என்ன நடந்தது? (கிலின்டன் நூல்)

என்ன நடந்தது? (What Happened ?) என்ற பெயரில் ஒரு நூலை  இலரி கிளின்டன்  எழுதியுள்ளார். [1] 2016 இல் இலரி கிளின்டன் மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) கட்சியின் சார்பில் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்தேர்தலில் போட்டியிட்ட போது கிடைத்த அனுபவங்களை இதில் எழுதியுள்ளார். [2]இந்த நூல் (எழுத்துப் படைப்பு) செப்டம்பர் 12, 2017 இல் சைமன் அண்ட் சுஷ்டிகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது இலரி கிளின்டனின் ஏழாவது நூல் ஆகும்.[3]

என்ன நடந்தது? (கிலின்டன் நூல்)

ஜேம்ஸ் கோமி, விளாதிமிர் பூட்டின், பராக் ஒபாமா, பெர்னி சாண்டர்ஸ், ஊடகங்கள் எனப் பலருடைய பங்களிப்புகள் எந்த அளவுக்கு தம்முடைய தேர்தல் தோல்விக்குக் காரணங்களாக இருந்தார்கள் என்பதை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். துயர அனுபவங்களை எதிர் கொண்டு  எப்படி அவற்றைக் கடந்து வாழ்வது என்பதையும் இந்த நூலில் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி பரப்புரை நோக்கத்தோடு வட அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். [4]

துவக்கம் , ஆரம்ப விளம்பரங்கள்

தொகு

த நியூயார்க் டைம்ஸ் இதழானது இந்த நூலின் முக்கிய நோக்கம் என்பது இலரி கிளிண்டன் அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் ஒரு பெரிய கட்சியான மக்களாட்சிக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) முதல் பெண் வேட்பாளரக அதிபர் பதவிக்கு போட்டியிட்டதையும் , அதற்காக தான் மேற்கொண்ட தீவிர பரப்புரைகளைப் பற்றித் தெரிவிக்கும் விதமாக இதனை எழுதியுள்ளார் என தெரிவித்தது. இது இவரின் மூன்றாவது வாழ்க்கை நினைவுக் குறிப்பு ஆகும். முதல் நூல் 2003 ஆம் ஆண்டில் லிவிங் ஹிஸ்ட்ரி ( வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு) மற்றும் 2014 இல் ஹார்ட் சாய்சஸ் (கடினமான முடிவுகள்) என்ற இரு நூல்களை எழுதினார். இவரின் அறிமுக உரையில் "கடந்தகாலங்களில் நடந்ததை உங்களுக்குத் தெரிவிக்க முயற்சிக்கிறேன். நான் பொதுவெளியில் இருக்கும் போது மிகவும் கவனமாக இருப்பேன். அதாவது கீழே வலை இல்லாது கம்பி மேல் நடப்பது போன்று இருப்பேன்.ஆனால் தற்போது என்னுடைய பாதுகாப்புக் கவசங்களை நான் விலக்கி வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். [5]

பொருளடக்கம்

தொகு

என்ன நடந்தது ? எனும் நூல் ஆறு முக்கிய பாகங்களைக் கொண்டது. அவையாவன: விடாமுயற்சி, போட்டி, சகோதரத்துவம், இலட்சியவாதம், எதார்த்தவாதம், விரக்தி, மீளுகை. ஒவ்வொரு பாகமும் இரண்டு முதல் ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. [6]

இந்த நூலின் துவக்கக் காட்சியானது 2017 ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் இருந்து துவங்குகிறது.[7] டோனால்ட் டிரம்ப் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதனை இலரி கிளின்டன் தனது கணவருடன் இணைந்து கவனிக்கிறார்.

"ஆழமான மூச்சு. காற்று என் நுரையீரலை முழுவதையும் நிரப்புகிறது. இதுதான் சரியான செயல். நமது நாட்டில் மக்களாட்சி தற்பொழுதும் உள்ளது என்பதனை நாடு பார்க்க வேண்டும், இது எவ்வளவு வேதனையாக இருந்தாலும் சரி. தற்சமயம் ஆழமான மூச்சு விடு. பின்னர் அலறலாம். " என்பதாகத் துவங்குகிறார்.

