ஒன்பது ரூபாய் நோட்டு (திரைப்படம்)

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒன்பது ரூபாய் நோட்டு என்பது 2007இல் தங்கர்பச்சானின் இயக்கத்தில் வந்த திரைப்படம். இதன் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவும் தங்கர்பச்சான்.

ஒன்பது ரூபாய் நோட்டு
இயக்கம்தங்கர்பச்சான்
தயாரிப்புடாக்டர் ஏ.எஸ்.கணேசன்.
இசைபரத்வாஜ்
நடிப்புசத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி.
வெளியீடுநவம்பர் 30, 2007
ஓட்டம்.
நீளம்4468 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

சென்னையிலிருந்து பேருந்தில் தனது கிராமத்துக்கு வரும் சத்யராஜ் தனது கதையைக் கூறுவது போல படத்தை அமைந்திருக்கிறது.

மாதவர் படையாச்சி, பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊர் மக்களால் மதிக்கப்படுகிற ஒரு மனிதர். அவருக்கு வேலாயி (அர்ச்சனா) என்ற மனைவியும், 5 மக்களும்.

வேளாண்மை தான் படையாச்சியின் உயிர். அவருடைய நெருங்கிய நண்பர்தான் காஜா பாய் (நாசர்). வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கும் ஒரு அப்பாவி ஜீவன். அவரது நிலையைப் பார்த்து மாதவரும், வேலாயியும் உதவுகின்றனர். தனக்கென ஒரு தொழிலைத் தொடங்குமாறு கூறி நிறையப் பணத்தையும் கொடுக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ந்த விட்ட மாதவரின் பிள்ளைகள், மாதவருக்கு எதிராக திரும்புகின்றனர். சொத்தில் பங்கு கேட்கின்றனர். இவர்களுக்கு மாதவரின் உறவினரான தண்டபாணி (டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்) உடந்தை. மாதவருக்கு எதிராக பிள்ளைகளைத் தூண்டி விடுகிறார் தண்டபாணி.

இதை வயதான மாதவரும், அவரது மனைவியும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சியில் சமைகின்றனர். இறுதியில் பிள்ளைகளை விட்டுப் பிரிய முடிவு செய்கிறார்கள்.

இந்த சமயத்தில்தான் அவர்களுக்கு காஜா பாயின் நினைவு வருகிறது. அடுத்த ரயிலைப் பிடித்து ஆம்பூருக்கு ஓடுகிறார்கள். அங்கு காஜா பாய் பெரிய தொழிலதிபராக செட்டிலாகியிருக்கிறார். மாதவரையும், வேலாயியையும் சந்தோஷத்துடனும், பாசத்துடனும் வரவேற்கின்றனர் காஜா பாயும், அவரது மனைவி கமீலாவும்.

விரும்புகிற வரை எங்களுடேனேயே இருங்கள் என்றும் கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் அதை மறுக்கும் மாதவர், யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் தான் பிழைக்க வழி செய்யுமாறு கோருகிறார் மாதவர்.

மாதவரின் உணர்வுகளை மதிக்கும் காஜா பாய், தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை கொடுக்கிறார். சில ஆடுகளை வாங்கவும் மாதவருக்கு உதவுகிறார்.

ஒரு நாள் தான் ஆசையுடனும், சொகுசாகவும் வளர்த்த தனது இளைய மகன் சொந்த ஊரிலேயே அடிமை போல நடத்தப்படுவதை அறிகிறார் மாதவர். மனைவியிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இதையடுத்து இருவரும் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். ஆனால் அன்று இரவே வேலாயி இறந்து போகிறார்.

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் ஜீவன்.

கதாபாத்திரங்கள்

தொகு

வித்தியாசமான உத்தி

தொகு

இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

அதன்படி "ஞாயிற்றுக்கிழமை (2007 டிசம்பர் 9ஆம் தேதி), முற்பகல் 11.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும். இப்படத்தை பொதுமக்கள் எந்தவிதக் கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தாமல் பார்க்கலாம். பார்த்த பின்னர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்தலாம்" என அறிவிப்புகள் வெளியாயின.

இதற்கான ஏற்பாடுகளை பிரமீட் சாய்மீரா நிறுவனம் செய்தது. இதற்கான காரணம் மனதை வேதனைப்படுத்துவதாகும். அம்மாத வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது. ஆனால் நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் தமிழகம் முழுவதும் மிகக் குறைந்த தியேட்டர்களிலேயே (30 தியேட்டர்கள்) திரையிட முடிந்துள்ளது.

விருதுகள்

தொகு

நூல் வடிவம்

தொகு

இத்திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நூலின் திரைவடிவம் ஆகும்.

வெளி இணைப்புகள்

தொகு