ஐடன் பிளிசார்டு
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
ஐடன் கிரேகு பிளிசார்டு (Aiden Craig Blizzard, சூன் 27, 1984) என்பவர் தென் இரெட்பேக்சு அணியின் உறுப்பினராகவுள்ள ஆத்திரேலியத் துடுப்பாட்டவீரர் ஆவார்.[1] இவர் இந்தியப் பிரீமியர் இலீகில் மும்பை இந்தியன்சு அணியில் விளையாடி வருகின்றார்.[2] இவர் இருபது20 போட்டிகளில் சனவரி 1, 2007இல் நடந்த தென் ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, அப்போட்டியிலேயே எட்டு ஆறுகள் உள்ளடங்கலாக 38 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.[3] அப்போட்டியில் 23 பந்துகளிலேயே அரைச்சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஐடன் கிரேகு பிளிசார்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடக்கை நடுத்தரம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | மும்பை இந்தியன்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010/11–தற்போது | தென் இரெட்பேக்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009/10 | இராச்சுசாகிப் பிரிவு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005/06–2009/10 | விக்டோரியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்வோ, ஏப்பிரல் 29 2012 |
துடுப்பாட்ட வாழ்க்கை
தொகு- மெல்பேர்ணில் இடம்பெற்ற தாசுமானியாவுக்கு எதிரான போட்டியில் பட்டியல் அளவில் தனது முதல் போட்டியை விளையாடினார்.[4] ஆனால், ஓட்டங்கள் எதையும் பெறாமலே ஆட்டமிழந்தார்.[5]
- ஆங்கிலப் புத்தாண்டான சனவரி 1, 2007 அன்று தென் ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விக்டோரியா புசுரேஞ்சர்சு அணிக்காகத் தனது முதல் இருபது20 போட்டியில் விளையாடி 89 ஓட்டங்களைக் குவித்தார்.
- 2007இல் திசம்பர் 10இலிருந்து திசம்பர் 12 வரை தாசுமானியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் மூலம் முதல் தர துடுப்பாட்டத்தில் விளையாடத் தொடங்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] ஐடன் பிளிசார்டு (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மும்பை இந்தியன்சு அணி {{ஆ}]
- ↑ தென் ஆத்திரேலியா எதிர் விக்டோரியா (ஆங்கில மொழியில்)
- ↑ ஐடன் பிளிசார்டு (ஆங்கில மொழியில்)
- ↑ விக்டோரியா எதிர் தென் ஆத்திரேலியா (ஆங்கில மொழியில்)