ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்

ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம் (Olympic National Sports Complex) அல்லது ஒலிம்பிக் விளையாட்டரங்கம்; உக்ரைனியன்: Національний спортивний комплекс "Олімпійський") என்பது உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் கட்டப்பட்டுள்ள ஓர் பல்பயன் விளையாட்டரங்கம் ஆகும். நகரின் நடுவான செரேபனாவ் குன்றின் சரிவுகளில் அமைந்துள்ள இந்த வளாகம் உக்ரைனின் முதன்மை விளையாட்டு அரங்குகளில் ஒன்றாகும். கிழக்கு ஐரோப்பாவில் மாஸ்கோவிலுள்ள லுழ்நிகி விளையாட்டரங்கிற்கு அடுத்ததாக இரண்டாவது பெரும் அரங்கமாக விளங்குகிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கில் பல நவீன வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 1980ஆம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தாட்டப் போட்டிகள் இங்குதான் விளையாடப்பட்டன.

ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்
இடம் கீவ், உக்ரைன்
திறவு 12 ஆகத்து 1923
சீர்படுத்தது 1941, 1999, 2011
பரவு 1966, 1978
மூடல் 2008–2011
உரிமையாளர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு"[1]
தரை புல் தரை
கட்டிட விலை $௫00–௫௫0 மில்லியன்[2]
கட்டிடக்கலைஞர் எல்.வி.பிவின்ஸ்கி (1923)
மைக்கலோ ரெசைனா (1936–41)
கெர்க்கன், மார்க் மற்றும் கூட்டாளிகள் (செருமனி) (2008–2011)
குத்தகை அணி(கள்) உக்ரைன் தேசிய கால்பந்தாட்ட அணி (1994–2007, 2011–நடப்பு)
உக்ரைன் கோப்பை இறுதியாட்டம் (1992–2007, 2012–நடப்பு)
எஃப்சி டைனமோ கீவ் (2011–2016)[3]
அமரக்கூடிய பேர் ௭0,0௫0 (கால்பந்தாட்டம்)[4]
பரப்பளவு 105மீ x 68மீ

விரிவான புனரமைப்புப் பணிகளை அடுத்து இந்த விளையாட்டரங்கம் அக்டோபர் 9, 2011 அன்று சக்கீராவின் இசை நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டது. முதல் பன்னாட்டு கால்பந்தாட்டம் நவம்பர் 11, 2011 அன்று உக்ரைனுக்கும் செருமனிக்கும் இடையே நட்புக்காக நடைபெற்றது; இந்த ஆட்டம் 3–3 என்ற புள்ளிகளில் சமனாக முடிந்தது. யூரோ 2012இன் இறுதி ஆட்டம் இங்குதான் நடைபெறுகிறது.

யூஈஎஃப்ஏ யூரோ 2012

தொகு
நாள் அணி #1 முடிவு அணி #2 சுற்று
11 சூன் 2012   உக்ரைன் 2-1   சுவீடன் குழு D -
15 சூன் 2012   இங்கிலாந்து -   சுவீடன் குழு D -
19 சூன் 2012   பிரான்சு -   சுவீடன் குழு D -
24 சூன் 2012 குழு D வெற்றியாளர் - குழு C இரண்டாமிடத்தவர் காலிறுதி ஆட்டம் -
1 சூலை 2012 29வது ஆட்ட வெற்றியாளர் - 30வது ஆட்ட வெற்றியாளர் இறுதி ஆட்டம் -

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • இணைய படப்பிடிப்புக் கருவிகள்: