ஒத்துழையாமை இயக்கம் (2024)

2024 பங்களாதேஷ் அரசுக்கு எதிரான போராட்டம்

ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) இது ஒரே கருத்து இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது, 2024 வங்காளதேச இட ஒதுக்கீட்டு சீர்திருத்த இயக்கத்தின் கட்டமைப்பிற்குள் தொடங்கப்பட்ட வங்களாதேச அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாகும். இந்த இயக்கத்தின் ஒரே கோரிக்கை பிரதமர் சேக் அசீனா மற்றும் அவரது அமைச்சரவையிலுள்ளவர்கள் பதவி விலக வேண்டும் என்பதாகும். [13] [14] துவக்கத்தில் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டை சீர்திருத்துவதற்கான இலக்குடன் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்டிருந்தாலும், பல எதிர்ப்பாளர்களின் மரணத்திற்குப் பிறகு இந்த இயக்கமானது அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாக மாறியது. அரசாங்கத்தின் தவறான நிர்வாகம், பரவலான அரசாங்க அதிகாரிகளின் ஊழல், மனித உரிமை மீறல்கள், இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படல மற்றும் எதேச்சாதிகாரம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளால் இந்த இயக்கம் தூண்டப்பட்டது.[15][16][17][18][19]

ஒத்துழையாமை இயக்கம் (2024)
பிரதமர் பதவி விலகிய பின்னர் மக்கள் பிரதமர் அலுவகத்தின் முன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் காட்சி
தேதிஆகத்து 4, 2024 – தற்போது வரை (2 மாதங்கள் மற்றும் 18 நாட்கள்)
அமைவிடம்
காரணம்
  • எதிர்ப்பாளார்களின் மரணம்
  • எதேச்சதிகாரம்
இலக்குகள்சேக் அசீனா மற்றும் அவரது அமைச்சரவையின் பதவி விலக
முறைகள்
நிலைபகுதி வெற்றி
தரப்புகள்

பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்கள் இயக்கம்

உதவி:
வழிநடத்தியோர்

கூட்டுத் தலைமை

சேக் அசீனா சரண்
அச்சதுசமான் கான்
ஒபைதுல் காதர்

உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள்
இறப்புகள்: 99+ போரட்டக்காரர்கள்[8]

காயமடைந்தோர்: 200+[9]
இறப்புகள்: 14 காவலர்கள்[10]

காயமடைந்தோர்: 300+ காவலர்கள்[11] and 20+ அவாமி லீக் , சத்ரா லீக் உறுப்பினர்கள் [சான்று தேவை]
இறப்புகள்: 1 பத்திரிகையாளர்[12]

காயமடைந்தோர்: 23 பத்திரிகையாளர்கள் [12]

ஆகத்து 3, 2024 இல், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி விலகுவதற்கான ஓர் அம்சக் கோரிக்கையை அறிவித்து, " விரிவான ஒத்துழையாமைக்கு "அழைப்பு விடுத்தனர். [20] [21] அடுத்த நாள், வன்முறை மோதல்கள் வெடித்தன, இதில் மாணவர்கள் உட்பட 97 பேர் கொல்லப்பட்டனர். ஆகத்து 5இல் அசீனாவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்காவில் நடைபயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தனர். அன்றைய தினம், போராட்டக்காரர்களின் பெரும் கூட்டம் தலைநகர் வழியாகச் சென்றது. [22] பிற்பகல் 2:30 மணிக்கு பிஎஸ்டி ( ஜிஎம்டி காலை 8:30 மணி), சேக் அசீனா பதவி விலகிவிட்டு , தனது சகோதரியுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.[23] இவர் வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவின் தலைநகரான அகர்தலாவிற்குப் பாதுகாப்பாகச் சென்றார். [24]

பின்னணி

தொகு

2024 ஆம் ஆண்டு ஒதுக்கீடு சீர்திருத்த இயக்கத்தின் போது, பங்கேற்பாளர்கள், குறிப்பாக மாணவர்கள், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளினால் எதிர்ப்பு, கைதுகள், ஏராளமான இறப்புகள், காயமடைதல் ஆகிய பாதிப்பிற்குள்ளாகினர். ஆரம்பகாலகட்ட ஒதுக்கீட்டு சீர்திருத்த இயக்கத்தின் ஆறு ஒருங்கிணைப்பாளர்களும் தடுத்து வைக்கப்பட்டு டாக்கா பெருநகர காவல்துறையின் துப்பறியும் கிளையினரால் போராட்டங்கள் பற்றிய முடிவை வலுக்கட்டாயமாக அறிவிக்கச் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுகளும் எதேச்சதிகாரமும் அரசாங்கத்தின் மீது மக்களின் கோபத்தைத் தூண்டியது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை, இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆசிப் மஹ்மூத், அரசாங்கத்திற்கு எதிராக " ஒத்துழையாமை இயக்கத்தை " தொடங்குவோம் என்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்:

