சாலை போக்குவரத்து பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு

[[சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு என்பது சாலையைப் பயன்படுத்தும் ஒரு நபர் பலியாவதையோ அல்லது கடுமையாகக் காயப்படுவதையோ தடுக்கும் முறைகளையும் நடவடிக்கைகளையும் குறிக்கிறது. சாலையின் பயனாளர்கள் யாவரெனின் பாதசாரிகள், மிதிவண்டி, மோட்டார் வாகன ஓட்டிகள் மற்றும் அதன் பயணிகள் ஆகியோர் ஆவர். தற்கால பாதுகாப்பு உத்திகள் மனித தவறுகள் நடக்கக்கூடும் என்பதை மனதில் கொண்டு தீவிர காயம் மற்றும் மரணம் தரும் விபத்துக்களை தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன (சாலை பயனீட்டாளர் சாலை விதிகளை கடைபிடிப்பார் என்று மனதில் கொண்டு வடிவமைக்கப்படும் பழைய பாதுகாப்பு உத்திகள் போலல்லாமல்). இன்றளவில்,பாதுகாப்பான சாலை வடிவமைப்பு என்பது மோதல் புள்ளிகளாக (விபத்து நிகழக்கூடிய) கருதப்படும் இடங்களில் வாகன வேகம், விபத்து நடந்தால் பாதிக்கப்படும் சாலை பயனீட்டாளர்கள் கடுமையான காயங்கள் பெறாமலும் உயிரிழப்பு நேராமலும் அமையும்படி குறைவாக இருக்குமாறு உறுதி செய்யும் ஒரு சாலை சூழலை வழங்குவதாகும்.

அனைத்து தரப்பு சாலைகளுக்கும் பொதுவான தீர்வை அடையாளம் காண இயலவில்லை, குறிப்பாக குறைவான போக்குவரத்து கொண்ட கிராமப்புற சாலைகளை கருத்தில் கொண்டால் இது விளங்கும். இருப்பினும் ஒரு படிநிலைபடிநிலையான கட்டுப்பாட்டை பயன்படுத்த வேண்டும். முதற்படிநிலையாக கடுமையான காயங்கள் மற்றும் மரணம் ஏற்படுத்தும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பது இருக்க வேண்டும். அடுத்த படிநிலையாக ஒரு விபத்து நடந்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்வது போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மூன்றாம் நிலை, சாலை வடிவமைப்பின் தரம், வாகன ஓட்டிகளின் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் விபத்துக்களை குறைப்பது என்பதாக உள்ளது.[1]

பின்னணி

தொகு

சாலை போக்குவரத்து விபத்துக்கள் உலகின் மிகப்பெரிய பொதுநல மற்றும் காயத்தடுப்பு பிரச்சனைகளாக உள்ளன. இப்பிரச்சனை மிகவும் கடுமையானது. ஏனெனில் பாதிக்கப்படுபவர்கள் விபத்திற்கு முன்பு மிகுந்த உடல்நலத்துடன் உள்ளனர். உலக சுகாதார அமைப்புபடி (WHO),பத்து இலட்சத்திற்கும் மேலான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகின் சாலைகள் மீது இறக்கின்றனர்.[2] 2004 ஆம் ஆண்டில் WHO வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளால் 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் 5 கோடி மக்கள் காயம் அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.[3]

