ஓங்கே பழங்குடியினர்

அந்தமான் தீவிலுள்ள இனக் குழு

ஓங்கே (Onge) என்பவர்கள் அந்தமான் தீவுகளில் காணப்படும் அந்தமானியப் பூர்வ குடிகளாவர். பாரம்பரிய வேட்டைக்காரர்களான, இவர்கள் இந்தியாவின் ஒரு பழங்குடியினராக வரையறுக்கப்பட்டுள்ளனர்.[1]

கொல்கத்தா அருங்காட்சியகத்தில் ஓங்கே மக்களின் சித்தரிப்பு

வரலாறு

தொகு
 
1800 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அந்தமானிய பழங்குடியினரின் பரவல்; ஓங்கே பகுதிகள் நீல நிறத்தில் உள்ளன.

18 ஆம் நூற்றாண்டில், ஓங்கே, அல்லது மதுமிதா, சிறிய அந்தமான் தீவு மற்றும் அருகிலுள்ள தீவுகள் முழுவதும் பரவலாக வசித்து வந்துள்ளனர். இரட்லேண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமான் தீவின் தெற்கு முனையில் சில பிரதேசங்கள் மற்றும் முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் பிரித்தன் காலனித்துவ அதிகாரிகளால் அழிக்கப்பட்டப் பின்னர், 1800 களில் லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேர் மூலம் பிரித்தானியப் பேரரசுடன் நட்பு உறவுகள் நிறுவப்பட்டன. பிரித்தானிய கடற்படை அதிகாரி எம். வி. போர்ட்மேன் இவர்களை சந்தித்தப் பின்னர் இவர்கள் "மிகமென்மையான, மிகவும் பயந்த மற்றும் ஆபத்தில்லாத" குழு என்று விவரித்தார்.[2] 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவர்கள் கடல் ஆமைகளைப் பிடிக்க தெற்கு மற்றும் வடக்கு சகோதரர் தீவுகளுக்குச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில், அந்தத் தீவுகள் அவற்றின் பிரதேசத்திற்கும் மேலும் வடக்கே பெரிய அந்தமானிய மக்களின் எல்லைக்கும் இடையிலான எல்லையாகத் தெரிந்தன .[3] இன்று, எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் சிறிய அந்தமான், வடகிழக்கில் துகோங் க்ரீக் மற்றும் தெற்கு விரிகுடாவில் உள்ள இரண்டு பாதுகாக்கப்ப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஓங்கே பழங்குடியினர் அரை நாடோடிகளாகவும், வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பதை முழுமையாக சார்ந்தவர்களாகவும் இருந்தனர்.

அந்தமான் தீவுகளின் பழங்குடி மக்களில் ஓங்கே இனமும் ஒன்றாகும். தென்கிழக்கு ஆசியாவின் பிற இடங்களில் உள்ள மற்ற அந்தமானிய பழங்குடியினர் மற்றும் ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட குழுக்களுடன் சேர்ந்து, இவர்கள் நெக்ரிட்டோ மக்களைக் கொண்டவர்கள். இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய மிக ஆரம்பகால குடியேற்றத்தின் எச்சங்கள் என்று நம்பப்படுகிறது.  

மக்கள் தொகை

தொகு

காலனித்துவமயமாக்கல் மற்றும் குடியேற்றத்திற்குப் பிறகு, 1901 ஆம் ஆண்டில் 672 இலிருந்து 100 ஆக இவர்களின் மக்கள் தொகைக் குறைக்கப்பட்டது. :51 [4]

ஓங்கே மக்கள் தொகை குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் வெளி உலகத்துடனான தொடர்பால் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகும்.[5] உலகின் மிகக் வளமான மக்களில் ஓங்கே பழங்குடியினரும் ஒன்றாகும். திருமணமான தம்பதிகளில் சுமார் 40 சதவீதம் மலட்டுத்தன்மையுள்ளவர்களாக காணப்படுகின்றனர். 28 வயதிற்கு முன்னர் ஓங்கே பெண்கள் அரிதாகவே கர்ப்பமாகிறார்கள். குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது.[6] ஓங்கேவின் நிகர இனப்பெருக்க குறியீடு 0.91 ஆகும்.[7] பெரிய அந்தமானியர்களிடையே நிகர இனப்பெருக்க குறியீடு 1.40 ஆகும்.[8]

