எம். எம். அப்துல் அமீது
மணதாத் மக்கர் பிள்ளை அப்துல் அமீது (Manadath Mackar Pillay Abdul Hameed) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். ஒரு வங்கியாளர் மற்றும் கொடைவள்ளல் என்றும் இவர் அறியப்படுகிறார்.[1][2] ஒரு முன்னணி முந்திரி மற்றும் எலுமிச்சைப் புல் ஏற்றுமதியாளராக புகழ் பெற்றார். இவரது மருமகன் பிகே அப்துல் கப்பூரால் நிறுவப்பட்ட முசுலீம் கல்விச் சங்கத்தின் ஆரம்பகால ஆதரவாளராகவும் புரவலராகவும் அப்துல் அமீது இருந்தார்.[3]
எம். எம். அப்துல் அமீது M. M. Abdul Hameed | |
---|---|
എം. എം. അബ്ദുൽ ഹമീദ് | |
தாய்மொழியில் பெயர் | എം. എം. അബ്ദുൽ ഹമീദ് |
பிறப்பு | ஆலுவா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 2 நவம்பர் 1914
இறப்பு | 4 செப்டம்பர் 1971 ஆலுவா, கேரளம், இந்தியா | (அகவை 56)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | அமீது பிள்ளை |
பணி | தொழிலதிபர் கொடை வள்ளல் ஏற்றுமதியாளர் |
வாழ்க்கைத் துணை | ஏ.ஏ. அமினா உம்மா |
பிள்ளைகள் | 9 |
1965 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் பாரத மாநில வங்கியுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு, ஆலுவா நகராட்சியின் முதன்மை நிதி நிறுவனமாக விளங்கிய ஆலுவா வங்கியின் [4] இயக்குநராகவும் இவர் பணியாற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅப்துல் அமீது, ஆலுவாவின் பிரபல தொழிலதிபரும் அரசியல்வாதியுமான எம்.கே.மக்கர் பிள்ளைக்கு மூன்று மகன்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[3]
1935 ஆம் ஆண்டில் , திருவிதாங்கூர் இராச்சியத்தின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான எம்.கே.மக்கர் பிள்ளை & சன்சு நிறுவனத்தின் பங்குதாரரானார். அத்தியாவசிய எண்ணெய்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதன் மூலம் மலபார் கடற்கரையில் பிரித்தானிய வர்த்தக நிறுவனங்களின் ஏகபோகத்தை முதன்முதலில் இந்நிறுவனம் போட்டியிட்டது.[5] நிறுவனம் 1941 ஆம் ஆண்டு மக்கர் பிள்ளை & சன்சு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டபோது, அமீது அதன் நிர்வாக இயக்குநரானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prominent industrialist M. M. Abdul Hameed dead". The New Indian Express (Cochin). 5 September 1971. இணையக் கணினி நூலக மையம்:243883379.
- ↑ "എം. എം. അബ്ദുൽ ഹമീദ് നിര്യാതനായി". மலையாள மனோரமா. 5 September 1971.
- ↑ 3.0 3.1 "കാലം മറക്കാത്ത കർമയാഗി". Mathrubhumi. 2 November 2017."കാലം മറക്കാത്ത കർമയാഗി". Mathrubhumi. 2 November 2017. ISSN 2347-8497.
- ↑ "SBT Red Herring Prospectus" (PDF). SEBI (in Indian English). Archived from the original (PDF) on 10 January 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
- ↑ "റയോൺസിൻ്റെ സൈറൺ മുഴങ്ങുന്നു, "പ്രത്യാശയിലേക്ക് "". NewsWaves (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-10. Archived from the original on 2020-06-20. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.