இதுவே பத்து முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த அறிக்கை, இச்சிக்கல் வளரும் நாடுகளில்தான் மிகக் கடுமையாக இருக்கிறதென்றும் மேலும் எளிய தடுப்பு நடவடிக்கைகளே இறப்பு எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கும் என்றும் குறிப்பிடுகிறது.[4] சாலை பாதுகாப்பின் தரமான அளவீடாக 'கொல்லப்பட்ட அல்லது மிகுந்த காயப்பட்டவர்கள்' ( பொதுவாக ஒரு பில்லியன் பயணி கிலோமீட்டருக்கு ) என்பது உள்ளது. பழமையான சாலை வழிமுறைகளைப் பின்பற்றும் நாடுகள் இதற்குப் பதிலாக மில்லியன் வாகன மைல்களுக்கு ஏற்படும் விபத்துக்கள் என்பதை அளவீடாகப் பயன்படுத்தும். முற்றிலும் விபத்து அபாயத்தை மட்டும் கருத்தில்கொண்ட பழைய சாலை வடிவமைப்பு ஒரு சிக்கலான விஷயம் ஆகும். ஏனெனில் நெடுஞ்சாலை விபத்துக்கள் ஏற்பட காரணிகளாக ஓட்டுனர் தவறு அல்லது சோர்வு , வாகன பிரேக், ஸ்டீயரிங் முதலியன திடீரென்று பழுதாகுதல் போன்றவையும் இருக்கின்றன. சாலை வடிவமைப்பு தலையீடுகள் இத்தகைய காரணிகளையும் ஈடு செய்ய முயல வேண்டும். நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில் நல்ல நிர்வாகத்தன்மையால் விபத்துக்களை குறைப்பது ஒருபுறம் இருக்க புதிய பகுதிகளில் சாலை அமைக்கும்போது விபத்துக்களின் வாய்ப்பை குறைக்கும் சாலை வடிவமைப்புகளை உருவாக்குவது ஒரு புதிய துறையாக இருக்கிறது.

சாலை போக்குவரத்து பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகளை நகரமயமாக்கப்பட்ட பகுதியில் உள்ளவை, நகரமயமாக்கப்படாத பகுதியில் உள்ளவை, மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் (நெடுஞ்சாலைகள் / Freeways போன்றவை) என பிரித்துக்கொள்வது வசதியாக இருக்கும். அதிக இறப்புகள் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் நடக்கின்றன.

சாலை வகை கொலை தீவிர காயம் லேசான காயம் மொத்த காயப்பட்டவர்கள் குறிப்பு
நகரமயமாக்கப்பட்ட இட சாலை அல்லாத (மோட்டார்வேஸ் நீங்கலாக) 1,323 8,342 48,810 58,475 மொத்த கொல்லப்பட்டவர்களில் 52%, தீவிரமாக காயமடைந்தவர்களில் 32%, லேசான காயங்கள் கொண்டவர்களில் 25%
நகரமயமாக்கப்பட்ட இட சாலை 1,057 16,823 143,079 160,959 மொத்த கொல்லப்பட்டவர்களில் 42%, தீவிரமாக காயமடைந்தவர்களில் 65%, லேசான காயங்கள் கொண்டவர்களில் 70%
நெடுஞ்சாலை 158 869 10,444 11,471 மொத்த கொல்லப்பட்டவர்களில் 6%, தீவிரமாக காயமடைந்தவர்களில் 3%, லேசான காயங்கள் கொண்டவர்களில் 5%. நெடுஞ்சாலைகளில், 1994-98 காலத்திலிருந்து , போக்குவரத்து 28% அதிகரித்துள்ள போதிலும் , ஏற்படும் மரணங்கள் 9 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்த பாதிக்கப்பட்டவர்கள் 2,538 26,034 202,333 230,905

