ஓல்மியம்(III) சல்பைடு

வேதிச் சேர்மம்

ஓல்மியம்(III) சல்பைடு (Holmium(III) sulfide) என்பது Ho2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் சல்பைடு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மற்ற அருமண் சல்பைடுகளைப் போலவே இதுவும் உயர் செயல்திறன் கொண்ட கனிம நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஓல்மியம்(III) சல்பைடு
இனங்காட்டிகள்
12162-59-3 Y
ChemSpider 145818
EC number 235-302-3
InChI
  • InChI=1S/2Ho.3S/q2*+3;3*-2
    Key: NJMYJOBJCDACOG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166640
  • [Ho+3].[Ho+3].[S-2].[S-2].[S-2]
பண்புகள்
Ho2S3
வாய்ப்பாட்டு எடை 426.04 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு-மஞ்சள் நிறத் திண்மம்[1]
அடர்த்தி 5.92 கி/செ.மீ−3[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஓல்மியம்(III) ஆக்சைடு; ஓல்மியம்(III) செலீனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டிசிப்ரோசியம்(III) சல்பைடு
எர்பியம்(III) சல்பைடு]]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஓல்மியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடை 1325 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் ஓல்மியம்(III) சல்பைடு கிடைக்கிறது.[2]

Ho2O3 + 3 H2S → Ho2S3 + 3 H2O

பண்புகள்

தொகு

ஓல்மியம்(III) சல்பைடு ஆனது ஒற்றைசாய்வு படிக அமைப்பில்[1] P21/m (எண். 11) என்ற இடக்குழுவுடன்[3] ஆரஞ்சு-மஞ்சள் நிறப் படிகங்களைக் கொண்டுள்ளது. உயர் அழுத்தத்தின் கீழ் ஓல்மியம்(III) சல்பைடு கனசதுர மற்றும் செஞ்சாய்சதுர படிக அமைப்புகளில் உருவாகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Lide, David R. (2004). CRC Handbook of Chemistry and Physics, 84th Edition. CRC Press. p. 4-60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849304849.
  2. G. Meyer; Lester R. Morss, eds. (1991). Synthesis of Lanthanide and Actinide Compounds. Kluwer Academic Publishers. pp. 329–335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0792310187.
  3. "Ho2S3: crystal structure, physical properties". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10681735_623. Archived from the original on 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
  4. Tonkov, E. Yu (1998). Compounds and Alloys Under High Pressure A Handbook. CRC Press. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5699-047-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்(III)_சல்பைடு&oldid=3946979" இலிருந்து மீள்விக்கப்பட்டது