எலிவால் வௌவால்

எலிவால் வௌவால்
The image is a drawing of a bat
பெரும் எலிவால் வெளவால், ரை. மைக்ரோபில்லம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோபோமேட்டிடே
பேரினம்:
ரைனோபோமா

ஜியோப்ராய், 1818[1]
மாதிரி இனம்
ரை. மைக்ரோபில்லம்
புரூனீச், 1782
சிற்றினம்

உரையினை காண்க

எலிவால் வௌவால் (Mouse-tailed bat) என்பது ரைனோபோமாடிடே குடும்பத்தின் பூச்சியுண்ணி வௌவால் குழுவாகும். இவை அனைத்தும் ஒற்றை வகை உயிரலகான ரைனோபோமா பேரினத்தின் கீழ் உள்ளன.[2] இவை பழைய உலகில், வட ஆப்பிரிக்காவிலிருந்து தாய்லாந்து மற்றும் சுமாத்திரா வரையிலும், வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளிலும், குகைகள், வீடுகள் மற்றும் எகிப்தியப் பிரமிடுகளில் கூட வாழ்கின்றன. இவை ஒப்பீட்டளவில் சிறியவை. இவற்றின் உடல் நீளம் 5 முதல் 6 செ. மீ. வரை இருக்கும்.[3] இவற்றின் எடை 6 முதல் 14 கிராம் வரை இருக்கும்.

பண்புகள்

தொகு

ரைனோபோமாடிடே என்பது மிகவும் மெலிதான கால்கள் மற்றும் நீண்ட, மெல்லிய, முடி இல்லாத வால் கொண்ட சிறிய வௌவால்கள் ஆகும். இது உடலின் மற்ற பகுதியின் நீளம் கொண்டது. இதனுடன் தோற்செட்டை இணைக்கப்படவில்லை. இவற்றின் தோல் மணல் நிறத்தில் மென்மையாகக் காணப்படும். மூக்கு வழியடைப்புச் சார்ந்த நாசியுடன் சிறிய மற்றும் எளிமையான மூக்கு இலையுடன் உள்ளது. இவற்றின் பெரிய காதுகள் நன்கு வளர்ந்தவை. நன்கு வளர்ந்த காது முன் குருத்தெலும்புடன் பெரிய கண்களுடனும் நெற்றி முழுவதும் பட்டைத் தோலுடன் முன் தலையில் இணைக்கப்பட்டுள்ளது.[4] காடால் ஊசல் மற்றும் பின்னங்கால்களுக்கு அருகில் ஒரு கொழுப்பு திட்டு உள்ளது. அனைத்து வௌவால்களை ஒப்பிடும்போது, ரைனோபோமாடிடேகளின் முன்கை நீளத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறுகிய விரல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் தலை-உடல் நீளம் 50 முதல் 90 மி.மீ. வரை இருக்கும். முன்கை நீளம் 45 முதல் 75 மி. மீ. வரையிலும் வால் நீளம் 40 முதல் 80 மி. மீ. வரையிலும் உடல் எடை 6 முதல் 14 கிராம் வரையிலும் இருக்கும்.

