எங்கிட்ட மோதாதே
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எங்கிட்ட மோதாதே ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ராஜேஷ்வரி சுந்தர்ராஜன் தயாரிப்பில் 1990ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். விஜயகாந்த், ஷோபனா, சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2] இப்படத்தின் தலைப்பு ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய முந்தைய படமான ராஜாதி ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டது.
எங்கிட்ட மோதாதே | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | ராஜேஷ்வரி சுந்தர்ராஜன் |
கதை | பஞ்சு அருணாசலம் |
திரைக்கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ஷோபனா சரத்குமார் குஷ்பூ |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | கே.ஆர்.ராமலிங்கம் |
கலையகம் | ராஜேஷ்வரி புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | ராஜேஷ்வரி புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 14, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- பாண்டியனாக விஜயகாந்த்
- ஷோபனா
- சரத் குமார்
- சரோஜாவாக குஷ்பூ
- ராதா ரவி
- நிழல்கள் ரவி
- சரோஜாவின் அம்மாவாக வடிவுக்கரசி
- பாண்டியனின் அம்மாவாக மனோரமா
- தியாகு
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ராஜா சிறப்பு தோற்றம்
- இடிச்சபுளி செல்வராசு
- குள்ளமணி
பாடல்கள்
தொகுஇளையராஜா இசையமைக்க பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுதியிருந்தனர்.[3] இப்படத்தில் இடம் பெற்ற சரியோ சரியோ" பாடல் மலையாளத் திரைப்படமான அதர்வம் படத்தில் வரும் "புகழோரத்தில்" பாடலின் மறுபதிப்பாகும்.
எண். | பாடல்கள் | பாடியவர்(கள்) | எழுதியவர் | நீளம் (m:ss) |
1 | அஞ்சு பைசா பத்து பைசா | மலேசியா வாசுதேவன் | வாலி | 04.34 |
2 | ஹேய் மாமா | எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 04.24 |
3 | இவன் வீரன் சூரன் | எஸ். ஜானகி | வாலி | 04.35 |
4 | ஒன்னோடு ரெண்டுன்னு | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | 04.35 |
5 | சரியோ சரியோ நான் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | 04.38 |
6 | கை வீசம்மா கை வீசு | சித்ரா | வாலி | 01.04 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "En Kitta Modhadhey". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
- ↑ "En Kitta Modhadhey". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
- ↑ "Engitta Modhathe Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-25.