ஒன்பதாம் ராமேசஸ்

20 வது வம்சத்தின் எகிப்திய பாரோ

ஒன்பதாம் ராமேசஸ் (Ramesses IX) (ஆட்சிக் காலம்:கிமு 1129 – கிமு 1111)[1] புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் எட்டாம் பார்வோன் ஆவார். இருபதாம் வம்சத்தவர்களில் பண்டைய எகிப்தை நீண்ட காலம் ஆண்ட மூன்றாம் ராமேசஸ் மற்றும் பதினொன்றாம் ராமேசஸ் ஆகியவர்களுக்கு அடுத்து ஒன்பதாம் ராமேசஸ் 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [2][3]

ஒன்பதாம் ராமேசஸ்
மன்னர்களின் கல்லறை எண் 6-இல் ஒன்பதாம் ராமேசின் ஓவியம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு1129 - கிமு 1111, எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்எட்டாம் ராமேசஸ்
பின்னவர்பத்தாம் ராமேசஸ்
துணைவி(யர்)பகேத்வெரேனேல்
பிள்ளைகள்பத்தாம் ராமேசஸ்?, இளவரசி நெப்மாத்திரி
தந்தைமூன்றாம் ராமேசஸ்
தாய்தகாத்
இறப்புகிமு 1111
அடக்கம்கேவி 6

துரின் மன்னர்கள் பட்டியல் படி, பார்வோன் ஒன்பதாம் ராமேசஸ் பண்டைய எகிப்தை 18 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் ஆட்சி செய்தார் எனக்கூறுகிறது[4][5]

இவர் பார்வோன் மூன்றாம் ராமேசின் மகன் எனக்கருதப்படுகிறார்.[6][7]பாபிரஸ் குற்ப்புகளின் படி, ஒன்பதாம் ராமேசேசின் கல்லறை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறுகிறது. 1881-ஆம் ஆண்டில் ஒன்பதாம் ராமேசேசின் மம்மி தேர் எல் பகாரி தொல்லியல் களத்தில் ஒரு கல் சவப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.[8]

பார்வோன்களின் அணிவகுப்புதொகு

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் ஒன்பதாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [9]

 
கர்னாக் கல்லறைக் கோயிலில் ஒன்பதாம் ராமேசேசின் சிற்பம்
 
ஒன்பதாம் ராமேசேசின் கல்லறையின் உள்தோற்றம்
 
எகிப்திய அருங்காட்சியகத்தில் ஒன்பதாம் ராமேசேசின் சிற்பம்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. R. Krauss & D.A. Warburton "Chronological Table for the Dynastic Period" in Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill, 2006. p.493
  2. J. von Beckerath, Drei Thronbesteigungsdaten der XX. Dynastie, (Three accession dates of the 20th Dynasty), Göttinger Miszellen 79 (1984), pp.7-9 Beckerath's article discusses the accession dates of Ramesses VI, IX and X
  3. Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill: 2006, p.216
  4. E.F. Wente & C.C. Van Siclen, "A Chronology of the New Kingdom" in Studies in Honor of George R. Hughes, (SAOC 39) 1976, pp.235 & 261
  5. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd., 2006 paperback, p.167
  6. Nos ancêtres de l'Antiquité, 1991, Christian Settipani, p.153, 169, 173 & 175
  7. Mummy of Ramesses the Ninth Eternal Egypt
  8. Dennis C. Forbes, Tombs, Treasures and Mummies, KMT Communications Inc. (1998), pp.646-647
  9. Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

மேலும் படிக்கதொகு

  • Cyril Aldred, A statue of king Neferkarē' Ramesses IX, JEA 41 (1955), 3-8
  • Amin A. M. A. Amer, Notes on Ramesses IX in Memphis and Karnak, Göttinger Miszellen 57 (1982), 11-16
  • Jürgen von Beckerath, Drei Thronbesteigungsdaten der XX. Dynastie, Göttinger Miszellen 79 (1984), 7-9
  • Dylan Bickerstaffe, Refugees for eternity - The royal mummies of Thebes - part 4 - Identifying the Royal Mummies, Canopus Press, 2009
  • Jac. J. Janssen, Once Again the Accession Date of Ramesses IX, Göttinger Miszellen 191 (2002), 59-65
  • Gaston Maspero, Les momies royales de Deir el-Bahari, Paris, 1889, 566-568

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses IX
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
முன்னர்
எட்டாம் ராமேசஸ்
எகிப்தின் பார்வோன்
எகிப்தின் இருபதாம் வம்சம்
பின்னர்
பத்தாம் ராமேசஸ்



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பதாம்_ராமேசஸ்&oldid=3448853" இருந்து மீள்விக்கப்பட்டது