டோனி மாரிசன்

தோனி மாரிசன் (ரொனி மொறிசன், Toni Morrison,[2] பெப்ரவரி 18, 1931 – ஆகத்து 5, 2019) 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

தோனி மாரிசன்
Toni Morrison
1998 இல் மாரிசன்
1998 இல் மாரிசன்
பிறப்புகுலோ அர்டேலியா வூபோர்டு
(1931-02-18)பெப்ரவரி 18, 1931 [1]
லொரெயின், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஆகத்து 5, 2019(2019-08-05) (அகவை 88)
நியூயார்க் நகரம், அமெரிக்கா
கல்வி நிலையம்அவார்டு பல்கலைக்க்ழகம் (இளங்கலை)
கோர்னெல் பல்கலைக்கழகம் (முதுகலை)
வகைஅமெரிக்க இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்
கையொப்பம்

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

தொகு

டோனி மோரிசன் ஒகையோவின் லோரெய்னில் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பத்தில் ரமா (நீ வில்லிஸ்) மற்றும் ஜார்ஜ் வோஃபோர்டு ஆகியோருக்குநான்கு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார்.[3] பாரம்பரிய ஆப்பிரிக்க-அமெரிக்க நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பேய் கதைகள் மற்றும் பாடல்களைப் பாடுவதன் மூலம் மோரிசனின் பெற்றோர் அவளுக்கு பாரம்பரியம் மற்றும் மொழி உணர்வைத் தூண்டினர்.[4] மோரிசன் சிறுவயதில் வாசிப்பில் ஆர்வம் காட்டினார். அவருக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஜேன் ஆஸ்டன், லியோ டால்ஸ்டாய் ஆகியோர் அடங்குவர்.[5] அவர் தனது 12 வயதில் கத்தோலிக்க சமயத்தை தழுவினார். அந்தோனி என்ற ஞானஸ்நானப் பெயரைப் பெற்றார்.[6] இது டோனி என்ற புனைப்பெயருக்கு வழிவகுத்தது. லோரெய்ன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் அங்கு விவாதக் குழு, ஆண்டு புத்தக ஊழியர்கள் மற்றும் நாடகக் கழகத்தில் பங்குபற்றினார்.

1949 ஆம் ஆண்டில், வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வரலாற்று ரீதியாக கருப்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சக கறுப்பின புத்திஜீவிகளின் நிறுவனத்தை நாடினார். ஹார்வர்டில் இருந்தபோதுதான் அவர் இனரீதியாக பிரிக்கப்பட்ட உணவகங்களையும் பேருந்துகளையும் முதன்முதலில் சந்தித்தார். அவர் 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் மற்றும் 1955 ஆம் ஆண்டில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[4]

முதலில் ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் தெற்கு பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்பித்தார். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார். [7] ஹார்வர்டில் கற்பிக்கும் போது ஜமைக்காவின் கட்டிடக் கலைஞரான ஹரோல்ட் எனபவரை சந்தித்தார். 1958 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்  1964 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.[8] மணமுறிவுக்கு பின், 1965 ஆம் ஆண்டில் நியூயார்க்கின் சைராகுஸில் வெளியீட்டு நிறுவனம் ரேண்டம் ஹவுஸின் பாடநூல் பிரிவான எல். டபிள்யூ. சிங்கரில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நியூயார்க் நகரில் உள்ள ரேண்டம் ஹவுஸுக்கு மாற்றப்பட்டார். ரேண்டம் ஹவுஸின் புனைகதைத் துறையில் முதல் கறுப்பின பெண் மூத்த ஆசிரியரானார்.[9]

