எட்டாம் ராமேசஸ்
எட்டாம் ராமேசஸ் (Ramesses VIII)[1] (ஆட்சிக் காலம்:கிமு 1130–1129)[2]), பண்டைய புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் ஏழாவது பார்வோன் ஆவார். இவர் பார்வோன் மூன்றாம் ராமேசின் மகன்களில் மிகவும் இளைவரும், இறுதியானவரும் ஆவார்.[3]இவர் புது எகிப்து இராச்சியத்தை கிமு 1130 முதல் கிமு 1129 முடிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[4]மன்னர்களின் சமவெளியில் இவரது கல்லறை இதுவரை கண்டறியப்படவில்லை. எட்டாம் ராமேசஸ் அரியணை ஏறுவதற்கு முன்னர் அரசிகளின் சமவெளியில் 43 எண் கொண்ட கல்லறை எட்டாம் ராமேசுக்காக கட்டப்பட்டது. இருப்பினும் எட்டாம் ராமேசஸ் இறந்த பிறகு அவருககான கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.[5][6]
எட்டாம் ராமேசஸ் | |
---|---|
மெடிநெத் அபு கோயிலில் எட்டாம் ராமேசசின் சிற்பம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1130 - 1129, எகிப்தின் இருபதாம் வம்சம் |
முன்னவர் | ஏழாம் ராமேசஸ் |
பின்னவர் | ஒன்பதாம் ராமேசஸ் |
தந்தை | மூன்றாம் ராமேசஸ் |
இறப்பு | கிமு 1129 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 2006 paperback, p.167
- ↑ "Chronological Table for the Dynastic Period" in Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill, 2006. p.493
- ↑ Nicolas Grimal, A History of Ancient Egypt, (Blackwell Books: 1992), pp.288-289
- ↑ Grimal, op. cit., p.289
- ↑ "Valley of the Queens". mathstat.slu.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
- ↑ "Valley of the Queens - Tomb 43". ib205.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
வெளி இணைப்புகள்
தொகு- எட்டாம் ராமேசஸ் at Find a Grave