எகிப்திய எலிவால் வௌவால்

எகிப்திய எலிவால் வௌவால்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரைனோபோமா
இனம்:
ரை. சிசுடாப்சு
இருசொற் பெயரீடு
ரைனோபோமா சிசுடாப்சு
தாமசு, 1903
வேறு பெயர்கள்
  • ரைனோபோமா கார்டுவிக்கி சிசுடோப்சில் தாமசு, 1903

எகிப்திய எலிவால் வௌவால் (Egyptian mouse-tailed bat-ரைனோபோமா சிசுடாப்சு) என்பது வட ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் காணப்படும் எலிவால் வெளவால் பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினமாகும்.

வகைபிரித்தல்

தொகு

1903ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஓல்டுபீல்டு தாமசு என்பவரால் இது ஒரு புதிய சிற்றினம் என்று விவரிக்கப்பட்டது. இந்த முழுமையான வடிவம் எகிப்தின் லக்சோர் அருகே சார்லசு உரோத்ஸ்சைல்ட் என்பவரால் சேகரிக்கப்பட்டது.[2] இது நீண்ட காலமாகச் சின்ன எலிவால் வௌவாலின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2007ஆம் ஆண்டில், கூல்வா மற்றும் பலர் இதை ஒரு முழு சிற்றினமாகக் கருத வேண்டும் என்று கருத்து வெளியிட்டனர்.[3]

பற்கள்

தொகு

எகிப்திய எலிவால் வௌவால் மொத்தம் 28 பற்களை   என்ற பல் சூத்திரத்தின் அடிப்படையில் கொண்டுள்ளது.[4]

உயிரியல் மற்றும் சூழலியல்

தொகு

எகிப்திய எலிவால் வௌவால் ஒரு காலனித்துவ சிற்றினமாகும். இது ஒரு சில தனிநபர்களுடனோ அல்லது ஆயிரம் வெளவாளுகளுடனோ ஒரு கூட்டமைப்பினை உருவாகின்றது.[1] இது குகைகள் மற்றும் மனித கட்டமைப்புகள் இரண்டையும் தான் வாழும் கூடாரங்களாகப் பயன்படுத்துகிறது.[5]

வாழிடம்

தொகு

எகிப்திய எலிவால் வௌவால் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வாழ்கின்றன. இந்த நாடுகள் அல்சீரியா, புர்க்கினா பாசோ, கேமரூன், ஜிபூத்தி, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, இஸ்ரேல், ஜோர்தான், லிபியா, மாலி, மொரிட்டானியா, மொரோக்கோ, நைஜர், நைஜீரியா, ஓமான், சவூதி அரேபியா, செனிகல், சோமாலியா, தெற்கு சூடான், சூடான் முதலியன. இது கடல் மட்டத்திலிருந்து 1,100 மீ (3,600 ) உயரத்தில் உள்ள இடங்களில் காணப்படுவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[1]

பாதுகாப்பு

தொகு

2017ஆம் ஆண்டு நிலவரப்படி, இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் இதனை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பரந்த புவியியல் வரம்பைக் கொண்டுள்ளது. இதன் இருப்புக்குப் பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் அறியப்படவில்லை.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Benda, P. (2017). "Rhinopoma cystops". IUCN Red List of Threatened Species 2017: e.T82345555A82345569. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T82345555A82345569.en. https://www.iucnredlist.org/species/82345555/82345569. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Thomas, O. (1903). "LXXII.—On the species of the genus Rhinopoma". The Annals and Magazine of Natural History; Zoology, Botany, and Geology. 7 11: 496–497. https://biodiversitylibrary.org/page/19368047. 
  3. Hulva, Pavel; Horáček, Ivan; Benda, Petr (2007-09-14). "Molecules, morphometrics and new fossils provide an integrated view of the evolutionary history of Rhinopomatidae (Mammalia: Chiroptera)". BMC Evolutionary Biology 7 (1): 165. doi:10.1186/1471-2148-7-165. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2148. பப்மெட்:17868440. 
  4. Hill, J. E. (1977). "A review of the Rhinopomatidae (Mammalia: Chiroptera)". Bulletin of the British Museum (Natural History) 32 (2): 29–43. doi:10.5962/p.219574. https://biodiversitylibrary.org/page/26495651. 
  5. Carpenter, Jill; Hegyeli, Zsolt; Bugariu, Sebastian; Moldován, István (2014). "First confirmed records of Lesser Mouse-tailed Bat,Rhinopoma cystops Thomas, 1903, for Sinai, Egypt (Mammalia: Chiroptera)". Zoology in the Middle East 60 (2): 180–182. doi:10.1080/09397140.2014.914750. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்திய_எலிவால்_வௌவால்&oldid=3984809" இலிருந்து மீள்விக்கப்பட்டது