ஓமி கே பாபா

ஓமி கே பாபா (Homi K Bhabha பிறப்பு 1949) ஆனே எப் ரோத்தன்பெர்க் ஆங்கிலப் பேராசிரியராகவும் அமெரிக்க இலக்கியப் பேராசிரியராகவும் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் மாந்தவியல் நடுவத்தின் இயக்குநராகவும் உள்ளார்[1]. பின்னைக் குடியேற்றவியல் ஆய்வில் நன்கு அறியப்பட்டவர். இந்திய நடுவணரசு இவருக்கு 2012 இல் பத்ம பூசண் விருது வழங்கிக் கவுரவித்தது[2].

ஓமி கே பாபா
பிறப்பு1949
மும்பை, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
கிறித்துவ சர்ச், ஆக்சுபோர்டு
காலம்20ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பள்ளிபின்னைக் குடியேற்றவியல்
பின்னமைப்பு வாதம்
முக்கிய ஆர்வங்கள்
எண்ணங்களின் வரலாறு, இலக்கியம்

மும்பையில் பார்சிக் குடும்பத்தில் பிறந்த ஓமி பாபா மும்பை எல்பின்சுடன் கல்லூரியிலும் பின்னர் ஆக்சுபோர்டில் கிறித்தவ சர்ச்சில் கல்லூரியிலும் ஆங்கில இலக்கியம் படித்தார். காலனிய மக்களின் நாகரிகம், பண்பாடு, அடையாளங்கள், தடைகள், சிக்கல்கள் ஆகியன பற்றிய சில நூல்கள் எழுதியுள்ளார்.

ஓமி கே பாபாவின் தூரத்து உறவினர் அணுவியல் அறிஞர் ஓமி பாபா ஆவார்.

உசாத்துணை

தொகு
  1. [1]
  2. "Padma Awards". pib. 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஓமி கே பாபா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
நேர்காணல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமி_கே_பாபா&oldid=3237452" இலிருந்து மீள்விக்கப்பட்டது