எம். உதயகுமார் (அரசியல்வாதி)
பழனி எழிலன் மயில்வாகனம் உதயகுமார் (Palani Elilan Mylvaganam Udayakumar; பிறப்பு: 28 செப்டம்பர் 1967) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]
எம். உதயகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் 2009–2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 செப்டம்பர் 1967 |
அரசியல் கட்சி | தொழிலாளர் தேசிய சங்கம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ் முற்போக்குக் கூட்டணி |
உதயகுமார் 1967 செப்டம்பர் 28 இல் பிறந்தவர்.[1] இவர் முகாமைத்துவத் துறையில் பட்டம் பெற்றவர்.[2] இவர் முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக இருந்து பின்னர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கத்தில் இணைந்தார்.[3][4]
உதயகுமார் மத்திய மாகாணசபையில் உறுப்பினராக 2009 முதல் 2018 வரை பதவியில் இருந்தார்.[2] பின்னர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[5][6][7]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2009 மாகாணசபை[8] | நுவரெலியா மாவட்டம் | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | ஐக்கிய தேசியக் கட்சி | 32,409 | தெரிவு | ||
2013 மாகாணசபை[9] | நுவரெலியா மாவட்டம் | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 43,543 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம்[6] | நுவரெலியா மாவட்டம் | தேசிய தொழிலாளர் சங்கம் | ஐக்கிய மக்கள் சக்தி | 68,119 | தெரிவு |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Directory of Members: M. Udayakumar". இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
- ↑ 2.0 2.1 "Get to know your new parliamentarians". Sunday Times. 9 August 2020. http://www.sundaytimes.lk/200809/news/get-to-know-your-new-parliamentarians-411739.html. பார்த்த நாள்: 18 August 2020.
- ↑ Farisz, Hafeel (25 December 2014). "CWC Deputy Leader to go with Maithri". Daily Mirror. http://www.dailymirror.lk/59711/cwc-deputy-leader-to-go-with-maithri. பார்த்த நாள்: 18 August 2020.
- ↑ "Tamil Progressive Alliance To Strengthen the Hands Sajit Premadasa". ஏசியன் டிரிபியூன். 10 July 2020 இம் மூலத்தில் இருந்து 15 ஆகஸ்ட் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200815141314/http://asiantribune.com/node/94399. பார்த்த நாள்: 18 August 2020.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. 8 August 2020. p. 4A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
- ↑ 6.0 6.1 "General Election 2020: Preferential votes of Nuwara Eliya District". Ceylon Today. 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094554/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-nuwara-eliya-district. பார்த்த நாள்: 18 August 2020.
- ↑ Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer. http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 18 August 2020.
- ↑ "Preferences Nuwara Eliya" (PDF). Department of Elections. p. 2. Archived from the original (PDF) on 10 December 2009.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Central Province". Daily Mirror. 25 September 2013. http://www.dailymirror.lk/article/provincial-council-elections-2013-results-and-preferential-votes-central-province-36076.html. பார்த்த நாள்: 14 August 2020.