எட்வார்தோ வார்கசு

எட்வார்தோ கெசூசு வார்கசு ரோகசு (Eduardo Jesús Vargas Rojas, பிறப்பு 20 நவம்பர் 1989) சிலியின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் சிலி தேசிய அணியில் முன்னணி இடத்தில் ஆடுகின்றார். தவிரவும் செருமானிய காற்பந்துச் சங்கமான டிஎஸ்ஜி 1899 கோஃபினெய்மிற்கு ஆடுகின்றார்.

எட்வார்தோ வார்கசு

2013இல் எசுப்பானியாவிற்கு எதிரான நட்பாட்டத்தில் சிலி அணியில் வார்கசு
சுய தகவல்கள்
முழுப் பெயர்எட்வார்தோ கெசூசு வார்கசு ரோகசு
பிறந்த நாள்20 நவம்பர் 1989 (1989-11-20) (அகவை 34)
பிறந்த இடம்சான் டியேகோ (சிலி), சிலி
உயரம்1.76 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)[1]
ஆடும் நிலை(கள்)முன்னணி / புறத்தவர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
1899 கோஃபினெய்ம்
எண்9
இளநிலை வாழ்வழி
2003–2006கோப்ரெலோவா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2006–2009கோப்ரெலோவா53(10)
2010–2011சிலி பல்கலைக்கழகம்55(18)
2012–2015நபோலி19(0)
2013→ கிரெமியோ (கடன்)18(6)
2014வேலன்சியா (கடன்)17(3)
2014–2015→ குயின்சு பார்க் ரேஞ்சர்சு (கடன்)21(3)
2015–1899 கோஃபினெய்ம்24(2)
பன்னாட்டு வாழ்வழி
2009சிலி U236(4)
2010–சிலி58(31)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 24 ஏப்ரல் 2016 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 18 சூன் 2016 அன்று சேகரிக்கப்பட்டது.

கோப்ரெலோவா என்ற இளைஞர் சங்கத்தில் சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து சிலி பல்கலைக்கழக காற்பந்து அணியில் விளையாடி மூன்று வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். 2011இல் நடந்த தென்னமெரிக்க கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்று இவருக்கு போட்டியின் நாயகன் விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் சிலியின் சிறந்த ஆட்டக்காரர் விருது கூட்டாக வழங்கப்பட்டது. அந்த ஆண்டின் தென்னமெரிக்க ஆட்டக்காரர் விருதில் இரண்டாவதாக வந்தார். இந்த வெற்றிகளை அடுத்து £11.5 மில்லியன் விலையில் நபோலி காற்பந்துக் கழகத்திற்குச் சென்றார். அங்கிருந்து இவரது சேவைகள் கிரிமியோ, வேலன்சியா, குயின்சு பார்க் ரேஞ்சர்சு கழகங்களுக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. 2015இல் தற்போதைக் கழகமான டிஎஸ்ஜி 1899 கோஃபினெய்மிற்கு மாறினார்.

2010 முதல் முழுமையான பன்னாட்டு வீரராக விளையாடும் வார்கசு சிலிக்காக 58 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; 31 கோல்கள் அடித்துள்ளார். 2014 உலகக்கோப்பை காற்பந்து மற்றும் 2015 கோப்பா அமெரிக்கா போட்டிகளில் சிலிக்காக விளையாடியுள்ளார். பிந்தையப் போட்டிகளில் சிலி கோப்பையை வென்ற நிலையில் வார்கசு போட்டியாட்டங்களில் மொத்தமாக நான்கு கோல்கள் அடித்து கோல்கள் அடித்ததில் இணை-முதல்வராக தேர்வானார்.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வார்தோ_வார்கசு&oldid=2719164" இலிருந்து மீள்விக்கப்பட்டது