ஆழிப்பேரலை

தொகு

அரை நாடோடியான ஓங்கே பழங்குடியினம் ஒரு பாரம்பரிய கதையைக் கொண்டுள்ளது. இது தரை நடுங்குவதையும், ஒரு பெரிய நீர்ச்சுவர் நிலத்தை அழிப்பதையும் கூறுகிறது. இந்த கதையை கவனத்தில் கொண்டு, ஓங்கேயின் அனைத்து 96 பழங்குடியினரும் 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தால் ஏற்பட்ட ஆழிப்பேரலையிலிருந்து மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.[9]

விசச் சம்பவம்

தொகு

டிசம்பர் 2008 இல், எட்டு ஆண் பழங்குடி உறுப்பினர்கள் ஒரு நச்சு திரவத்தை குடித்து இறந்தனர். சில ஆதாரங்களால் இது மெத்தனால் என அடையாளம் காணப்பட்டது. இவர்கள் மது அருந்தியதாக தவறாக நினைத்தார்கள்.[10] தீவில் உள்ள குடியேற்றத்திற்கு அருகேயுள்ள துகோங் கிரீக்கில் கரை ஒதுங்கிய ஒரு கொள்கலனில் இருந்து இந்த திரவம் வந்துள்ளது. ஆனால் போர்ட் பிளேர் அதிகாரிகள் இது வேறு எங்கிருந்தாவது தோன்றியதா என்று விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும் குறைந்தது 15 ஓங்கே பழங்குடியினர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[11]

இந்த சம்பவத்திற்கு முன்னர் இவர்களின் மக்கள் தொகை சுமார் 100 ஆக மட்டுமே மதிப்பிடப்பட்ட நிலையில், சர்வைவல் இன்டர்நேஷனலின் இயக்குநர் இச்சம்பவத்தை "ஓங்கேக்கு பேரழிவு" என்று விவரித்தார். மேலும் எந்தவொரு மரணமும் "முழு பழங்குடியினரின் உயிர்வாழ்வையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்" என்று எச்சரித்தார். மது மற்றும் போதைப்பொருள் சமீபத்திய ஆண்டுகளில் ஓங்கேக்கு ஒரு கடுமையான பிரச்சினையாக உருவாகியுள்ளது, இது வெளிப்புற தாக்கங்களால் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல்களை அதிகரிக்கிறது.[11]

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அந்தமான் தீவுகளின் ஆளுநர் போபிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.[12]

மொழி

தொகு

ஓங்கே பழங்குடியினர் ஓங்கே மொழி பேசுகின்றனர். இது அறியப்பட்ட இரண்டு ஓங்கன் மொழிகளில் ஒன்றாகும் (தெற்கு அந்தமானிய மொழிகள் ). சிறிய அந்தமான் மற்றும் வடக்குத் சிறிய தீவுகளிலும், தெற்கு அந்தமான் தீவின் தெற்கு முனையிலும் பேசப்படலாம். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, அந்தமான் தீவுகளில் ஆங்கிலேயர்களின் வருகையுடனும், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நிலப்பரப்பில் இருந்து இந்தியக் குடியேற்றவாசிகளின் பெருமளவிலான வருகை, ஓங்கே பேச்சாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் மிதமான அதிகரிப்பு காணப்படுகிறது. 2006ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 94 ஓங்கே பேச்சாளர்கள் சிறிய அந்தமான் தீவின் வடகிழக்கில் ஒரு குடியேற்றத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும் இது அருகிய மொழியாக மாறியது.

