எர்மோன் மலை
எர்மோன் மலை (Mount Hermon, அரபு மொழி: جبل حرمون , جبل الشيخ / ALA-LC: Jabal al-Shaykh / "Mountain of the Chief" "Jabal Haramun"; எபிரேயம்: הר חרמון, Har Hermon, "Mount Hermon") என்பது லெபனான் கிழக்கு மலைத் தொடரிலுள்ள மலைக் கூட்டமாகும். இதன் சிகரம் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடைப்பட்ட எல்லையில் பரவியுள்ள[1] இது கடல் மட்டத்திலிருந்து 2,814 மீட்டர் (9,232 அடி) உயரத்தில் அமைந்துள்ளதும், சிரியாவின் உயரமிக்க இடமுமாகும்.[2] சிரியாவிற்கும் இசுரேல் கைப்பற்றிய பகுதிக்கிடையிலான ஐ.நா. ஈடுபாடற்ற நிலை அவதானிப்பு படை பிரதேசத்தில் உள்ள உச்சியில் “எர்மோன் உணவு விடுதி” அமைந்துள்ளது. இங்கே உலகில் அதிகளவு நிரந்தர ஐ.நா.வின் படைகள் அமர்த்தப்பட்டுள்ளன.[3] எர்மோன் மலையின் தென் சரிவுப் பகுதிகள் இசுரேல் கைப்பற்றிய கோலான் குன்றுகள் வரை பரவிக் காணப்படுகின்ற இடத்தில் "எர்மோன் மலை பனி நடை ஓய்விடம்" அமைந்துள்ளது.[4] இங்குள்ள உச்சி 2,236 மீட்டர் (7,336 அடி) வரை உயர்ந்து இசுரேலிய கட்டுப்பட்டுப் பிரதேசத்தில் உயரமான இடமாகக் காணப்படுகின்றது.
எர்மோன் மலை | |
---|---|
Mount Hermon Arabic: Jabal ash-Shaykh Hebrew: Har Hermon | |
கோலான் குன்றுகளில் உள்ள பென்டல் மலையிலிருந்து பார்க்கும்போதுஎர்மோன் மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,814 m (9,232 அடி) |
புடைப்பு | 1,804 m (5,919 அடி) |
பட்டியல்கள் | நாட்டின் உயரமான இடம் அசாதாரன சிறப்புமிக்க உச்சி |
புவியியல் | |
அமைவிடம் | சிரியா (தென் சரிவு இசுரேல் கைப்பற்றிய கோலான் குன்றுகள் உள்ள இடத்தில் அமைந்துள்ளது) லெபனான் |
மூலத் தொடர் | லெபனான் கிழக்கு மலைத் தொடர் |
உசாத்துணை
தொகு- ↑ ACME Mapper terrain display
- ↑ "CIA World Fact Book: Syria". 14 November 2011. Archived from the original on 29 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.
highest point: Mount Hermon 2,814 m
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Lovegrove, Dwayne. "A mini Nijmegen, but with gravel". National Defence and the Canadian Forces. Archived from the original on 29 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The World's 18 Strangest Ski Resorts: The Mount Hermon Ski Resort, Shannon Hassett, Popular Mechanics