திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் (Sri Ramaswamy Memorial University) அல்லது ஆங்கில முதலெழுத்துச் சுருக்கமாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் (SRM University) தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள இருபாலரும் படிக்ககூடிய ஓர் தனியார்த்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இதன் வளாகங்கள் தமிழ்நாட்டின் சென்னையில் காட்டாங்குளத்தூர், ராமாபுரம், வடபழனி ஆகிய மூன்று இடங்களிலும் வட இந்தியாவில் தில்லி அருகே மோடி நகரிலும், அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் நகரிலும், வடகிழக்கிந்தியாவில் சிக்கிம் மாநிலம் காங்டாக் நகரிலும் உள்ளன. முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியாக துவங்கிய இக்கல்வி நிறுவனம் 2006ஆம் கல்வியாண்டில் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்றது. இது இந்தியாவின் முதன்மை பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சிறப்பான ஒன்றாக இடம் பெற்று வருகிறது.[1]
குறிக்கோளுரை | கல், முன்னேறு, வழிநடத்து Learn, Leap, Lead |
---|---|
வகை | தனியார்த்துறை, நிகர்நிலை |
உருவாக்கம் | 1985 |
வேந்தர் | த. இரா. பச்சமுத்து |
மாணவர்கள் | 50,000 |
பட்ட மாணவர்கள் | 40,000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 10,000 |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர், 250 ஏக்கர்கள் |
இணையதளம் | http://www.srmuniv.ac.in |
வளாகங்கள்
தொகுசென்னை காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள வளாகம்தான் பிரதான வளாகம் ஆகும். இது சென்னை நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையான (NH-45) ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் , மருத்துவம், கலை மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளன. இதனுடன் எஸ்.ஆர்.எம் மேலாண்மைப்பள்ளியும் உள்ளது. மேலும் இங்கு எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை, வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, வள்ளியம்மை பல்தொழில்நுட்ப கல்லூரி ஆகியவையும் அமைந்துள்ளன. இங்கு புதிதாக எஸ்.ஆர்.எம் சட்டப்பள்ளி ஒன்றையும் அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.[2]
இவ்வளாகத்தில் 1200 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை ஒன்று உள்ளது. மேலும் இங்கு எஸ்.ஆர்.எம் மூன்று நட்சத்திர விடுதியும் உள்ளது. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன:
- 250 ஏக்கர் பரப்பளவில் 42 கட்டிடங்கள்
- நீச்சல் குளமுடன் கூடிய மூன்று நட்சத்திர உணவு விடுதி
- லட்சக்கணக்கான புத்தகங்களுடனும் இணையதளத்துடனும் படிக்கும் வசதியுடைய மைய நூலகம்
- குளிர்சாதன வசதியுடன் 4000 பேர் அமரக்கூடிய கலையரங்கம். இது தெற்காசியாவில் உள்ள மிகப்பெரிய கலையரங்கங்களில் ஒன்று
- 5000 கணினிகளையும் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை நிர்வகிக்கும் ஆற்றலுள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவு மேலாண்மை
- நொடிக்கு 32 மெகாபைட் அளவு வேகமுள்ள இணையதள இணைப்பு
- நவீன விரிவுரை கூடங்கள் மற்றும் வகுப்பறைகள்
- பல்கலைக்கழக வளாகம் முழுவதும் (WiFi) எனப்படும் கம்பியற்ற இணையதள தொழில்நுட்ப சேவை
- ஆங்கிலம், யேர்மன், பிரெஞ்சு, சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கான தனித்தனி மொழி ஆய்வகங்கள்
- 7000 பேர் தங்கக்கூடிய 14 ஆண்கள் விடுதிகள், 4000 பேர் தங்கக்கூடிய 7 பெண்கள் விடுதிகள், வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான தென்னிந்திய, வடஇந்திய, தாய் மற்றும் சீன உணவுகளுடன் கூடிய விடுதிகள்
- விளையாட்டு அரங்கங்கள் மற்றும் திடல்கள்
- 40க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பல்கலைக்கழக பேருந்துகள்
- அனைத்து உணவுகளும் கிடைக்கக்கூடிய 15 சிறு உணவகங்கள்
- ஹிக்கின்போத்தம்ஸ் புத்தக நிலையம், கபே காபி டே, சப்வே, கோகோ-கோலா மகிழ்ச்சி நிலையம், அமுல், பல்பொருள் அங்காடிகள் போன்ற சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மதுவற்ற உல்லாச விடுதி (Pub)
- வங்கிகள் மற்றும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திர(ஏடிஎம்) வசதிகள்
- அனைத்து மதங்களுக்கும் பிராத்தனைக்கூடங்கள்
இவ்வளாகத்தின் மற்றொரு சிறப்பு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், 48 வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்களை கொண்டிருப்பதே ஆகும்.[3]
ராமாபுரம் வளாகம்