மரபியல்

தொகு

இரீச் மற்றும் பலரது மரபணு அளவிலான ஆய்வு (2009) மலேசியா மற்றும் பிலிப்பைன்சில் உள்ள மற்ற நெக்ரிட்டோ மக்களுடன் ஓங்கே அந்தமானியர்கள் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டது. நவீன இந்திய மக்களுடன் ஓங்கே நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றாலும், கற்கால ஈரானிய விவசாயிகளிடமிருந்தோ அல்லது புல்வெளி ஆயர்வாதிகளிடமிருந்தோ அவை எதுவும் இல்லை என்று ஆய்வு மேலும் காட்டுகிறது. இதிலிருந்து, ஓங்கே முழுக்க முழுக்க நவீன இந்தியர்களின் மரபியலுக்கு பங்களித்த பண்டைய மக்களில் ஒருவரிடமிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள்.[13] சௌபே மற்றும் எண்டிகாட்டின் கூற்றின்படி (2013), ஒட்டுமொத்தமாக, அந்தமானியர்கள் இன்றைய தெற்காசியர்களை விட தென்கிழக்கு ஆசியர்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது.[14] பாசு மற்றும் பலர் கருத்துப்படி. (2016), அந்தமான் தீவுக்கூட்டத்தின் மக்கள் ஒரு தனித்துவமான வம்சாவளியை உருவாக்குகின்றனர், இது "பெருங்கடல் மக்கள்தொகைக்கு ஒத்துழைப்பு மற்றும் தெற்காசியர்களுக்கு (இந்தியா) நெருக்கமாக இல்லை. [15]

குறிப்புகள்

தொகு
  1. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. p. 27. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  2. Weber, George. "Maurice Vidal Portman (1861–1935)". The Andamanese (Appendix A – Pioneer Biographies of the British Period to 1947). Archived from the original on 5 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03.
  3. M. V. Portman (1899), A history of our Relations with the Andamanese, Volume II. Office of the Government Printing, Calcutta, India.
  4. "अंडमान में जनजातियों को ख़तरा" [Tribes endangered in the Andamans] (in Hindi). BBC News. 30 December 2004. பார்க்கப்பட்ட நாள் 25 November 2008. जारवा के 100, ओन्गी के 105, ग्रेट एंडमानिस के 40–45 और सेन्टेलीज़ के क़रीब 250 लोग नेगरीटो कबीले से हैं, जो दक्षिण एशिया की प्राचीनतम जनजाति है [100 of the Jarawa, 105 of the Onge, 40–45 of the Great Andamanese, and about 250 of the Sentinelese belong to the Negrito group which is South Asia's oldest tribal affiliation].{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Devi, L. Dilly (1987). "Sociological Aspects of Food and Nutrition among the Onges of the Little Andaman Island". Ph.D. dissertation, University of Delhi, Delhi
  6. "Ecocide or Genocide? The Onge in the Andaman Islands". Cultural Survival. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  7. A. N. Sharma (2003), Tribal Development in the Andaman Islands, page 64. Sarup & Sons, New Delhi.
  8. A. N. Sharma (2003), Tribal Development in the Andaman Islands, page 72. Sarup & Sons, New Delhi.
  9. Budjeryn, Mariana. "And Then Came the Tsunami: Disaster Brings Attention and New Challenges to Asia's Indigenous Peoples". Cultural Survival Quarterly. பார்க்கப்பட்ட நாள் 22 February 2010.
  10. Bhaumik, Subir (9 December 2008). "Alcohol error hits Andamans tribe". BBC News. பார்க்கப்பட்ட நாள் 10 December 2008.
  11. 11.0 11.1 Buncombe, Andrew (12 December 2008). "Washed-up poison bottle kills eight members of island tribe". London. Archived from the original (online edition) on 12 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 12 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Inquiry ordered into death of Onge tribesmen". தி இந்து. 11 December 2008. Archived from the original on 3 November 2012. பார்க்கப்பட்ட நாள் 13 December 2008.
  13. Reconstructing Indian Population History. 24 September 2009. 
  14. The Andaman Islanders in a Regional Genetic Context: Reexamining the Evidence for an Early Peopling of the Archipelago from South Asia. June 2013. https://digitalcommons.wayne.edu/humbiol/vol85/iss1/7. 
  15. Basu 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓங்கே_பழங்குடியினர்&oldid=4165564" இலிருந்து மீள்விக்கப்பட்டது