எரிமலைக் குளிர்காலம் 536

536-ஆம் ஆண்டின் எரிமலைக் குளிர்காலம் (volcanic winter of 536), கிபி 536-ஆம் ஆண்டில் புவியின் வடக்கு அரைக்கோளத்தில் எரிமலை வெடிப்பினால் உமிழப்பட்ட வேதியியல் தூசிகள், புவியின் வளிமண்டலத்தில் பரவியதால், சூரியனின் கதிர்கள் மறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கம் இன்றி, மிகவும் கடுமையான குளிர்ச்சியான காலநிலை பல மாதங்கள் நீடித்துக் காணப்பட்டது.[1]

எரிமலைக் குளிர்காலத்தின் பெரும்பாலான கணிப்புகள், கிழக்கு உரோமைப் பேரரசான பைசாந்தியப் பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டினோப்பிளில் உள்ள வரலாற்று ஆசிரியர்களிடமிருந்து கிடைத்தவை ஆகும். இந்த எரிமலைக் குளிர்கால வெப்பநிலையின் தாக்கம் ஐரோப்பாவிற்கு அப்பாலும் உணரப்பட்டது. கிபி 536-ஆம் ஆண்டின் முற்பகுதியில் (அல்லது 535-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்) எரிமலை வெடிப்பால் பெருமளவிலான சல்பேட்டு தூசிகள் வளிமண்டலத்தில் பரவியது. இது பூமியின் மேற்பரப்பை அடையும் சூரிய கதிர்வீச்சை தடுத்து, பல ஆண்டுகளாக வளிமண்டலத்தை குளிர்வித்தது. மார்ச் 536-ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபிள் நகரம் இருண்ட வானம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலையை அனுபவிக்கத் தொடங்கியது. 536-ஆம் ஆண்டின் கோடை வெப்பநிலை ஐரோப்பாவில் இயல்பை விட 2.5 பாகை செல்சியஸ் (4.5 பாகை பாரன்ஹீட்) குறைந்து காணப்பட்டது. 536-ஆம் ஆண்டின் எரிமலை குளிர்காலத்தின் நீடித்த தாக்கம் 539-540-ஆம் ஆண்டு வரை நீடித்தது. மற்றொரு எரிமலை வெடிப்பினால் கோடை வெப்பநிலை ஐரோப்பாவில் இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் (4.9 டிகிரி பாரன்ஹீட்) வரை குறைந்துள்ளது.[2]

கிபி 547-ஆம் ஆண்டில் மற்றொரு எரிமலை வெடிப்பினால் வளிமண்டலத்தை மூடிய தூசிகளால் புவியின் குளிர்காலத்தை நீட்டித்தது. 541-ஆம் ஆண்டில் பரவிய பிளேக் நோயுடன் எரிமலை வெடிப்புகள், பயிர்ச் சேதங்கள், பஞ்சம் மற்றும் மில்லியன் கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியது. மேலும் 536-ஆம் ஆண்டு முதல் 660-ஆம் ஆண்டு வரை நீடித்த பழங்கால சிறிய அளவில் பனி யுகம் தொடங்கியது.[3]இடைக்கால வரலாற்று அறிஞர் மைக்கேல் மெக்கார்மிக், 536-ஆம் ஆண்டு என்பது வரலாற்றில் மிக மோசமான ஆண்டு என்று எழுதியுள்ளார். "உயிருடன் இருப்பதற்கான மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றின் தொடக்கமாக இது இருந்தது, இல்லாவிட்டாலும் மோசமான ஆண்டு." எனக்குறித்துள்ளார்.

