எச்டி 149026 பி
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
தாய் விண்மீன் | ||
விண்மீன் | எச்டி 149026 | |
விண்மீன் தொகுதி | ஹெர்குலஸ் | |
வலது ஏறுகை | (α) | 16h 30m 29.619s |
சாய்வு | (δ) | +38° 20′ 50.31″ |
தொலைவு | 257 ஒஆ (78.9 ± 6.6 புடைநொடி) | |
அலைமாலை வகை | G0IV | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.042 AU |
மையப்பிறழ்ச்சி | (e) | 0 |
சுற்றுக்காலம் | (P) | 2.8758882 ± 0.0000061 நா |
Time of periastron | (T0) | 2,453,530.751 JD |
Semi-வீச்சு | (K) | 43.2 ± 2.6 மீ/செ |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
திணிவு | (m) | 0.36 ± 0.03 MJ |
ஆரை | (r) | 0.725 ± 0.03 RJ |
அடர்த்தி | (ρ) | 1252 கிகி/மீ3 |
வெப்பநிலை | (T) | 2300 ± 200 கெ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | 2005 ஜூலை 1 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | B. Sato, D. Fischer, G. Henry et al.[1] | |
கண்டுபிடித்த முறை | ஆர திசைவேகம் | |
கண்டுபிடித்த இடம் | டபிள்யூ எம் கெக் அவதான ஆராய்ச்சி மையம் | |
கண்டுபிடிப்பு நிலை | உறுதிசெய்யப்பட்டது. | |
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
எச்டி 149026 பி(HD 149026 b) என்பது ஒரு புறக்கோள் ஆகும்.இது தோரயமாக 257 ஒளியாண்டுகள் தூரத்தில் ஹெர்குலஸ் என்ற விண்மீன் குழாமத்தில் உள்ளது.
சுற்றுப் பாதை
தொகுஎச்டி 149026 பி வட்ட வடிவ சுற்றுப் பாதையை உடையது(இதில் ஒரு நிலையான விலகல்கள் கானப்படுகிறது).இது எச்டி 149026 என்ற விண்மீனை சுற்றி வருகிறது.
தோற்றத்தின் பண்புகள்
தொகுஎச்டி 149026 பி தனது விண்மீனை சுற்றி வர மூன்று புவி நாள்களுக்கு கொஞ்சம் குறைவாக எடுத்துக் கொள்கிறது.இதன் திணிவு அல்லது நிறை வியாழனை (கோள்) விட குறைவுவாகவும்(0.36 மடங்கு வியாழனின் நிறையையும் அல்லது 114 மடங்கு புவியின் நிறையையும் உடையது) ஆனால் சனியை (கோள்) விட அதிக நிறையை உடையதும் ஆகும். ஆரம்பத்தில் இதன் வெப்பநிலை 0.3 பாண்ட் அல்பீடோவின்(எதிரொளிதிறன்) மூலம் 1540 கெல்வின் என மதிப்பிட்டனர் [1] இது எச்டி 209458 பியை (1400K) விட அதிகம்.எனவே இதை நரகம் என அழைக்கத் தொடங்கினார்கள். [2]
இந்த எச்டி 149026 பி அதன் விண்மீனான எச்டி 149026 யை கடந்து செல்லும் போது இந்த கோள் மற்றும் அதன் விண்மீனிலிருந்து கூட்டாக வரும் ஒளியின் அலைநீளம் 8 μm அதைக்கொண்டு இதன் வெப்பநிலை 2,300 ± 200 கெல்வின் என மதிப்பிட்டனர். இது கிட்டத்தட்ட சிலிக்கானின் கொதிநிலை ஆகும். மற்றும் இரும்பின் உருகு நிலைக்கு மிகவும் அதிகம்.
இந்த கோளின் அல்பீடோ(எதிரொளிதிறன்) நேரடியாக அளவிடப்படவில்லை , இந்த கோள் எச்டி 209458 பியை போல் தன்மேல் விழும் அனைத்து நட்சத்திரத்தின் ஒளியையும் கிரகித்துக் கொள்வதால் இது இந்த அளவு வெப்பநிலையில் உள்ளது என கணித்துள்ளனர். [3]இதில் பெரும்பான்மையான கிரகித்துக் கொள்ளும் வெப்பம் வளி மண்டலத்தின் மேல்பகுதியில் இருக்கும்.
இதன் வெளிப் பகுதி இருட்டாகவும் , ஒளி ஊடுருவமுடியாமலும் , வெப்ப மேகங்களை உடையதாகவும் உள்ளது.இதனால் இதில் வனேடியம் மற்றும் தைட்டானியம் ஆக்சைடுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது.
கோள்-வின்மீன் இவற்றின் விகிதம் 0.05158 +/- 0.00077.[4]
இது மற்ற கோள்களுக்கு விதிவிலக்காக ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் போன்ற கனமான தனிமங்களால் ஆன பெரிய கருவத்தைக்(Core) கொண்டுள்ளது :[1]இதன் முதல் தத்துவார்த்த மாதிரிகளின் படி இது புவியின் நிறையை விட 70 மடங்கு அதிக நிறை உடையது எனவும் பிறகு செம்மைப்படுத்தப்பட்ட மாதிரிகளின் மூலம் இது 80 முதல் 110 மடங்கு நிறை உடையது என கணக்கிட்டுள்ளார்கள். [5] இதன் விளைவாக இதை சிறப்பு-நெப்டியூன் என வரையறுத்தார்கள். ராபர்ட் நேவின் ஸ்கை மற்றும் டேலேச்கோப் மூலம் இதில் ஹைட்ரஜன் மற்றும் ஈலியமை விட கனமான தனிமங்களால் ஆன பெரிய கருவத்தைக் கொண்டுள்ளது என வாதிடுகிறார். [6]
இந்த கோளின் ஈர்ப்பு விசை புவியின் ஈர்ப்பு விசையை விட அதிகம்(10 மடங்கு) என ராபர்ட் நே அவர்களால் யூகிக்கப்படுகிறது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sato, Bun'ei et al. (2005). "The N2K Consortium. II. A Transiting Hot Saturn around HD 149026 with a Large Dense Core". The Astrophysical Journal 633 (1): 465–473. doi:10.1086/449306. Bibcode: 2005ApJ...633..465S. http://iopscience.iop.org/0004-637X/633/1/465/fulltext/.
- ↑ Hell planet gets solar hammering
- ↑ Spaceflight Now | Breaking News | Exotic extrasolar planet is the hottest yet discovered
- ↑ Nutzman, Philip et al. (2008). "A Precise Estimate of the Radius of HD 149026b". Proceedings of the International Astronomical Union 4: 466. doi:10.1017/S1743921308026951.
- ↑ Burrows et al.; Laughlin, Gregory; Henry, Gregory W.; Fischer, Debra A.; Marcy, Geoff; Butler, Paul; Vogt, Steve (2007). "Possible Solutions to the Radius Anomalies of Transiting Giant Planets". The Astrophysical Journal 667 (1): 549–556. doi:10.1086/503354. Bibcode: 2007ApJ...667..549W. http://www.iop.org/EJ/article/0004-637X/661/1/502/71134.html.
- ↑ 6.0 6.1 One Big Ball of Rock பரணிடப்பட்டது 2008-09-04 at the வந்தவழி இயந்திரம் Robert Naeye, Sky & Telescope, last accessed October 13, 2007