ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு
ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு (Isobutyl acetate) என்பது C6H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். 2-மெத்தில்புரோபைல் எத்தனோயேட்டு அல்லது β- மெத்தில்புரோபைல் அசிட்டேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஐசோபியூட்டனாலுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு பொது கரைப்பானாக கருதப்படும் இது அரக்கு மற்றும் நைட்ரோசெல்லுலோசு போன்றவற்றுக்கு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. பல எசுத்தர்களைப் போலவே குறைந்த செறிவுகளில் பழம் அல்லது மலர் வாசனையைக் கொண்டுள்ளது. ராசுபெர்ரி, பேரிக்காய் மற்றும் பிற தாவரங்களில் இயற்கையாகவே ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு காணப்படுகிறது. அதிக செறிவு கொண்ட இச்சேர்மம் விரும்பத்தக்காத துர்நாற்றம் கொண்டதாகும். குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் தலைவலி, மன அழுத்தம் போன்ற மத்திய நரம்பு மண்டலத்தின் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரோப்பைல் அசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு
ஐசோபியூட்டைல் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
110-19-0 | |
ChEBI | CHEBI:50569 |
ChEMBL | ChEMBL46999 |
ChemSpider | 7747 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8038 |
| |
UNII | 7CR47FO6LF |
பண்புகள் | |
C6H12O2 | |
வாய்ப்பாட்டு எடை | 116.16 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | பழம், மலர்[3] |
அடர்த்தி | 0.875 கி/செ.மீ3, நீர்மம் |
உருகுநிலை | −99 °C (−146 °F; 174 K) |
கொதிநிலை | 118 °C (244 °F; 391 K) |
சிறிதளவு கரையும் 0.63–0.7 கி/100கிராம் 20 °செல்சியசில் | |
ஆவியமுக்கம் | 13 மி.மீ.பாதரசம் (20 °செல்சியசு)[3] |
−78.52·10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 18 °C; 64 °F; 291 K [3] |
வெடிபொருள் வரம்புகள் | 1.3–10.5%[3] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4673 மி.கி/கி.கி (முயல், வாய்வழி) 13,400 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[4] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
நேர எடை சராசரி ஒரு மில்லியனுக்கு 150 பகுதிகள் (700 மி.கி/மீ3)[3] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
நேர எடை சராசரி ஒரு மில்லியனுக்கு 150 பகுதிகள் (700 மி.கி/மீ3)[3] |
உடனடி அபாயம்
|
மில்லியனுக்கு 1300 பகுதிகள்[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐசோபியூட்டைல் அசிடேட்டு தயாரிப்பதற்கான பொதுவான முறை பிசர் எசுத்தராக்கல் வினையாகும். முன்னோடி சேர்மங்களான ஐசோபியூட்டைல் ஆல்ககால் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியவை வலிமையான அமிலத்தின் முன்னிலையில் சூடேற்றப்படுகின்றன.
ஐசோபியூட்டைல் அசிடேட்டிற்கு மூன்று மாற்றியன்கள் உள்ளன: என்-பியூட்டைல் அசிடேட்டு மூவிணைய-பியூட்டைல் அசிடேட்டு மற்றும் ஈரிணைய-பியூட்டைல் அசிடேட்டு போன்றவையும் பொதுவான கரைப்பான்களாக உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Isobutyl acetate Chemical Profile, Canadian Centre for Occupational Health and Safety
- ↑ Isobutyl acetate at chemicalland21.com
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0351". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ "Isobutyl acetate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).