நைஜீரிய எழுத்தாளர்களான வோல் சொயின்கா, சினுவா அச்செபே மற்றும் தென்னாப்பிரிக்க நாடக ஆசிரியர் அதோல் புகார்ட் ஆகியோரின் படைப்புகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்க இலக்கியமான (1972) பிளாக் இலக்கியம் இவர் பணியாற்றிய முதல் புத்தகங்களில் ஒன்றாகும். ஆப்பிரிக்க- அமெரிக்க இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.[4] குத்துச்சண்டை வீரரான முகம்மது அலியின் சுயசரிதையை வெளியீட்டிற்கு கொண்டு வந்தார். 1968 ஆம் ஆண்டில் போக்குவரத்து அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட புதினாசிரியரும், கவிஞருமான ஹென்றி டுமாசின் படைப்புகளை அவர் வெளியிட்டார்.[10] மோரிசன் உருவாக்கித் திருத்திய மற்ற புத்தகங்களான தி பிளாக் புக் (1999) என்பது அடிமை காலம் முதல் 1920 கள் வரை அமெரிக்காவில் புகைப்படங்கள், எடுத்துக்காட்டுகள், கட்டுரைகள் மற்றும் கறுப்பின வாழ்க்கையின் பிற ஆவணங்களின் தொகுப்பாகும்.[11] ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முறைசாரா கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் குழுவின் ஒரு பகுதியாக மோரிசன் புனைகதை எழுதத் தொடங்கினார்.

1970 ஆம் ஆண்டு தி ப்ளூட்ஸ் ஐ என்ற புதினத்தை வெளியிட்டார்.[12] 1973 இல் மோரிசனின் இரண்டாவது புதினமாகிய சூலா மோரிசனின் இரண்டாவது புதினமாகிய சூலா தேசிய புத்தக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இந்த புதினம் புத்தக விமர்சகர்கள் வட்ட விருதையும் வென்றது.[13] 1979 ஆம் ஆண்டு பர்னாட் கல்லூரி தொடக்க விழாவில் மோரிசனுக்கு உயரிய கௌரவமான பர்னாட் டிஸ்டிங்சன் பதக்கம் வழங்கப்பட்டது.[14] இவர் நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் நியூ பிரன்சுவிக் வளாகத்திலும் ஆங்கிலம் கற்பித்தார். 1986 முதல் 1988 வரை பார்ட் கல்லூரியில் வருகை பேராசிரியராக பணியாற்றினார்.[15]

மோரிசன் 1987 ஆம் ஆண்டில் தனது மிகவும் பிரபலமான  பிலவ்ட் புதினத்தை வெளியிட்டார். இந்த புதினம் இவருக்கு வெற்றிப் புத்தகமாகவும், சிறந்த விற்பனை புத்தகமாகவும் திகழ்ந்தது. இரண்டு மாதங்களுக்கு பின் இந்த புதினத்திற்காக புனைக் கதைக்கான புலிட்சர் பரிசையும், அனிஸ்பீல்ட் வுல்ப் புத்தக விருதையும் வென்றது.[16] 1992 ஆம் ஆண்டில் பிளேயிங் இன் த டார்க்: ஒயிட்னஸ் அண்ட் த லிட்டரரி இமேஜினேசன் என்ற முதல் இலக்கிய விமர்சன புத்தகத்தை வெளியிட்டார். 1993 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1997 முதல் 2003 வரை கார்னர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். 2005 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் ஒப் லெட்டர்ஸ் பட்டம் வழங்கியது.[17]

2006 ஆம் ஆண்டில் 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அமெரிக்க புனைகதைகளின் சிறந்த படைப்பாக பிலவ்ட் புத்தகத்தை த நியூயார்க் டைம்ஸ் பெயரிட்டது. 2008 ஆம் ஆண்டில் எ மெர்சி என்ற புதினத்தை வெளியிட்டார். மோரிசன் தனது இளைய மகன் ஸ்லேட் மோரிசனுடன் குழந்தைகளுக்காக புத்தகங்களை எழுதினார். ஸ்லேட் ஒரு ஓவியராகவும் இசைக்கலைஞராகவும் இருந்தார். 2010 ஆம் ஆண்டில் திசம்பரில் 45 வயதில் கணைய புற்றுநோயால் இறந்தார்.[18] மோரிசனின் புதினமான ஹோம் ஸ்லேட் இறந்த போது பாதி முடிந்திருந்தது. 2011 ஆம் ஆண்டு ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் ஆப் லெட்டர்ஸ் பட்டம் வழங்கியது. 2012 ஆம் ஆண்டில் ஹோம் என்ற புதினத்தை வெளியிட்டு அதை தனது மகன் ஸ்லேட் மோரிசனுக்கு அர்ப்பணித்தார்.[19]