நகரமயமாக்கப்பட்ட பகுதிகள்

தொகு
 
பாதசாரி குறுக்கு மற்றும் கோடு குறியீடுகள்
 
ஒரு கர்ப் விரிவாக்கம்
 
உட்ரெட்ச்சில் உள்ள மிதிவண்டிகளுக்கென்று தனியே ஒதுக்கப்பட்டுள்ள பாதை

பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்கள் போன்ற பல பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்கள் உள்ள இடங்களில் சாலை போக்குவரத்தையும் அதன் வேகத்தையும் குறைக்க எடுக்கப்படும் டிராபிக் காமிங் எனப்படும் பொறியியல் மற்றும் வேறு நடவடிக்கைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும். மனித உணர்வுகளையும் மற்றும் கண் தொடர்புகளையும் சார்ந்த ஷேர்ட் ஸ்பேஸ் எனப்படும் முறையில் டிராபிக் சிக்னல்கள் குறியீடுகள் போன்றவையும் மேலும் பாதசாரிகளுக்கான வழி ,நான்கு சக்கர வாகனங்களுக்கான என்ற பாகுபாடும் இருக்காது. திட்டமிட்ட பகுதிகளில் புதிய பிணைய கட்டமைப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த அமைப்பு மாதிரிகளில் மிதிவண்டிகள் மற்றும் பாதசாரிகள் மட்டும் வாழும் பகுதிகளுக்குள் செல்லுமாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதை வடிகட்டிய பரவுதல் (filtered permeability) என்று குறிப்பிடுகிறார்கள் அபாயகரமான சாலை வளைவுகள் மற்றும் சந்திப்புகள் இப்பொழுதெல்லாம் நிறைய முறை, கிட்டத்தட்ட ஐந்து, இருபது மற்றும் அறுபது வினாடிகள் முன்னரே ஓட்டுனர்களுக்கு சாலை குறியீடுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுவிடுகின்றன. பெரும்பாலான சாலை குறியீடுகள் மற்றும் நடைபாதயில் குறிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், திறமையாக வாகன ஹெட்லைட்களிலிருந்து வரும் ஒளியை கோளங்கள் அல்லது பட்டகம் கொண்டு ரெட்ரோ-பிரதிபலிப்பு மூலம் மீண்டும் வாகன ஓட்டுனரின் கண்களுக்கு செலுத்துமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்தின் குறுக்கே திரும்புதல்

தொகு

போக்குவரத்தின் குறுக்கே திரும்புவது (அதாவது இடது கை புறம் வாகனங்கள் செலுத்தப்படும் நாடுகளில் வலதுபுறம் திரும்புதல் மற்றும் வலது கை புறம் வாகனங்கள் செலுத்தப்படும் நாடுகளில் இடதுபுறம் திரும்புதல்) பல அச்சுறுத்தல்களை முன்வைக்கிறது. அவற்றுள் மிக கடுமையான ஆபத்து எதிரே வரும் போக்குவரத்துடன் மோதிக்கொள்வது. இதுதான் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் இறப்புகளுக்கான முக்கிய காரணம். இன்னொரு ஆபத்து என்னவென்றால் எதிரே வரும் போக்குவரத்தில் ஒரு இடைவெளிக்காக காத்திருக்கும்போது பின்னே வரும் போக்குவரத்தால் இடிபட்டுக்கொள்வது.

இந்த வகை மோதலுக்கான எதிர் நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • வலது திருப்ப பாதைகளை (இடது கை புறம் வாகனங்களை செலுத்தும் வழக்கம் உள்ள நாடுகளில்) கூடுதலாக்குவது
  • மிச்சிகன் இடது போன்ற மறைமுக திருப்பு முறைகளை பயன்படுத்துதல்
  • வழக்கமான சாலை இணக்கங்களை வட்ட திருப்பங்களாக மாற்றுதல்.

இந்த வசதிகள் இல்லாத நிலையில் :

  • உங்கள் சக்கரங்களை நேராக வைத்துகொள்ளுங்கள். ஏனெனில் அப்போதுதான் பின்வரும் வண்டி மோதினாலும் எதிரே வரும் போக்குவரத்தில் மோதிக்கொள்ளமாட்டீர்கள்.
  • நீங்கள் உட்செல்லும் சாலையின் தூரத்தில் பாருங்கள். அப்போதுதான் வரும் வாகனம் தூரத்தில் மற்றும் மெதுவாக வருவது போல் தோன்றும் ஒளியியல் மாயை ஏற்படாது.

பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்களுக்கான சாலை வடிவமைத்தல்

தொகு

பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்கள்தான் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாலைப்பயனர்கள் ஆவர்.[5] சில நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் இவர்களையே கொண்டுள்ளது. இவர்களை பாதுகாக்கக்கூடிய சில வழிமுறைகள்:

  • எதிர்பார்க்கப்படும் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பது.
  • ஒதுக்கப்பட்ட பாதசாரி மற்றும் மிதிவண்டி பாதைகள் முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு அப்பால் இருக்கலாம்.
  • மேம்பாலங்கள் மற்றும் சுரங்கவழிப்பாதைகள்.
  • டிராபிக் காமிங் மற்றும் வேகத்தடுப்புகள்.
  • குறைந்த வேக வரம்பு. இது வேகக்கண்காணிப்பு புகைப்படக்கருவியால் நன்கு சாத்தியப்படலாம்.
  • அனைத்து வகை சாலைப்பயனர்களுக்கும் சம முன்னுரிமை தரும் பகிர்ந்த பகுதி (shared space) திட்டங்கள் பயன்படுத்தப்படலாம்.
  • ஆபத்தான இடங்களைப் பாதசாரிகள் கடக்காமலிருக்க பாதசாரி தடைகள் விதிப்பது.

பகிர் இடம்

தொகு
 
யூ.கே.வின் பிரிங்டனில் உள்ள ஒரு பகிர் இடம்

1947இல் பாதசாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்கள் பல சாலை பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மாறாக எதிர்விளைவையே ஏற்படுத்துகின்றன என்று உணர்ந்தது. இது ஏனெனில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் ஓட்டுனர்களால் தங்கள் வேகத்தை அதிகரித்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது ( உதாரணத்திற்கு ஸ்டீயரிங்கில் பொருத்தப்படும் காற்றுப்பை). இதனால் பாதிப்பு உண்மையில் அதிகரிக்கிறது."[6] 1990 களில் 'சேர்ட் ஸ்பேஸ்' என்ற பெயரில் புதிய அணுகுமுறை ஒன்று அறிவிக்கப்பட்டது. அதில் டிராபிக் சிக்னல்கள் போன்றவையும் மேலும் பாதசாரிகளுக்கான வழி ,நான்கு சக்கர வாகனங்களுக்கான என்ற பாகுபாடும் இருக்காது. ஆதலால் வாகன ஓட்டுனர்கள் வண்டிகளை தாமாகவே மெதுவாக இயக்கினார்கள். மேலும் விபத்துக்களும் குறைந்தன

நகரமயமாக்கபடாத பகுதிகள்

தொகு

முக்கிய நெடுஞ்சாலைகள்

தொகு
 
தடைகளற்ற பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை

முக்கிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பான வேக செயல்பாட்டிற்கு உபயோகமானது. பொதுவாக ஒரு வாகன கி.மீ.க்கு ஏற்படும் காயங்கள் என்ற அளவை குறைவாகவே கொண்டிருப்பன.

பாதுகாப்பு அம்சங்கள் பின்வருமாறு:

உள்ளூர் சாலைகளுக்கு வரையறுக்கப்பட்ட அணுகல் எதிர் திசை போக்குவரத்து இடையே நேரடி மோதல்களை தவிர்க்க தடுப்புச்சுவர் ஏற்படுத்துவது. சாலையோர தடைகளை நீக்குதல். மேலும் பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்கள் மற்றும் மெதுவான வாகனங்கள் ஆகியனவற்றிற்றை தடை செய்வது. ஆற்றல் தேய்வு சாதனங்களை (எ.கா. பாதுகாப்பு தண்டவாளங்கள், பரந்த புல்தரை பகுதிகள், மணல் பீப்பாய்கள்) சேர்ப்பது. சாலை சுங்கவரி சாவடிகளை தவிர்க்கலாம் அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகளில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கும் தடுப்புகளில் ஆற்றல் தேய்வு ஏற்படுவதற்கு அமைப்புகள் உள்ளன. இது விபத்தின் தீவிரத்தை பெருமளவு குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பல வழிமுறைகள் ஆற்றல் விரயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஃபிட்ச் தடை எனப்படும் முறை மணல் நிரம்பிய பீப்பாய்களை பயன்படுத்துகிறது. வேறு பல அமைப்புகள் எஃகுவை கிழித்தோ உருமாற்றியோ இச்செயலை செய்கின்றன.

