எமின் கீச்சான்

எமின் கீச்சான் (Emin's shrike-உலானிசு கபெர்னேட்டார்) என்பது கீச்சான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

Emin's shrike
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உலானியசு
இனம்:
L. gubernator
இருசொற் பெயரீடு
Lanius gubernator
கார்ட்லாப், 1882

பரவல்

தொகு

எமின் கீச்சான் கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட் டிவார், கானா, கினி-பிசாவு, மாலி, நைஜீரியா, செனிகல், தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் உலர் புன்னிலம் ஆகும்.

விளக்கம்

தொகு

முதுகு மற்றும் தொடைப் பகுதியில் சாம்பல் நிறத்துடனும் கழுத்து மற்றும் கண்கள் வழியாக ஒரு கருப்பு மறைப்புடன் கூடிய சிறிய, கவர்ச்சிகரமான கீச்சான் இதுவாகும். பொதுவாக இறக்கையின் முன்புறத்தில் ஒரு சிறிய வெள்ளைத் திட்டு காணப்படும். பொதுவாக இணையாகவோ அல்லது சிறிய குழுவாகவோ காணப்படும்.[2]

நிலை

தொகு

இந்த சிற்றினம் மிகப் பெரிய வாழிட வரம்பைக் கொண்டுள்ளது, எனவே வரம்பு அளவு அளவுகோலின் கீழ் பாதிக்கப்படக்கூடிய வரம்புகளை அணுகாது. இதன் எண்ணிக்கையின் போக்கு நிலையானதாகத் தோன்றுகிறது. எனவே எண்ணிக்கையின் போக்கு அளவுகோலின் கீழ் இச்சிற்றினம் பாதிக்கப்படக்கூடிய வரம்புகளை அணுகவில்லை. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்தச் சிற்றினத்தினை தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமின்_கீச்சான்&oldid=3928174" இலிருந்து மீள்விக்கப்பட்டது