எகிப்திய சூரியக் கோயில்கள்

(எகிப்திய சூரியக் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


எகிப்திய சூரியக் கோயில்கள் (Egyptian sun temples) பண்டைய எகிப்தின் வளமையைக் குறிக்கும் இரா எனும் சூரியக் கடவுளுக்கு, கிமு 25-ஆம் நூற்றாண்டில் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் நியூசெர்ரே இனி, யுசர்காப், சகுரா உள்ளிட்ட மன்னர்கள் மெம்பிசு, அபுசிர், கர்னாக் போன்ற நகரங்களில் சூரியக் கோயில்களை எழுப்பினர்.[1] பின்னர் புதிய எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் பார்வோன் அக்கெனதென் என்பவர் அதின் எனும் சூரியக் கடவுளுக்கு கர்னாக், தீபை ஆகிய நகரங்களில் சூரியக் கோயில்களை எழுப்பினார்.[2]

அபுசிர் நகரத்தில் மன்னர் நையுசெர்ரே இனி எழப்பிய இரா எனும் சூரியக் கடவுள் கோயில், ஆண்டு கிமு 25-ஆம் நூற்றாண்டு
பார்வோன் அக்கெனதென் (நடுவில்) மற்றும் தன் குடும்பத்தினருடன் அதின் எனும் சூரியக் கதிர் கடவுளை வழிபடுதல்
பார்வோன் அக்கெனதென், இராணி நெஃபர்டீட்டீ ஆகியோர் சூரியக் கதிர் கடவுள் அதின்னை வழிபடுதல்

மேற்கோள்கள்

தொகு
  1. Haase, Michael (January 1999). "Abu Gurob (Ägypten) (German)". Antike Welt 30: 306–307. 
  2. Remler, Pat (2010). Egyptian Mythology, A to Z (in ஆங்கிலம்). Infobase Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438131801.