வரலாற்று விளைவுகள்

தொகு

இடம்பெயர்வு காலத்தின் முடிவில் ஸ்காண்டிநேவிய உயரடுக்கினரால் தங்கப் பதுக்கல்கள் குவிக்கப்பட்டதன் காரணமாக கிபி 536-ஆம் ஆண்டு எரிமலை குளிர்கால நிகழ்வு மற்றும் அதைத் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. கடவுள்களை திருப்திப்படுத்தவும் சூரிய ஒளியை மீண்டும் பெறவும் தங்கம் ஒரு பலியாக இருக்கலாம் எனக்கருதப்பட்டது. [4][5] ஃபிம்புல்விண்டர் மற்றும் ரக்னாரோக் போன்ற புராண நிகழ்வுகள் நிகழ்வின் கலாச்சார நினைவகத்தின் அடிப்படையில் அமைந்ததாகக் கருதப்படுகிறது.[6]

டேவிட் கீஸ் எழுதிய ஒரு புத்தகத்தில், எரிமலைக் குளிர்கால காலநிலை மாற்றத்தால், பிளேக் நோய் (541-549) பரவியது, கார்பேத்திய அவார் இன மக்களின் வீழ்ச்சி, மேற்கு நோக்கிய மங்கோலியப் பழங்குடியினரின் இடம்பெயர்வு போன்ற பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்களித்தன என்று ஊகிக்கிறது. மேலும் இக்கால கட்டத்திக் பாரசீகத்தின் சாசானியப் பேரரசு மற்றும் இந்தியாவின் குப்தப் பேரரசுகளின் சரிவு, இசுலாமின் எழுச்சி, துருக்கிய பழங்குடியினரின் விரிவாக்கம் மற்றும் மெக்சிகோவின் தியோத்திவாக்கன் நகரத்தின் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறுகிறார்.

இருப்பினும் கீஸ்சின் கருத்துக்கள் முதன்மையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கீஸின் புத்தகத்தை மதிப்பாய்வு செய்த பிரித்தானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கென் டார்க் கருத்து தெரிவிக்கையில், "புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான ஆதாரங்களில் பெரும்பாலானவை மோசமான ஆதாரங்கள் அல்லது தவறான ஆதாரங்களின் அடிப்படையில் மிகவும் விவாதத்திற்குரியவை எனக்குறிப்பிட்டுள்ளார். அதன் மைய ஆய்வறிக்கையை நிரூபிக்கத் தவறியது மற்றும் விவாதிக்கப்பட்ட பல மாற்றங்களுக்கு உறுதியான விளக்கத்தை வழங்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.[7]

வரலாற்றாசிரியர் ஆண்ட்ரூ ப்ரீஸ் தனது சமீபத்திய புத்தகத்தில் (2020) கேம்லான் போர் உட்பட, கிங் ஆர்தர் நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை, முந்தைய ஆண்டு பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பஞ்சத்தின் விளைவாக 537-ஆம் ஆண்டில் நடந்ததாக வாதிடுகிறார்.[8]

அடிக்குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Abbott, D. H.(December 2008). "Magnetite and Silicate Spherules from the GISP2 Core at the 536 A.D. Horizon". {{{booktitle}}}, 41B–1454. Abstract #PP41B-1454.
  2. Harper, Kyle (2017). The Fate of Rome. Princeton: Princeton University Press. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691166834.
  3. Peregrine, Peter. "Climate and social change at the start of the Late Antique Little Ice Age". Research Gate. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1177/0959683620941079. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  4. Morten Axboe (2001). "Året 536". Skalk (4): 28–32. 
  5. Morten Axboe (1999). "The year 536 and the Scandinavian gold hoards". Medieval Archaeology 43: 186–188. http://ads.ahds.ac.uk/catalogue/adsdata/arch-769-1/ahds/dissemination/pdf/vol43/43_186_188.pdf. பார்த்த நாள்: 2022-02-22. 
  6. Ström, Folke: Nordisk Hedendom, Studentlitteratur, Lund 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 91-44-00551-2 (first published 1961) among others, refer to the climate change theory.
  7. Ken Dark (November 1999). "Jumbling old events with modern myths". British Archaeology (49). http://www.britarch.ac.uk/ba/ba49/ba49book.html. பார்த்த நாள்: 2020-07-14. 
  8. Breeze, Andrew (2020). British Battles 493-937: Mount Badon to Brunanburh. London: Anthem Press. pp. 13–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781785272233. JSTOR j.ctvv4187r.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலைக்_குளிர்காலம்_536&oldid=3731023" இலிருந்து மீள்விக்கப்பட்டது