மேற்கோள்கள்

தொகு
  1. "মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ". banglanews24.com (in Bengali). 2024-08-04. பார்க்கப்பட்ட நாள் 2024-08-04.
  2. Hasnat, Saif; Mashal, Mujib (4 August 2024). "Bangladesh Back Under Curfew After Protests Leave Dozens Dead". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2024/08/04/world/asia/bangladesh-protests-curfew.html. 
  3. "Bangladesh PM Sheikh Hasina has resigned and left the country, media reports say". 5 August 2024. https://www.scmp.com/news/asia/south-asia/article/3273265/bangladesh-pm-sheikh-hasina-has-resigned-and-left-country-media-reports-say. 
  4. "Bangladesh PM has resigned and left country, reports say". The Guardian.
  5. "Protesters storm Bangladesh PM Hasina’s palace amid reports she has resigned and fled". 5 August 2024. https://www.straitstimes.com/asia/south-asia/bangladesh-army-chief-to-address-nation-as-fresh-protests-break-out. 
  6. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  7. [2]
  8. "What happened across the country Sunday". புரோதோம் அலோ. 4 August 2024.
  9. "সারা দেশে সংঘর্ষ-গুলি, পুলিশসহ নিহত ৯৫". Bangla Tribune. Archived from the original on 4 August 2024. பார்க்கப்பட்ட நாள் 4 August 2024.
  10. "দুই জেলায় ১৪ পুলিশ সদস্য নিহত, দাবি পুলিশ সদর দফতরের". Bonik Barta. 4 August 2024.
  11. "২৭টি থানায় হামলা, ১৪ পুলিশ সদস্য নিহত, ৩০০ জনের বেশি আহত" (in bn). https://www.prothomalo.com/bangladesh/1ua7ybncib. பார்த்த நாள்: 2024-08-04. 
  12. 12.0 12.1 . 
  13. Hasnat, Saif; Mashal, Mujib. "Roaring Back After Crackdown, Bangladesh Protesters Demand Leader's Ouster". The New York Times. https://www.nytimes.com/2024/08/03/world/asia/bangladesh-protests-students.html. 
  14. "শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা". মানবজমিন (in Bengali).
  15. Lu, Christina (2024-08-07). "What's Behind Bangladesh's Student Protests?". Foreign Policy (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 4 August 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
  16. "Is the system rigged against meritocracy?". The Daily Star (in ஆங்கிலம்). 2024-07-10. Archived from the original on 16 July 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
  17. Ahmed, Redwan; Ellis-Petersen, Hannah (2024-07-26). "Bangladesh student protests turn into 'mass movement against a dictator'" (in en-GB). The Guardian இம் மூலத்தில் இருந்து 4 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240804023457/https://www.theguardian.com/world/article/2024/jul/26/bangladesh-student-protests-mass-movement-against-dictator. 
  18. Charlie Campbell (2023-11-02). "Sheikh Hasina and the Future of Democracy in Bangladesh". TIME (in ஆங்கிலம்). Archived from the original on 4 January 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
  19. Correspondent, Staff (25 June 2024). "Sheikh Hasina doesn’t sell the country, say prime minister" (in en). Prothomalo. https://en.prothomalo.com/bangladesh/76mu2u1gmz. 
  20. "It's now one point". the daily star (in ஆங்கிலம்).
  21. "One Point Demand' announced from Central Shaheed Minar". bonik barta (in ஆங்கிலம்).
  22. Report, Star Digital (2024-08-05). "PM resigned, interim govt to be formed: Army chief". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-05.
  23. "Bangladesh PM Sheikh Hasina resigns and flees country as protesters storm palace". BBC News. https://www.bbc.com/news/live/ckdgg87lnkdt?post=asset%3Ae6e668c5-08e9-4000-b710-25d40a70f96a#post. 
  24. "Sheikh Hasina: How Bangladesh's protesters ended a 15-year reign". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்துழையாமை_இயக்கம்_(2024)&oldid=4107749" இலிருந்து மீள்விக்கப்பட்டது