ஓல்மியம்(III) ஆக்சைடு
ஓல்மியம்(III) ஆக்சைடு (holmium(III) oxide) அல்லது ஓல்மியம் ஆக்சைடு (holmium oxide) என்பது புவியில் காணப்படும் மிக அரிதான ஓல்மியம் தனிமத்தையும், ஆக்சிசனையும் கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ho2O3 ஆகும். ஓல்மியம் ஆக்சைடானது, டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dy2O3) உடன் இணையும்பொழுது சக்திவாய்ந்த பாராகாந்தப் பொருளாக அறியப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடானது, எர்பியா என்றழைக்கப்படும் எர்பிய ஆக்சைடு தனிமங்களின் கூற்றாக ஏற்கப்படுகிறது. பொதுவாக இயற்கையில் மூவிணைதிறன் லாந்தனைடுகளின் ஆக்சைடுகள் ஒன்றாகவே கிடைக்கிறது, இதனைப் பிரிப்பதற்கு சிறப்பு வழிமுறைகள் தேவைப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடு சிறப்பு வண்ணக் கண்ணாடிகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடு மற்றும் ஓல்மியம் ஆக்சைடு கரைசல் கொண்ட கண்ணாடி கண்ணுக்கு புலப்படும் நிறமாலை வரம்பில் தொடர்ச்சியாக ஏற்படும் கூர்மையான ஒளியியல் முகடுகளை உறிஞ்சுகிறது. எனவே, இது பாரம்பரியமாக ஒளியியல் நிறமாலைமானிகளில் அளவீடுகளின் பொழுது தரநிர்ணயமாக பயன்படுத்தப்படுகின்றன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Holmium(III) oxide
| |
வேறு பெயர்கள்
Holmium oxide, Holmia
| |
இனங்காட்டிகள் | |
12055-62-8 | |
ChemSpider | 3441223 |
EC number | 235-015-3 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 4232365 |
| |
பண்புகள் | |
Ho2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 377.86 g·mol−1 |
தோற்றம் | Pale yellow, opaque crystals |
அடர்த்தி | 8.41 g cm−3 |
உருகுநிலை | 2,415 °C (4,379 °F; 2,688 K) |
கொதிநிலை | 3,900 °C (7,050 °F; 4,170 K) |
Band gap | 5.3 eV [1] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.8 [1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Cubic, cI80 |
புறவெளித் தொகுதி | Ia-3, No. 206 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1880.7 kJ mol−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
158.2 J mol−1 K−1 |
வெப்பக் கொண்மை, C | 115.0 J mol−1 K−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
S-சொற்றொடர்கள் | S22, S24/25 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஓல்மியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம் ஆக்சைடு Erbium(III) oxide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Wiktorczyk, T (2002). "Preparation and optical properties of holmium oxide thin films". Thin Solid Films 405: 238. doi:10.1016/S0040-6090(01)01760-6. Bibcode: 2002TSF...405..238W.