ஒபெத் திருவிழா

(ஒப்பெத் திருவிழா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒப்பெத் திருவிழா, (Opet Festival) சிறந்த விருந்துத் திருவிழா என்றும் அழைப்பர்[1]புது எகிப்திய இராச்சிய காலத்தில் பண்டைய எகிப்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, நைல் நதியில் வெள்ளம் ஏற்படும் பருவகாலத்தின் போது தீபை (அல்-உக்சுர்) நகரத்தில் 24 நாட்களுக்கு கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அமூன்-மூத் கடவுளினரின் குழந்தைகளாகக் கருதப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் அவர்களது ஆன்மீக வாரிசுகளின் வளர்ச்சிக்காக ஒப்பெத் திருவிழா கொண்டாடப்பட்டது. [2][3]எகிப்தின் பதினெட்டாம் வம்ச மன்னர் மூன்றாம் தூத்மோஸ் (கிமு 1479 - கிமு 1425) ஆட்சிக் காலத்தில் ஒப்பெத் திருவிழா கொண்டாடத் துவக்கப்பட்டது.

ஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான அமூன், மூத் மற்றும் கோன்சு கடவுளர் சிலைகள லக்சர் கோயிலுக்கு படகு போன்ற பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லப்படும்
ஒப்பெத் திருவிழா ஊர்வலம் துவங்குமிடமான கர்னாக்

ஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான அமூன், மூத் மற்றும் கோன்சு கடவுளர் சிலைகளை கர்னாக் கோயிலிருந்து, அல்-உக்சுர் கோயில் வரை படகு போன்ற பல்லக்குகளில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் சடங்கு நிகழ்த்தப்படும். இத்திருவிழாவின் போது பார்வோனுக்கும், அமூன் கடவுள்களுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும். இத்திருமண விழாவின் முடிவில், பார்வோன்கள் புதிதாக பிறப்பதாகவும், கடவுளின் அருள் பார்வோன் மீது இறங்குவதாகவும் நம்பப்படுகிறது. .[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Cavka, Mislav; Kelava, Tomislav (April 2013). "Comment on: Familial epilepsy in the pharaohs of ancient Egypt's eighteenth dynasty". Epilepsy & Behavior 27 (1): 278. doi:10.1016/j.yebeh.2012.11.044. பன்னாட்டுத் தர தொடர் எண்:1525-5050. பப்மெட்:23291226. 
  2. Opet festival
  3. Opet Festival
  4. Xu, Bohai (2018-10-29). The Connection between Dragon Heads- Raising Day and the Opet Festival. doi:10.31235/osf.io/shkvn. http://osf.io/shkvn/. 

- Brier, B., Hobbs, H. (2008). Daily Life of the Ancient Egyptians. (2nd ed.). Connecticut: Greenwood Press. Retrieved from: https://www.academia.edu/34017535/Daily_life_in_ancient_egypt.pdf

ஆதாரங்கள்

தொகு
  • Creasman, P. (2013). Archaeological Research in the Valley of the Kings and Ancient Thebes. In Wilkinson, H. Wilkinson Egyptology Series. 1(1st ed.) Arizona: University of Arizona Egyptian Expedition. Retrieved from: https://www.ltrr.arizona.edu/~pcreasman/UAEEfiles/Creasman2013.pdf
  • Darnell, J. (2010). Opet Festival. In Willeke, W., Dieleman, J. UCLA Encyclopedia of Egyptology (1st ed.). Los Angeles. Retrieved from: https://escholarship.org/content/qt4739r3fr/qt4739r3fr.pdf
  • Encyclopaedia Britannica. (2014). Opet – Egyptian Festival. Encyclopaedia Britannica, inc. Accessed: 23/4/20. URL: https://www.britannica.com/topic/Opet-Egyptian-festival
  • Escolano-Poveda, M. (2019). Egypt’s Pharaohs welcomed summer with this fabulous festival. 20/03/20. Retrieved from: https://www.nationalgeographic.com/history/magazine/2019/05-06/ancient-egypt-royal-feast/
  • Fukaya, M. (2012). Oracular sessions and the Installations of Priests and Officials at the Opet Festival. Socio-religious functions of three Theban festivals in the New Kingdom: The Festivals of Opet, the Valley, and the New Year. 47(1st ed.) Retrieved from: https://www.jstage.jst.go.jp/article/orient/47/0/47_191/_pdf
  • Mark, J. (2016). Karnak. Ancient History Encyclopaedia. Accessed: 22/4/20. URL: https://www.ancient.eu/Karnak/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒபெத்_திருவிழா&oldid=3074403" இலிருந்து மீள்விக்கப்பட்டது