.
இரண்டாம் நெபாருத் கிமு 380 இவரை முதலாம் நெக்டோதனேப் என்பவர் கொன்று 4 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார்.

பண்டைய எகிப்திய வம்சங்கள்தொகு

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசைதொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  • Clarysse, Willy (1974), "Nephorites, Founder of the 29th Dynasty and His Name", Chronique d'Égypte: Bulletin Périodique de la Fondation égyptologique Reine Élisabeth, 69: 215–217.
  • Lloyd, Alan Brian (2000), "The Late Period (664–332 BC)", in Shaw, Ian (ed.), The Oxford History of Ancient Egypt, Oxford and New York: Oxford University Press, pp. 369–394, ISBN 0-8109-1020-9.
  • Myśliwiec, Karol (2000), The Twilight of Ancient Egypt: First Millennium B.C.E, Ithaca and London: Cornell University Press, ISBN 0-8014-8630-0. Translated by David Lorton.
  • Ray, John D. (1986), "Psammuthis and Hakoris", Journal of Egyptian Archaeology, Egypt Exploration Society, 72: 149–158, doi:10.2307/3821486, JSTOR 3821486.
  • Traunecker, Claude (1979), "Essai sur l'histoire de la XXIXe dynastie" (PDF), Bulletin de l'Institut français d'archéologie orientale, 79: 395–436, 2016-04-23 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.