இறப்பு

தொகு

மோரிசன் 2019 ஆம் ஆண்டில் ஆகத்து 5 இல்  நியூயார்க் நகரத்தின் தி பிராங்ஸில் உள்ள மான்டிபியோர் மருத்துவமனையில் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டு 88வது வயதில் இறந்தார்.[20]

படைப்புகள்

தொகு

புதினங்கள்

தொகு
  • நீல நிற கண் (The Bluest Eye-1970)
  • சூலா (Sula - 1973)
  • சாலமனின் பாடல் (Song of Solomon - 1977)
  • தார் குழந்தை ( Tar baby - 1981)
  • அன்பிற்குரிய (Beloved - 1987)
  • ஜாஸ் (Jazz - 1992)
  • சொர்க்கம் (Paradise - 1998)
  • அன்பு (Love - 2003)
  • ஒரு மன்னிப்பு (A Mercy - 2008)

சிறுவர்களுக்கான நூல்கள்

தொகு
  • பெரிய பெட்டி (The Big Box - 1999)
  • இழிவான மக்களின் புத்தகம் (The book of mean people - 2002)
  • சிங்கமா அல்லது எலியா? (The lion or the mouse? -2003)
  • எறும்பா அல்லது வெட்டுக்கிளியா? (The ant or the grasshopper? - 2003)
  • கசகசாச் செடியா அல்லது பாம்பா? (The poppy or the snake? - 2004)

மேற்கோள்கள்

தொகு
  1. "Toni Morrison Fast Facts". CNN. https://www.cnn.com/2013/04/14/us/toni-morrison-fast-facts/index.html. 
  2. Duvall, John N. (2000). The Identifying Fictions of Toni Morrison: Modernist Authenticity and Postmodern Blackness. Palgrave Macmillan. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-23402-7.
  3. "CHLOE WOFFORD Talks About TONI MORRISON". www.en.utexas.edu. Archived from the original on 2005-01-15. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  4. 4.0 4.1 4.2 "How Toni Morrison Fostered a Generation of Black Writers". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Awaiting Toni Morrison- NOLA.com". web.archive.org. 2007-09-30. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. "Toni Morrison: 'I want to feel what I feel. Even if it's not happiness". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. "Virginia Woolf's and William Faulkner's Treatment of the Alienated. Cornell University". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  8. "Toni Morrison: 'I'm writing for black people ... I don't have to apologise". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. "Toni Morrison". Biography (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  10. Morrison, Toni (Summer 1988). "On behalf of Henry Dumas". Black American Literature Forum. 22 (2): 310–312. doi:10.2307/2904523. ISSN 0148-6179. JSTOR 2904523.
  11. Ghansah, Rachel Kaadzi (April 8, 2015). ""The Radical Vision of Toni Morrison"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  12. "The New York Times: Book Review Search Article". archive.nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  13. "All Past National Book Critics Circle Award Winners and Finalists". Archived from the original on 2019-10-06.
  14. "Columbia Daily Spectator 18 May 2005 — Columbia Spectator". spectatorarchive.library.columbia.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  15. Fultz 2003, p. xii.
  16. "Beloved". Anisfield-Wolf Book Awards (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  17. Morrison, Toni (2008). "Toni Morrison: Conversations". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: numeric names: authors list (link)
  18. "Who Is the Author of Toni Morrison?". New York Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  19. "I want to feel what I feel. Even if it's not happiness". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  20. "Toni Morrison, Towering Novelist of the Black Experience, Dies at 88;". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_மாரிசன்&oldid=3556847" இலிருந்து மீள்விக்கப்பட்டது