தொகு27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரியும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், கலை அறிவியல் கல்லூரியும் உள்ளன. மேலும் இங்கு எஸ்.ஆர்.எம் குழுமத்தின் மற்றொரு பொறியியல் கல்லூரியான எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியும் உள்ளது. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன:
- குளிர்சாதன வசதியுடைய கலையரங்கம்
- நொடிக்கு 8 மெகாபைட் அளவு வேகமுள்ள இணையதள இணைப்பு
- 150 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை மற்றும் பல் மருத்துவமனை
- மாணவ மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள்
- 33 பல்கலைக்கழக பேருந்துகள்
- விளையாட்டு அரங்கங்கள் மற்றும் திடல்கள்
- வங்கி மற்றும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திர வசதிகள்[4]
வடபழனி வளாகம்(சென்னை நகர வளாகம்)
தொகுஇவ்வளாகம்தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சிறிய வளாகமாகக் கருதப்படுகிறது. இங்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை, கணினித்தொழில்நுட்பம் மற்றும் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியும் உள்ளன. மேலும் இவ்வளாகத்தின் சிறப்பம்சமாக SIMS எனப்படும் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் மெடிக்கல் சயின்ஸ் என்ற அதிநவீன மருத்துவமனை அமையப்பெற்றுள்ளது. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன:
- நொடிக்கு 12 மெகாபைட் அளவு வேகமுள்ள இணையதள இணைப்பு
- 345 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை
- நவீன விரிவுரை கூடங்கள் மற்றும் வகுப்பறைகள்
- அதிநவீன நூலகம்
- கருத்தரங்கக் கூடங்கள்[5]
25 ஏக்கர் பரப்பளவில் பசுமையான சூழலில் டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் ஆசிரியர் கல்வி கல்லூரிகள் உள்ளன. இவ்வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் உள்ளன:
- குளிரூட்டப்ப வகுப்பறைகள்
- 5 இலட்ச சதுர அடியில் வளாகம்
- குளிர்சாதன வசதியுடைய கலையரங்கம் மற்றும் கருத்தரங்க கூடங்கள்
- மாணவ மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள்
- உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள்
- 15 பல்கலைக்கழக குளிர்சாதன பேருந்துகள்.[6]
150 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ள இவ்வளாகம், ராஜீவ் காந்தி கல்வியியல் நகரத்தில் உள்ளது. இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை ஆகிய படிப்புகள் 2014ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்படுகின்றன. தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் இவ்வளாகம் முழுமையாக 2015ஆம் ஆண்டு முதல் செயல்படத்துவங்கும். மேலும் இங்கு சட்டம், நூலக மற்றும் தகவல் அறிவியல் ,நிதி மற்றும் வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகிய கல்லூரிகள் அமையப்பெற உள்ளன.[7]
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தனது புதிய வளாகத்தை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில், சிக்கிம் மாநில தலைநகரான காங்டாக்கில் கட்டப்பட்டுள்ள இவ்வளாகம், 2014ஆம் கல்வியாண்டு முதல் செயல்படத்துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு முதலில் பிபிஏ, எம்பிஏ, பி.காம் போன்ற படிப்புகளுக்கு தொலைதூர கல்வியையும், பின் பொறியியல் கல்வியையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[8]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- மாசா நசீமா - விஞ்ஞானி.
- ரவி குந்துரு - Ventech தீர்வுகள் தலைமை நிர்வாக அதிகாரி.
- டாக்டர் ஸ்ரீராமசாமி - ஆர்கன்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர்.
- முரளி விஜய் - இந்திய கிரிக்கெட் வீரர்.
- மனாஸ் சாவல் - நடிகர்.
- அபய் ஜோத்புர்கர் - சிங்கர்.
- டி.எஸ் சுரேஷ் - திரைப்பட எடிட்டர்.
- நிவாஸ் பிரசன்னா - இசையமைப்பாளர் / சிங்கர்.
- நிவேதா தாமஸ் - மெயின்ஸ்ட்ரீம் நடிகர். [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ {cite web | last = SRM University | title = Ranking Of Indian Universities | date =2009-03-30 | url = http://www.srmuniv.ac.in/downloads/times_of_india_ranking.pdf பரணிடப்பட்டது 2011-01-04 at the வந்தவழி இயந்திரம் | accessdate = 2009-03-30 | location=Chennai, India}}
- ↑ http://www.newindianexpress.com/cities/chennai/Counselling-Kicks-off-at-SRM/2014/05/20/article2233714.ece1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
- ↑ http://srmuniversity.ac.in
- ↑ http://www.newindianexpress.com/cities/chennai/Counselling-Kicks-off-at-SRM/2014/05/20/article2233714.ece1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-12-06.