எச். டி. குமாரசாமி
அர்தெனஃகல்லி தேவ கவுடா குமாரசாமி (Hardanahalli Deve Gowda Kumaraswamy, கன்னடம்: ಹೆಚ್.ಡಿ. ಕುಮಾರಸ್ವಾಮಿ) (பிறப்பு திசம்பர் 16, 1959) ஓர் இந்திய அரசியல்வாதியும், கருநாடகத்தின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார். இவர் முதலமைச்சராக பெப்ரவரி 4, 2006 முதல் அக்டோபர் 9, 2007 வரை இருந்தவர். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கவுடாவின் மூன்றாவது மகனாவார். கர்நாடக மாநில ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கன்னட திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக உள்ளார். திரைப்பட வினியோகத் துறையிலும் ஈடுபட்டுள்ள இவர் திரையரங்கு உரிமையாளராகவும் உள்ளார்.
எச். டி. குமாரசாமி | |
---|---|
2006இல் குமாரசாமி | |
18வது கர்நாடகாவின் முதலமைச்சர் | |
பதவியில் 23 மே 2018 – 23 ஜூலை 2019 | |
ஆளுநர் | வாஜ்பாய் வாலா |
முன்னையவர் | பி. எஸ். எடியூரப்பா |
தொகுதி | சானபட்னா |
பதவியில் 03 பெப்ரவரி 2006 – 09 அக்டோபர் 2007 | |
முன்னையவர் | தரம்சிங் |
பின்னவர் | பி. எஸ். எதியூரப்பா |
தொகுதி | ராமநகரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 திசம்பர் 1959 ஹர்தெனஹல்லி, ஹொலெநரசிப்புரா வட்டம், ஹாசன் மாவட்டம், கருநாடகம் |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
துணைவர்(கள்) | அனிதா குமாரசாமி ராதிகா குமாரசாமி |
பிள்ளைகள் | நிகில் குமார் (நடிகர்) & 1 மகள்[1] |
வாழிடம் | பெங்களூரு |
இணையத்தளம் | www.hdkumaraswamy.co.in |
As of பெப்ரவரி 3, 2006 மூலம்: [1] |
அரசியல் வாழ்க்கை
தொகு1996ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்த குமாரசாமி, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 11வது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானர். ஒன்பது முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ள குமாரசாமி, ஆறு முறை வெற்றி பெற்றிருக்கிறார். 2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், சென்னபட்டினா, ராம்நகர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு, இரு இடங்களிலும் வெற்றிபெற்றார்.
வகித்த பதவிகள்
தொகு- 1996: பதினோராவது மக்களவை உறுப்பினர்
- 2004–08: உறுப்பினர், கர்நாடாக சட்டமன்ற உறுப்பினர்.
- பிப்ரவரி 2006 - அக்டோபர் 2007: கர்நாடகா முதலமைச்சர்
- 2009: பதினைந்தாவது மக்களவை உறுப்பினர் (இரண்டாம் முறை)
- 31 மே 2013:கர்நாடாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018
தொகு2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இவருதைய கட்சியான ஜனதா தளம் எந்தக் கட்சியுடன் கூட்டணியில்லாமல் தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் காங்கிரசு 78 இடங்களும், பாஜக 104 இடங்களும் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 38 இடங்கள் மட்டுமே கிடைத்து மூன்றாவது கட்சியாக வந்தது.
பின்னர் காங்கிரசு தலைவரான ராகுல் காந்தி மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு எந்தவித நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாகவும், குமாரசாமி முதல்வராக பதவியேற்க கூறினார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா மே 17, 2018 அன்று முதல்வராக பதவியேற்றார். பின்னர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி மே 20, 2018 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் எடியூரப்பா தனது பதவியை சட்டசபையில் ராஜினாமா செய்தார்.[2]
இதைத் தொடர்ந்து ஆளுநர் வாஜ்பாய் வாலா, பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சி அமைக்குமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இதனால் மே 21, 2018 அன்று குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார்.[3][4]
தேவகவுடா குடும்பம்
தொகு- தேவ கௌடா - சென்னம்மா (தம்பதியர்)
- எச். டி. ரேவண்ணா (மூத்த மகன்)
- எச். டி. குமாரசாமி (இளைய மகன்)
- அனிதா குமாரசாமி (குமாரசாமியின் மூத்த மனைவி)
- ராதிகா குமாரசாமி (குமாரசாமியின் இளைய மனைவி)
- நடிகர் நிகில் குமார் (குமாரசாமியின் மகன்)
- பிரஜ்வல் ரேவண்ணா (எச்.டி. ரேவண்ணாவின் மகன்)
மேற்கோள்கள்
தொகு- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Im-Mrs-Kumaraswamy-Radhika/articleshow/6960093.cms
- ↑ "56 மணிநேரத்தில் கர்நாடக முதல்வர் நாற்காலியை இழந்த எடியூரப்பா". Archived from the original on 2018-05-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20. லங்காஸ்ரீ செய்திகள் (19 மே 2018)
- ↑ "வரும் 21-ம் தேதி கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு: சோனியா, ராகுல், பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்பு". தி இந்து தமிழ் (20 மே 2018)
- ↑ குமாரசாமியைத் தேடி வந்த அதிர்ஷ்டம்
வெளியிணைப்புகள்
தொகு- I have not betrayed my father: H.D. Kumaraswamy பரணிடப்பட்டது 2006-02-13 at the வந்தவழி இயந்திரம்Accessed: Jan 29, 2006
- Son of soil: IndiaInfo.com பரணிடப்பட்டது 2006-02-13 at the வந்தவழி இயந்திரம்Accessed: Jan 29, 2006
- Kumaraswamy to form the Government in Karanataka[தொடர்பிழந்த இணைப்பு]Accessed: Jan 29, 2006
- Man who could become Karnataka's CM Accessed: Jan 29, 2006
- "Man who could become Karnataka's CM" - ரெடிப்.காம் article dated January 19, 2006
- HDK Watch