சில நாடுகளில் முக்கிய சாலைகள் டோன் பேண்ட்ஸ் என்பதை பயன்படுத்துகின்றன. இவை சாலை ஓரங்களில் தனது வண்டியை ஓட்டுனர் தவறுதலாக தூக்கத்திலோ அல்லது சோர்விலோ செலுத்தினால் சத்தமிட்டு ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுக்கின்றன. இவை "உருட்டல் பட்டைகள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஒரு மாற்று முறை "உயர்ந்த விலா" என்னும் அமைப்பை சேர்ப்பதாகும். இது சத்தமெழுப்புவது மட்டுமல்லாமல் நிலைமைகளில் ஓட்டுநருக்கு நன்கு கண்பட்டு ஓட்டுர் எச்சரிக்கையுடன் வண்டி ஓட்ட பயன்படுகிறது. அவர்கள் முதல் சிறப்பாக முக்கிய carriageway இருந்து கடினமாக இருக்கும் விளிம்பில் பிரிக்க குறிக்கும் ஒரு முனை வரி போன்ற நெடுஞ்சாலைகள் பயன்படுத்த அனுமதி.

சிறந்த நெடுஞ்சாலைகள் வளைவுகளில் பேங்க் செய்யப்படுவன. அப்போதுதான் வண்டி வளைவில் தடுமாறி வளைவைவிட்டு அகலுவது நிகழாது.

நெடுஞ்சாலைகளில் நிறைய லேன்கள் இருந்தால் வாகனங்கள் விரைவாக செல்வதோடு விபத்துக்களும் குறைகின்றன. ஆனால் ஓட்டுனர்கள் தங்கள் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

வாகன பாதுகாப்பு

தொகு

பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகள்

தொகு

ஒரு விபத்து நடப்பதை தவிர்க்குமாறு பாதுகாப்பை பல்வேறு எளிய வழிகளில் நன்றாக மேம்படுத்தமுடியும். கூட்டமாக பேருந்திலிருந்து ஏறவோ இறங்கவோ செய்தலை தவிர்த்தல், பேருந்தில் பாதுகாப்பற்ற இடங்களில் நிற்றலை தவிர்த்தல், பேருந்து விதிகளை பின்பற்றல் ஆகியனவே பயணியின் பாதுகாப்பை பெருமளவு மேம்படுத்தும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கூட பேருந்துகளில் சேர்க்கலாம். உதாரணத்திற்கு பயணிகள் பிடித்துக்கொள்வதற்கென உலோக கம்பிகளை பேருந்துகளில் சேர்க்கலாம். பேருந்தில் பயணம் செய்யும்போது பாதுகாப்பாக இருப்பதற்கு முக்கிய வழிமுறைகள் சில:

