எம். என். ரெட்டி
இந்திய காவல் ஆய்வாளர்
எம். என். ரெட்டி (M. N. Reddi) இந்திய காவல் சேவை மூத்த அதிகாரியாக பணியாற்றினார். இவர் 1960 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் தேதியன்று பிறந்தார். 2014 ஆம் ஆண்டு சூலை மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.[1] தொழில்நுட்ப ஆர்வமுள்ள காவல் அதிகாரியான இவர்[2]போக்குவரத்துக் காவல், போக்குவரத்து மேலாண்மை மற்றும் சாலை பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பணியாற்றினார். தனது இளங்கலை படிப்பை கிறிசுது கல்லூரியில் முடித்தார். புது தில்லி மாநகரில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் படிப்பில் பட்டம் பெற்றார். மேலும் தேசிய காவல் அகாடமியில் உயரடுக்கு இந்திய காவல் சேவையின் அதிகாரியாகவும் பட்டம் பெற்றுள்ளார்.[3][4]
எம். என். ரெட்டி | |
---|---|
காவல்துறை ஆணையர், பெங்களூர் நகரம் | |
பதவியில் 31 சூலை 2014 – 31 சூலை 2015 | |
முன்னையவர் | ராகவேந்திரா எச். அவுராத்கர் |
பின்னவர் | என்.எஸ்.மேகரிக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 சனவரி 1960 கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
கல்வி | முதுகலை சமூகவியல் ஆய்வியல் நிறைஞர் சமூகவியல் |
முன்னாள் கல்லூரி | ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி கிறித்து பல்கலைக்கழகம், பெங்களூர் |
வேலை | இந்தியக் காவல் பணி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Officers borne on Karnataka Cadre of I.P.S. – 2012 as on 1 January 2012" (PDF). Department of Personnel and Administrative Reforms (Services-4), Bangalore. p. 15. Archived from the original (PDF) on 17 June 2015. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.
- ↑ "Tech savvy". DNA india. 18 February 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
- ↑ "JNU". www.jnu.ac.in. Archived from the original on 13 April 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
- ↑ "National Police Academy". National Police Academy. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.