ஒக்கவாங்கோ ஆறு

ஒக்கவாங்கோ ஆறு (Okavango River) தென்மேற்கு ஆப்பிரிக்காவில் அங்கோலா நாட்டின் பீடபூமியில் உற்பத்தியாகி, 1,600 கிலோமீட்டர்கள் (990 மைல்கள்) பயணித்து தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் கலகாரிப் பாலைவன மையப்பகுதியில் கழிமுகமாக டெல்டாவாக மாறும் ஆறு ஆகும். ஆப்பிரிக்காவின் தெற்கே நான்காவது நீளமான ஆறாக விளங்கும் இது அங்கோலாவில் ஆரம்பமாகின்றது. அங்கோலாவின் இது குபாங்கோ ஆறு (Cubango River) என அழைக்கப்படுகிறது.[1]

ஒக்கவாங்கோ ஆறு
Okavango River
Okavango River Sign.jpg
போட்சுவானாவிலிருந்து நமீபியாவிற்கு ஒக்கவாங்கோ ஆற்றில் ஒரு படகு கடக்கும் காட்சி.
நாடுகள் அங்கோலா, நமீபியா, போட்சுவானா
நீளம் 1,700 கிமீ (1,056 மைல்)
வடிநிலம் 5,30,000 கிமீ² (2,04,634 ச.மைல்)
Discharge
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
ஒக்கவாங்கோ ஆற்றுப்படுகையின் வரைபடம்
ஒக்கவாங்கோ ஆற்றுப்படுகையின் வரைபடம்

பொதுவாக ஆறுகள் இறுதியாக கடலில் கலப்பதுதான் இயல்பு ஆனால் ஒக்கவாங்கோ ஆறு, மற்ற ஆறுகளைப்போல் கடலில் சங்கமிக்காமல் மாறாக கலகாரிப் பாலைவனத்தில் ஒரு கழிமுகமாக மாறிவிடும் ஆறாக உள்ளது. மேலும் இவ்வாறு, தெற்கு அங்கோலாவிற்கும், நமீபியாவிற்கும் ஒரு எல்லைக் கோடாக அமைந்ததோடு போட்சுவானாவில் பாய்கிறது.[2]

பருவகாலம்தொகு

அங்கோலா பீடபூமியின் மாரிக்காலமாக அறியப்படும் நவம்பர் மாதம் முதல், பிப்ரவரி மாதம் வரை இப்பிராந்தியத்தில் பெய்யும் மழை நீர் இவ்வாற்றின் மூலம் பயணித்து கலகாரிப் பாலைவனப் பகுதியின் கோடைகாலமான மே மாதத்தில் கலகாரி கழிமுகப் பகுதியை வந்தடைகின்றன, அதே காலகட்டத்தில் இப்பகுதியில் மிகுந்த வறட்சி நிலவும் காலமாக காணப்படுகிறது. மேலும் மே மாதம் முதல், சூலை மாதம் முடிய நீர் நிறைந்து காணப்படும் கழிமுகப் பகுதி ஆகத்து மாதத்திற்கு பின்பு படிப்படியாக நீரின்றி சுருங்கி விடுகிறது.[3] இதுபோன்ற வறண்ட பருவத்தில் 1.2 கிலோமீட்டர் முழு அளவான ஒக்கவாங்கோ ஆறு, போட்சுவானா எல்லையில் நுழையும் முன்பு போபா நீர்வீழ்ச்சி (Popa Falls) என்றழைக்கப்படும் பகுதியில் நான்கு மீட்டர் அளவுக்கு ஒரு குறுகிய நீரோடையாக மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது.[4]

இவற்றையும் காண்கதொகு

மேற்சான்றுகள்தொகு

  1. pixshark.com - image galleries with a bite!, Showing (14) Pics For (Cubango River Map)
  2. http://www.namibweb.com/okavangoriver.htm Namibweb.com The Okavango River
  3. http://www.sergireboredo.com/ing/rpv/botswana/infobotswana.htm sergireboredo.com/ing
  4. http://www.worldcat.org/title/okavango-river-the-flow-of-a-lifeline/oclc/55607774&referer=brief_results Okavango River : the flow of a lifeline| Author:John Mendelsohn; Selma El Obeid| WorldCat
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்கவாங்கோ_ஆறு&oldid=2764856" இருந்து மீள்விக்கப்பட்டது