  • பேருந்தைப் பிடிப்பதற்கு ஓடுவது என்ற நிலைக்கு இடம் கொடுக்காதவாறு உங்கள் இருப்பிடத்திலிருந்து சீக்கிரமாகவே கிளம்பிவிடுங்கள்.
  • பேருந்து நிறுத்தத்தில், எப்போதும் வரிசையை பின்பற்றவும்.
  • உண்மையான பேருந்து நிறுத்தத்தையே தேர்ந்தெடுங்கள்.
  • பேருந்து நின்ற பின்னரே அதில் ஏறவும்.
  • பேருந்தின் படிகளில் உட்கார்ந்து கொண்டோ நின்று கொண்டோ பயணம் செய்யாதீர்.
  • ஒரு நகரும் அல்லது நிற்கும் பேருந்தின் வெளியே உங்கள் உடலின் எந்த பகுதியையும் நீட்ட வேண்டாம்.
  • பேருந்தில் இருக்கும்போது ஓட்டுனரின் கவனத்தை திசைதிருப்பக்கூடிய எந்த செயலையும் செய்யாதீர்.
  • எப்பொழுதும் பேருந்தின் கம்பிகளை பிடித்துக்கொள்ளுங்கள், குறிப்பாக திடீர் திருப்பங்களில்.

மகிழுந்துகள்

தொகு
 
மோதல் சோதனைகள் ஒரு மகிழூந்தின் வடிவமைப்பை நன்கு மேம்படுத்தும்

ஓட்டுனர் தவறு செய்யும் வாய்ப்பை குறைப்பதன் மூலமும் மோதல்களின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் வாகனங்களை வடிவமைப்பதன் மூலமும் பாதுகாப்பை மேம்படுத்தலாம். அநேக தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் பாதுகாப்பு தொடர்பான வாகன சாதனங்கள், அமைப்புகள், வடிவமைப்பு, மற்றும் கட்டுமானம் ஆகியவற்றிற்கு விரிவான தேவைகள் மற்றும் குறிப்புகள் குறிப்பிட்டுள்ளன. அவைகளுள் சில :

  • இருக்கைப் பட்டை(Seatbelt) மற்றும் காற்றுப்பை போன்ற பயணிகள் கட்டுப்பாடுகள்
  • விளக்குகள் மற்றும் பிரதிபலிப்பான்கள் போன்ற விபத்து தவிர்ப்பு உபகரணங்கள்
  • மின்னணு உறுதி கட்டுப்பாடு போன்ற ஓட்டுநர் உதவி அமைப்புகள்

டிரக்குகள்

தொகு

ஐரோப்பிய போக்குவரத்து ஆணைக்குழு துறை கருத்துப்படி டிரக்குகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் , 25% போதுமான அளவு பாதுகாப்பாக சரக்கு கட்டப்படாததால்தான் நிகழ்கின்றன.[7] ஒழுங்காக கட்டப்படாத சரக்குகள் பெரும் விபத்தை ஏற்படுத்தி பிற வாகனங்கள், உயிர்கள், சுற்றுச்சூழல் ஆகியனவற்றிற்கு ஆபத்தை விளைவிக்கும். டன்னேஜ் பைகளை சரக்குகளுக்கு நடுவே வைப்பது ஒரு சிறந்த பழக்கம் ஆகும்.

சாலை பயனர்களின் கட்டுப்பாடு

தொகு

சாலை பயனர் கட்டுப்பாடுகள் பல்வேறு வகையான நடைமுறைகளில் உலகம் முழுவதும் உள்ளன.

மோட்டார் வாகன பயனர்கள்

தொகு

மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு , அந்தந்த நாட்டு சட்டப்படி, வாகன ஓட்டுனர் உரிமம் வயது வரம்பு படியும் வாகனம் எத்தகையது என்பதன்படியும் ஒரு வாகனம் ஓட்டும் சோதனையின் படி வழங்கப்படும். இருசக்கர வாகன ஓட்டிகள் கூடுதலாக ஒரு தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமும் சில இடங்களில் உண்டு. அமெரிக்காவின் விர்ஜினியா மற்றும் மேரிலாந்து ஆகிய நாடுகளின் சட்ட வரம்புகளில், செல்பேசியின் பயன்பாடு போன்ற குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.மகிழுந்தில் சீட் பெல்ட் பயன்பாடு இல்லாதபோதும் இரவிலும் தான் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.[8] காப்பீட்டு நிறுவனங்கள் பின்வரும் கட்டுப்பாடுகளை முன்மொழிகின்றன: மது அருந்தி ஓட்டுவதை முற்றிலுமாக தடை செய்வது, இரவு நேரங்களில் இளம் பருவத்தினர் வாகனம் ஓட்டுவதைத் தடை செய்வது. சில நாடுகளில் அல்லது மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற கருத்துக்கள் சில செயல்படுத்தப்பட்டுவிட்டன.

