எல்லாரும் இந்நாட்டு மன்னர்
தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(எல்லோரும் இந்நாட்டு மன்னர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எல்லாரும் இந்நாட்டு மன்னர் 1960-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் மா. லட்சுமணன் என்பவர். படத்துக்குத் திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி எழுதினார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்தார்.
எல்லாரும் இந்நாட்டு மன்னர் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | டி. பிரகாஷ் ராவ்[1] |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் |
கதை | மா. லட்சுமணன் |
திரைக்கதை | மு. கருணாநிதி |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஏ. வின்சென்ட் |
படத்தொகுப்பு | ஜி. டி. ஜோஷி |
கலையகம் | ஜுபிடர் பிக்சர்ஸ்[2] |
வெளியீடு | சூலை 1, 1960(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காலஞ் சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது -
"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக் காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே"
குறிப்பு
தொகுஇலங்கையரான கவிஞர் ஈழத்து இரத்தினம் இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.
பாடல்கள்
தொகுபாட்டுப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[3]
வரிசை எண் |
பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | காலஅளவு (mm:ss) |
---|---|---|---|---|
1 | எல்லாரும் இந்நாட்டு மன்னரடா | டி. எம். சௌந்தரராஜன் ஏ. எல். ராகவன் எல். ஆர். ஈஸ்வரி |
எஸ். இரத்தினம் | 03:00 |
2 | வெற்றி பெற்ற மாமனுக்கு | பி. சுசீலா கே. ராணி |
கு. மா. பாலசுப்பிரமணியம் | 03:18 |
3 | விஷயம் ஒண்ணு சொல்லப் போறேன் | கே. ஜமுனாராணி எல். ஆர். ஈஸ்வரி |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 02:51 |
4 | மிருக இனம் தான் உயர்ந்தது | திருச்சி லோகநாதன் ஏ. எல். ராகவன் பி. சுசீலா |
இரா. பழனிச்சாமி | 04:04 |
5 | என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே | டி. எம். சௌந்தரராஜன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 03:18 |
6 | மனமென்னும் வானிலே | ஏ. எம். ராஜா பி. சுசீலா |
இரா. பழனிச்சாமி | 03:17 |
7 | பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து | சி. எஸ். ஜெயராமன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 03:26 |
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (20 அக்டோபர் 2012). "Mathar Kula Manickam 1956". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2016.
- ↑ "Fascinating journey to fame". தி இந்து. 28 பெப்ரவரி 2002. Archived from the original on 23 நவம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ எல்லாரும் இந்நாட்டு மன்னர் பாட்டுப் புத்தகம். சென்னை: ஐடியல் பிரிண்டேர்ஸ், மெட்ராஸ்-1.