எழிலன் நாகநாதன்

எழிலன் நாகநாதன் (Ezhilan Naganathan) ஒரு தமிழ்நாட்டு அரசியலர், மருத்துவர், மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னாள் முதலவர் கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்துள்ளார்.தற்போது மு. க. ஸ்டாலின் தனி மருத்துவராக இருக்கிறார்.[1][2][3][4][5]

எழிலன் நாகநாதன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் கு. க. செல்வம்
தொகுதி ஆயிரம் விளக்கு
தனிநபர் தகவல்
பிறப்பு 27 சூன் 1979 (1979-06-27) (அகவை 44)
மதராசு
(தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமை இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) பிரியதர்ஷினி
உறவினர் அஞ்சலை அம்மாள் (கொள்ளுப்பாட்டி)
க. இரா. ஜமதக்னி (தாய்வழித் தாத்தா)
பிள்ளைகள் 2
பெற்றோர் மு.நாகநாதன்
சாந்தி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இவர் மு.நாகநாதன் – ஜமதக்னி சாந்தி இணையரின் மகனாக பிறந்தார்.இவரின் தந்தை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவராக இருந்துள்ளார்.இவரின் தாய்வழி தாத்தா க. இரா. ஜமதக்னி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.

சமூக தொண்டு தொகு

"இளைஞர் இயக்கம்" என்ற அமைப்பையும் நிறுவி நடத்தி வரும் இவர் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உரத்துக் குரல் கொடுத்தவர். கூடங்குளம், நெடுவாசல் நீட் தேர்வு, சேலம் எட்டு வழிச்சாலை,சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள், கோவிட் தடுப்புப் பணிகள் என அனைத்து சமூகப் பிரச்சினைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர்.

அரசியல் தொகு

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

கல்வி தொகு

இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் படித்தார். அதனை தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், எம்.டி. படித்துப் பட்டம் பெற்றார்.

காவேரி மருத்துவமனையில் பொதுநல மருத்துவராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Megha Kaveri, தொகுப்பாசிரியர் (MARCH 12, 2021). A leading voice against NEET: Who is DMK’s Thousand Lights candidate Dr Ezhilan?. thenewsminute. https://www.thenewsminute.com/article/leading-voice-against-neet-who-dmk-s-thousand-lights-candidate-dr-ezhilan-145123?. 
  2. ஆயிரம் விளக்கு தொகுதி: மகனா, மருமகனா.. யார் சிபாரிசை ஏற்பது? - குழப்பத்தில் ஸ்டாலின்!. விகடன் இதழ். 11 மார்ச் 2021. https://www.vikatan.com/government-and-politics/politics/fight-for-thousand-lights-assembly-constituency-in-dmk. 
  3. சொல்கிற இடத்தில் இருந்தேன்; தற்போது செய்கிற இடத்துக்கு வந்துள்ளேன்: திமுக வேட்பாளர் எழிலன் பேட்டி!. தி ஹிந்து தமிழ் இதழ். 11 மார்ச் 2021. https://www.hindutamil.in/news/tamilnadu/647253-tn-election.html. 
  4. தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிக்கப்போவது எந்த கட்சியின் விளக்கு?. ஜீ தமிழ். 24 மார்ச் 2021. https://zeenews.india.com/tamil/elections/tn-assembly-election-2021-it-is-war-between-stardom-and-ideology-in-thousand-lights-this-time-360017. 
  5. உண்மையில் நின்று துடித்ததா கருணாநிதி இதயம்? - விடை சொல்லும் மருத்துவர். பி.பி.சி தமிழ். 14 அகத்து 2018. https://www.bbc.com/tamil/india-45172234. 
  6. "16th Assembly Members". Government of Tamil Nadu. http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html. பார்த்த நாள்: 2021-05-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழிலன்_நாகநாதன்&oldid=3745503" இருந்து மீள்விக்கப்பட்டது