மிதிவண்டி பயன்படுத்துவோர்

தொகு

கைபேசி பயன்படுத்தக்கூடாதது , மது அருந்தக்கூடாதது , தலைக்கவசம் அணிவது முதலியன மிதிவண்டி ஓட்டுவோரின் கடமையாகும்.

'கொல்லப்பட்ட அல்லது மிகுந்த காயப்பட்டவர்கள்' நாடுவாரியாக

தொகு
நாடு 1 பில்லியன் வாகன கிமீ-க்கு கொல்லப்பட்டவர்கள் (2003 நெடுஞ்சாலைகள்) 1 பில்லியன் வாகன கிமீக்கு கொல்லப்பட்டவர்கள் (2003இல் நெடுஞ்சாலைகள் தவிர்த்த மற்ற சாலைகள்) நெடுஞ்சாலை AADT நெடுஞ்சாலை சாலையில் பயணம் 2003இல் நெடுஞ்சாலை வேக வரம்பு (kmph/mph)
  ஆஸ்திரியா 5.9 13.4 30,077 23% 130 / 80
  செக் குடியரசு 9.9 34.3 25,714 11% 130 / 80
  டென்மார்க் 3.0 11.9 29,454 25% 110 / 70
  பின்லாந்து 1.4 8.3 22,780 10% 120 / 75
  பிரான்சு 4.0 12.8 31,979 21% 130 / 80
  செருமனி 3.8 12.4 48,710 31% ஒன்றுமில்லை
(130 / 80 பரிந்துரைக்கப்பட்டது)
  அயர்லாந்து 7.4 11.0 26,730 4% 120 / 75
  இத்தாலி 13.0 தெரியவில்லை தெரியவில்லை தெரியவில்லை 130 / 80
  சப்பான் 4.0 11.9 26,152 9% 100 / 60
  நெதர்லாந்து 2.1 11.7 66,734 41% 120 / 75
  சுலோவீனியா 8.1 18.7 15,643 19% 130 / 80
  எசுப்பானியா 62.3 தெரியவில்லை தெரியவில்லை தெரியவில்லை 120 / 75
  சுவீடன் 2.5 9.9 24,183 21% 110 / 70
  சுவிட்சர்லாந்து 2.8 11.8 43,641 33% 120 / 75
  ஐக்கிய இராச்சியம் 2.0 9.3 85,536 23% 110 / 70
  ஐக்கிய அமெரிக்கா 5.2 10.7 39,634 24% 120 / 75

AADT - சராசரி ஆண்டு தினசரி போக்குவரத்து.

இவையையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Towards Zero Framework
  2. Statistical Annex - World report on road traffic injury prevention
  3. "World report on road traffic injury prevention". World Health Organisation. பார்க்கப்பட்ட நாள் 2010-04-14.
  4. "UN raises child accidents alarm". BBC News. 2008-12-10. http://news.bbc.co.uk/2/hi/in_depth/7776127.stm. பார்த்த நாள்: 2010-05-22. 
  5. "Vehicle Pedestrian Crashes". International Road Assessment Programme. Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26.
  6. J.S.Dean. Murder most foul.
  7. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  8. "The Good, the Bad and the Talented: Young Drivers' Perspectives on Good Driving and Learning to Drive" (PDF). Road Safety Research Report No. 74. Transport Research Laboratory. 2007. Archived from the original (PDF) on 2008-02-16. பார்க்கப்பட்ட நாள் 2008-01-04. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)