எலவஞ்சேரி

பாலக்காடு மாவட்ட சிற்றூர்

எலவாஞ்சேரி (Elavancherry) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடுக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரும், கிராம ஊராட்சியும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நெல்லியம்பதி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. உயரமான பனை மரங்களும், பசுமையான நெல் வயல்களும் அதன் பின்னணியில் அழகான மலைகள் நிறைந்த பகுதியாக எலவஞ்சேரியின் நிலப்பரப்பு உள்ளது. இப்பகுதி திரைப்படங்கள், விளம்பரப் படங்களை படமாக்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. எலவஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் கேரளம் முழுவதிலும் அதிக அளவில் அரசு ஊழியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். ஊரில் உள்ள சுமார் 50% குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது கேரள மாநில அரசு ஊழியராக பணியாற்றுகின்றனர். திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், ஐநாவின் முன்னாள் துணைச் செயலாளருமான சசி தரூர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்.[2]

எலவஞ்சேரி
சிற்றூர்
அடைபெயர்(கள்): Land of the swaying Palm trees, 11cherry
எலவஞ்சேரி is located in கேரளம்
எலவஞ்சேரி
எலவஞ்சேரி
கேரளத்தில் அமைவிடம்
எலவஞ்சேரி is located in இந்தியா
எலவஞ்சேரி
எலவஞ்சேரி
எலவஞ்சேரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°36′10″N 76°38′40″E / 10.60278°N 76.64444°E / 10.60278; 76.64444
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்17,537
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
 • சிறுபான்மைதமிழ்[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678508
வாகனப் பதிவுKL-70

மக்கள்வகைப்பாடு

தொகு

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, எலவஞ்சேரியின் மக்கள் தொகை 17,537 ஆகும். அதில் 8,495 பேர் ஆண்களும், 9,042 பேர் பெண்களுமாவர். இப்பகுதியில் மலையாளம் அதிகமாக பேசப்படும் மொழியாகவும், அதற்கடுத்து தமிழும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 80% இந்துக்கள் உள்ளனர். மாநிலத்தின் மற்ற இடங்களைப் போலவே எலவஞ்சேரியின் சில பகுதிகளிலும் முசுலிம்களும், கிறித்தவர்களும் காணப்படுகின்றனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Table C-16 Population by Mother Tongue: Kerala". www.censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  2. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
  3. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலவஞ்சேரி&oldid=4163127" இலிருந்து மீள்விக்கப்பட்டது