ஓமியோ குமார் தாஸ்
ஓமியோ குமார் தாஸ் (Omeo Kumar Das ; 05 மே 1895 - 23 சனவரி 1975), லோக் நாயக் என்று பிரபலமாக அறியப்படும் இவர் ஓர் இந்திய சமூக சேவகரும், காந்தியவாதியும், கல்வியாளரும், எழுத்தாளரும், அசாம் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் அசாம் மாநிலத்தில் பல்வேறு காலங்களில் கல்வி, தொழிலாளர் , உணவு, பொது வினியோகம் போன்ற பல்வேறு அமைச்சகப் பதவிகளை வகித்தார்.[1] மகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனையை அசாமிய மொழியில் மொழிபெயர்த்தார். மாநிலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை செயல்படுத்த பங்களித்தார். சமூகத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு 1963ஆம் ஆண்டில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதினை வழங்கியது.[2] இந்திய அஞ்சல் துறை 15 மே 1998 அன்று நினைவு முத்திரையை வெளியிட்டு இவரை கௌரவித்தது.[3]
ஓமியோ குமார் தாஸ் | |
---|---|
பிறப்பு | நகோன், அசாம், இந்தியா | 5 மே 1895
இறப்பு | 23 சனவரி 1975 குவகாத்தி, அசாம், இந்தியா | (அகவை 79)
மற்ற பெயர்கள் | லோக் நாயக் |
பணி | இந்திய விடுதலை ஆர்வலர் சமூக சேவகர் மொழிபெயர்ப்பாளர் கல்வியாளர் |
அறியப்படுவது | சமூக செயல்பாடுகள் |
வாழ்க்கைத் துணை | புஷ்பலதா தாஸ் |
விருதுகள் | பத்ம பூசண் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு05 மே 1895 அன்று வடகிழக்குப் இந்திய மாநிலமான அசாமின் நகாமோ மாவட்டத்தில் பிறந்தார். தேஜ்பூரில் இவரது பள்ளிப்படிப்பு இருந்தது. இவர் தனது உயர் கல்வியை குவகாத்தியிலுள்ள காட்டன் கல்லூரியிலும் கொல்கத்தா நகரக் கல்லூரியிலும் பயின்றார், அந்த சமயத்தில் இவர் கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர் திலகர் போன்ற இந்திய சுதந்திர ஆர்வலர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு மாணவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் அசாமில் 1930ஆம் ஆண்டின் உப்புச் சத்தியாகிரக தலைவர்களில் ஒருவராக இருந்தார். மேலும், சுதந்திர போராட்டத்தின் போது பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[1] இவர் அசாம் சட்டமன்றம், அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தல்களில் முறையே 1937, 1945இல் போட்டியிட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் தொடர்ச்சியாக மூன்று முறை 1951, 57 ,62 தேக்கியாஜுலி சட்டமன்றத் தொகுதியைப் பிரநிதித்துவப் படுத்தினார்.[4] இந்த காலங்களில், இவர் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றினார். இவர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவப்பட்டது. இந்த முயற்சி ஆசியாவில் இதுபோன்ற முதல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.[1] கல்வி அமைச்சராக, அசாமில் அடிப்படை கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார்.[1]
இலக்கியப் பணி
தொகுமகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனையை அசாமிய மொழியில் மோர் சத்யா அனேஸ்வனார் கஹினி என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்தது உட்பட பல புத்தகங்களை வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு.[5] காந்திஜிர் ஜிபோனி, மகாத்மா காந்திக் ஆமி கிடோர் புஜிலு, அசோமோத் மகாத்மா ஆகியவை இவருடைய மற்ற படைப்புகள். இவர் அரிஜன் சேவா சங்கம், பாரதீய ஆதிம் சாதி சேவா சங்கம், பாரத் சேவா சமாஜம், காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை, கஸ்தூர்பா நினைவு அறக்கட்டளை, அசாம் சேவா சமிதி போன்ற போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சாரம் , தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மறுவாழ்வு ஆகியவற்றுக்காக பணியாற்றும் பல சமூக மற்றும் காந்திய அமைப்புகளின் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.[1]
விருதுகளும், கௌரவங்களும்
தொகுஇந்திய அரசு பத்ம பூசண் விருதுக்கான 1993 குடியரசு தின கௌரவப் பட்டியலில் இவரை சேர்த்தது.[2] இவர் 23 சனவரி 1975 இல் தனது 81 வயதில் இறந்தார்.இவரது மனைவி புஷ்பலதா தாஸ், புகழ்பெற்ற சுதந்திர ஆர்வலரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[6] இவருக்கு ஒரு மகள் உள்ளார்.[7] இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமான குவகாத்தி, சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டு ஓமியோ குமார் தாஸ் நிறுவனத்துக்கு 1995இல் இவரது பிறந்த நூற்றாண்டு நாளில் இவரது பெயரிடப்பட்டது.[8] இந்திய அஞ்சல் துறை 1998இல் இவருக்கு நினைவு முத்திரையை வெளியிட்டது.[3] தேக்கியாஜுலியில் உள்ள ஒரு கல்லூரிக்கு லோகநாயக் ஓமியோ குமார் தாஸ் கல்லூரி என்று பெயரிடப்பட்டது.[9]
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Lokanayak Omeo Okumar Das on Free India". Free India. 5 February 2003. Archived from the original on 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ 2.0 2.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help) - ↑ 3.0 3.1 "Commemorative stamps" (PDF). India Post. 2016. Archived from the original (PDF) on 17 January 2013. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
- ↑ "Dhekiajuli Assembly Constituency". Maps of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ "Books and Authors". Joiaaiaxom. 2016. Archived from the original on 10 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Puspa Lata Das Biography". Maps of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ "Freedom fighter Pushpalata Das passes away". Times of India. 10 November 2003. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ "Visit to the Omeo Kumar Das Institute of Social Change and Development". Swedish South Asian Studies Network. 24 November 2005. Archived from the original on 10 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Lokonayak Omeo Kumar Das College". Lokonayak Omeo Kumar Das College. 2016. Archived from the original on 6 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Personalities on Postage Stamps". Web listing. Stamp Sathi. 2016. Archived from the original on 18 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Omeo Kumar Das Institute of Social Change and Development". Karmayog. 2016. Archived from the original on 20 July 2018. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.