எனக்கு வாய்த்த அடிமைகள்

எனக்கு வாய்த்த அடிமைகள் மகேந்திரன் ராஜாமணி எழுத்து, இயக்கத்தில் 2017 இல் வெளியான தமிழ்த்திரைப்ப

எனக்கு வாய்த்த அடிமைகள் (Enakku Vaaitha Adimaigal) மகேந்திரன் ராஜாமணி எழுத்து, இயக்கத்தில், சன் சுதர்சன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ்த்திரைப்படம்.இத்திரைப்படத்தில் ஜெய், பிரணிதா முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கருணாகரன், காளி வெங்கட், நவீன் ஆகியார் துணைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் சத்தோஷ் தயாநிதியின் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் 2016 இல் தொடங்கி 2017 இல் வெளிவந்துள்ளது.[1]

எனக்கு வாய்த்த அடிமைகள்
இயக்கம்மகேந்திரன் ராஜாமணி
தயாரிப்புசன் சுதர்சன்
கதைமகேந்திரன் ராஜாமணி
இசைசத்தோஷ் தயாநிதி
நடிப்புஜெய்
பிரணிதா
கருணாகரன்
காளி வெங்கட்
ஒளிப்பதிவுமகேஷ் முத்துசாமி
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்வாசன் மூவீஸ்
வெளியீடு02 பிப்ரவரி 2017
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

கதை தொகு

இத்திரைப்படத்தின் கதை கைவிட்டுவிடும் காதலியா, கை கொடுத்துக்காப்பாற்றும் நண்பர்களா என்ற கருத்தைக் கொண்டுள்ளது.[2] தொழிற்நுட்பவியல் துறையில் பணியாற்றும் கிருஷ்ணா (ஜெய்), தன்னுடன் பணியாற்றும் திவ்யாவை (பிரணிதா) காதலிக்கிறார். எதிர்பாராவகையில் கிருஷ்ணாவை கைவிட்டுவிடும் திவ்யா, மற்றொருவரை காதலிக்கின்றார்.[3] இந்த திருப்பத்தால் மனம் வெறுத்த கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ள எண்ணுகின்றார். சாகும் முன் தனது உயிர் நண்பர்கள் மூன்று ஆகிய பேருக்கும் செய்தி அனுப்புகின்றார். மிகுந்த பதற்றத்தில் அவரின் மூன்று நண்பர்களும் கிருஷ்ணாவைத் தேடி விரைகின்றனர்.[4] நண்பனைக் காப்பற்றும் செயலில் ஈடுபட்ட அந்து மூன்று நண்பர்களும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அந்த சிக்கலில் இருந்து அவர்கள் தப்பிக்க முடிந்ததா, கிருஷ்ணாவைக் காப்பாற்ற முடிந்ததா, கிருஷ்ணாவின் காதல் என்ன ஆயிற்று என்ற நிகழ்வுகள் நகைச்சுவையுடன் காட்டப்பட்டுள்ளன.[5]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு