எத்தில் ஈரசோவசிட்டேட்டு
எத்தில் ஈரசோவசிட்டேட்டு (Ethyl diazoacetate ) என்பது N=N=CHC(O)OC2H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஈரசோ சேர்மமாகவும் கரிம வேதியியல் வினைப்பொருளாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது. 1883 ஆம் ஆண்டு தியோடர் கர்ட்டியசு எத்தில் ஈரசோவசிட்டேட்டைக் கண்டுபிடித்தார்.[4] கிளைசின்னின் எத்தில் எசுத்தருடன் சோடியம் நைத்திரைட்டையும் நீரிலுள்ள சோடியம் அசிட்டேட்டையும் சேர்த்து வினைபுரியச் செய்து எத்தில் ஈரசோவசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் ஈரசோவசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
எத்தில் 2-ஈரசோவசிட்டேட்டு
2-ஈரசோவசிட்டிக் அமில எத்தில் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
623-73-4 | |
ChemSpider | 11692 |
EC number | 210-810-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12192 |
| |
UNII | N84B835FMR |
பண்புகள் | |
C4H6N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 114.10 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் எண்ணெய் |
அடர்த்தி | 1.085 கி/செ.மீ3 |
உருகுநிலை | −22 °C (−8 °F; 251 K) |
கொதிநிலை | 140 முதல் 141 °C (284 முதல் 286 °F; 413 முதல் 414 K) 720 மிமீபா |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | எத்தில் ஈரசோவசிட்டேட்டு |
GHS pictograms | வார்ப்புரு:GHS01[3] |
GHS signal word | அபாயம் |
H226, H240, H302, H315, H320, H351[3] | |
P281, P305+351+338, P501[3] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஒரு கார்பீன் முன்னோடிச் சேர்மமாக ஆல்க்கீன்களின் வளையபுரோப்பேனாக்கல் வினையில் எத்தில் ஈரசோவசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது.
சேர்மம் ஓர் அபாயகரமான வேதிப் பொருளாக இருந்தாலும், துரோவன் என்ற வணிகப் பெயரில் விற்கப்படும் திரோவாபுளோக்சசின் என்ற நுண்ணுயிர்க்கொல்லி முன்னோடியாக இரசாயனத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.[5] பாதுகாப்பான தொழில்துறை கையாளுதலுக்கான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.[6]
பிஐ-4752 என்ற முதன்மை இயக்கி மருந்து தயாரிப்பில் எத்தில் ஈரசோவசிட்டேட்டு பயன்படுகிறது. இம்மருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5எச்டி2சி என்ற முதன்மை இயக்கி மருந்தைக் காட்டிலும் உயர்ந்ததாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Womack, E. B.; Nelson, A. B. (1944). "Ethyl Diazoacetate". Organic Syntheses 24: 56. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0392.; Collective Volume, vol. 3, p. 392
- ↑ "Ethyl diazoacetate". Sigma-Aldrich. Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
- ↑ 3.0 3.1 3.2 http://www.chemblink.com/MSDS/MSDSFiles/623-73-4_Sigma-Aldrich.pdf
- ↑ Curtius, T. (1883). "Ueber die Einwirkung von salpetriger Säure auf salzsauren Glycocolläther". Berichte der Deutschen Chemischen Gesellschaft 16 (2): 2230–2231. doi:10.1002/cber.188301602136. https://babel.hathitrust.org/cgi/pt?id=uiug.30112025692861;view=1up;seq=544.
- ↑ Maas, G. (2009). "New Syntheses of Diazo Compounds". Angewandte Chemie International Edition 48 (44): 8186–8195. doi:10.1002/anie.200902785.
- ↑ Clark, J. D.; Shah, A. S.; Peterson, J. C. (2002). "Understanding the large-scale chemistry of ethyl diazoacetate via reaction calorimetry". Thermochimica Acta 392–393: 177–186. doi:10.1016/S0040-6031(02)00100-4.