வாழ்வு முறை

தொகு

ரைனோபோமாடிடே வௌவால்கள் பாலைவனங்கள் மற்றும் பகுதி வறண்ட காலநிலையுடைய வட ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில், மொரோக்கோ மற்றும் செனிகல் முதல் தெற்கு சூடான், மத்தியக் கிழக்கு மற்றும் இந்தியாவிலிருந்து மியான்மர், தாய்லாந்து, மற்றும் வடக்கு-சுமாத்திர வரையில் காணப்படுகிறது. இவை விவசாயப் பகுதிகள் மற்றும் தொந்தரவு செய்யப்பட்ட பகுதிகளுக்கும் வருகின்றன. இவை குறைந்த ஈரப்பதம் உயர் வெப்பநிலை உள்ளப் பகுதிகளில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்றுள்ளன. இவை பாறை பிளவுகள், பாறை சுவர்கள், வீடுகள், கல்லறைகள் (உட்பட எகிப்தியப் பிரமிடுகள், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக), சுரங்கங்கள் மற்றும் குகைகளைத் தங்குமிடங்களாகக் கொண்டுள்ளன. தெற்காசியாவின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த விலங்குகள் குளிர்காலத்தில் வலசைச் செல்கின்றன. இங்கு இவை செயலற்ற நிலையில் காணப்படும் உண்மையிலேயே இவை அறிதுயில் மேற்கொள்வதில்லை. உணவுப் பற்றாக்குறை காலத்திலும் மிகவும் வறண்ட காலங்களிலும் இவை வேனில் உறக்கம் மேற்கொண்டு தம்முடைய கொழுப்புச் சேமிப்பினைப் பயன்படுத்தும்.

ரைனோபொமாடிடே ஆயிரக்கணக்கான வௌவால்களுடன் ஒரு கூட்டமைப்பாக வாழ்கிறது. இங்கு இவை சிறிய, சிதறிய குழுக்களாகக் கூடிவருகின்றன. கலப்பு குழுக்கள் பொதுவானவை, ஆனால் ஆண் வௌவால்கள் அல்லது பெண் வௌவால்கள் மட்டுமே கொண்ட குழுக்களும் ஏற்படுகின்றன. இவை ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு வாழ்கின்றன. மேலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரு முறை இனப்பெருக்கம் மேற்கொண்டு இளம் வயதினரைக் கூட்டமைப்பில் கொண்டுள்ளன.[4] இவற்றின் மோசமான பறக்கும் நிலை காரணமாக, வேகமாகப் பறக்கும் வௌவால்கள் விரைவாகச் சோர்வடைகின்றன. இவற்றால் தரையில் விரைவாக ஓடவும் முடியும். ஐந்து முதல் பத்து மீட்டர் உயரத்தில் பறக்கும் வண்டுகள் உள்ளிட்ட சிறிய பூச்சிகளை இவை வேட்டையாடுகின்றன.

வகைப்பாடு

தொகு

இந்தக் குடும்பம் பம்பிள்பீ வௌவால்களுடன் நெருங்கிய தொடர்புடையது. இது பெரும் குடும்பமான ரைனோபோமாடைடியாவில் உள்ள ரைனோபோமாடிடேயை நிறைவு செய்கிறது. இவை குதிரை லாட வௌவால்கள், பழைய உலக இலை-மூக்கு வௌவால்கள் மற்றும் இன்ப்டெரோகைரோப்டெராவின் துணைப்பிரிவின் மற்ற உறுப்பினர்களான பிளிகோடசு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை. வட ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவின் வறண்ட பகுதிகளில் நான்கு சிற்றினங்கள் காணப்படுகின்றன. அறியப்பட்ட புதைபடிவங்கள் எதுவும் இல்லை.

 
எலிவால் வெளவால்

ரைனோபொமாடிடே குடும்பம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Benda, Petr; Reiter, Antonín; Al-Jumaily, Masaa; Nasher, Abdul Karim; Hulva, Pavel (2009). "A new species of mouse-tailed bat (Chiroptera: Rhinopomatidae: Rhinopoma) from Yemen". Journal of the National Museum (Prague), Natural History Series 177 (6): 53–68. http://www.nm.cz/download/pm/zoo/benda_lit/Benda2009jnmpnhs.pdf. பார்த்த நாள்: 3 June 2013. 
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
  3. Macdonald, D., ed. (1984). The Encyclopedia of Mammals. New York: Facts on File. p. 800. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87196-871-1.
  4. 4.0 4.1 Fenton, M. Brock (2001). Bats. New York: Checkmark Books. pp. 122–124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4358-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிவால்_வௌவால்&oldid=3981968" இலிருந்து மீள்விக்கப்பட்டது