ஐதராபாத்து ஊறுகாய்

இந்திய ஊறுகாய் வகை

ஐதராபாத்து ஊறுகாய் (ஆங்கிலம்: Hyderabadi pickle; உருது:حیدرآبادی اچار) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் தயாரிக்கப்படும் ஒரு வகை இந்திய ஊறுகாய் ஆகும்.[1] இந்த ஊறுகாய் பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்படலாம் (குறிப்பாக மாங்காய்) இயற்கையான செயல்முறைகள் மூலம் முதிர்ச்சியடைந்த காய்கறிகள் மற்றும் பாரம்பரிய முறையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்களைக்கொண்டு இந்த ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.[2]

மிர்பூர் காஸ், சிந்து, பாக்கித்தானில் பாரம்பரியமாகப் பூர்வீகமாக இருக்கும் ஒரு பழமாக, மாம்பழங்கள் பல பாக்கிதானிய உணவுகள் மற்றும் சமையல் வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன - ஐதராபாத் மாங்காய் ஊறுகாய் ஒரு முக்கிய உதாரணம்.

இவை இவற்றின் கலவையான சுவைகளுக்காக அறியப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மசலாசுவையுடன் சில காரமாகவும் இருக்கும். இந்தத் தயாரிப்பு வணிகப் பெயருடன் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஐதராபாத் கலப்பு ஊறுகாய்

தொகு

இதன் முக்கிய பொருட்கள் மாங்காய், கேரட், தேசிப்பழம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பிற மசாலாப் பொருட்கள்.

ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்

தொகு

மசாலா கலந்த புளிப்புச் சுவைகொண்ட இந்த ஊறுகாயின் முக்கிய மூலப்பொருளாக மாம்பழம் உள்ளது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tickle your senses with a vast variety of Hyderabadi pickle" (in ஆங்கிலம்). இந்தியன் எக்சுபிரசு. February 13, 2015. Archived from the original on November 3, 2016. பார்க்கப்பட்ட நாள் October 21, 2022.
  2. "Hyderabadi Pickle: New Products (Mitchell's)". Archived from the original on 2010-04-20. பார்க்கப்பட்ட நாள் 2010-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்து_ஊறுகாய்&oldid=3773401" இலிருந்து மீள்விக்கப்பட்டது