விற்பனை

தொகு

உள்ளூர் விற்பனை

தொகு

இதன் கெட்டி அட்டை பதிப்பானது செப்டம்பர் 12, 2017 அன்று வெளியிடப்பட்டது. உடனடியாக பார்ன்ஸ் & நோபல், அமேசான், மற்றும் யு எஸ் ஏ டுடே (அமெரிக்க இதழ்) போன்றவற்றில் சிறந்த விற்பனையாளர் பட்டியல்களில் முன்னணி இடத்தைப் பெற்றது.[8][9]

த நியூயார்க் டைம்ஸ் இதழின் சிறந்த விற்பனையாளர் வரிசையில் இதன் கெட்டி அட்டை பதிப்பு மற்றும் மின்னிதழ் பதிப்பின் விற்பனையும் இரு வாரங்களாக முதல் இடத்தில் இருந்தது.[10] [11]மூன்றாவது வாரத்தில் இரண்டாவது இடத்தில் நீடித்தது.[12] நவம்பர் மாத துவக்கத்தில் சுமார் ஆறு மாத காலம் முதல் நான்கு இடங்களில் நீடித்தது.[13] சனவரி, 2018 இல் பதினாறு வாரங்கள் இந்தப் பட்டியலில் நீடித்தது[14]. அடுத்த வாரங்களில் அந்த இடத்தை இழந்தது.[15]

சான்றுகள்

தொகு
  1. Alter, Alexander (July 27, 2017). "New Details From Hillary Clinton’s Memoir Revealed". The New York Times. https://www.nytimes.com/2017/07/27/books/hillary-clinton-memoir-what-happened.html. பார்த்த நாள்: July 27, 2017. 
  2. Alter, Alexander (July 27, 2017). "New Details From Hillary Clinton’s Memoir Revealed". The New York Times. https://www.nytimes.com/2017/07/27/books/hillary-clinton-memoir-what-happened.html. பார்த்த நாள்: July 27, 2017. 
  3. Siu, Diamond Naga. "Hillary Clinton to open up about the 2016 election in new book titled 'What Happened'". Politico. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  4. "VIP TICKETS FOR HILLARY CLINTON'S BOOK TOUR COST OVER $2,000". Newsweek. August 31, 2017. பார்க்கப்பட்ட நாள் September 6, 2017.
  5. Alter, Alexander (July 27, 2017). "New Details From Hillary Clinton’s Memoir Revealed". The New York Times. https://www.nytimes.com/2017/07/27/books/hillary-clinton-memoir-what-happened.html. பார்த்த நாள்: July 27, 2017. 
  6. What Happened, pp. viii-ix.
  7. Jordan, Tina (September 12, 2017). "Hillary Clinton is upset about a lot of things in What Happened: EW review". பார்க்கப்பட்ட நாள் September 23, 2017.
  8. McClurg, Jocelyn (September 20, 2017). "Hillary Clinton lands at No. 1 on USA TODAY books list; Katy Tur is No. 7". USA Today. https://www.usatoday.com/story/life/books/2017/09/20/hillary-clinton-lands-no-1-usa-today-books-list-katy-tur-no-7/682234001/. 
  9. Pallotta, Frank (September 12, 2017). "Hillary Clinton's 'What Happened' tops Amazon as readers line up for book signing". CNN Money. http://money.cnn.com/2017/09/12/media/hillary-clinton-book-what-happened-amazon/index.html. 
  10. "Books/Best Sellers/October 1, 2017". The New York Times. https://www.nytimes.com/books/best-sellers/2017/10/01/. 
  11. "Books/Best Sellers/October 8, 2017". The New York Times. https://www.nytimes.com/books/best-sellers/2017/10/08/. 
  12. "Books/Best Sellers/October 15, 2017". The New York Times. https://www.nytimes.com/books/best-sellers/2017/10/15/. 
  13. Lucidon, Amanda (2017-11-05). "Hardcover Nonfiction Books - Best Sellers - November 5, 2017". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2018-02-12.
  14. Union, Gabrielle (2018-01-14). "Hardcover Nonfiction Books - Best Sellers - January 14, 2018". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2018-02-12.
  15. Kalanithi, Paul (2018-01-21). "Hardcover Nonfiction Books - Best Sellers - January 21, 2018". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2018-02-12.

வெளியிணைப்புகள்

தொகு

என்ன நடந்தது ? நூல் குறித்து இலரியுடன் நேர்காணல் , செப்டம்பர் 18, 2017