ஓமந்தூர் ராமசாமி
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiyar) இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் | |
---|---|
![]() | |
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் | |
சென்னை மாகாண முதல்வர் | |
பதவியில் மார்ச் 23, 1947 – ஏப்ரல் 6, 1949 | |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
ஆளுநர் | சர் ஆர்ச்சிபல்டு எட்வர்டு நியி |
முன்னவர் | த. பிரகாசம் |
பின்வந்தவர் | குமாரசாமி ராஜா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 பிப்ரவரி, 1895 ஓமந்தூர், தென் ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம் , இந்தியா ![]() |
இறப்பு | 25 ஆகத்து 1970 வடலூர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
பணி | விவசாயி,ஆட்சியாளர் |
தொழில் | விவசாயி |
சமயம் | இந்து |
ஆரம்ப வாழ்க்கை தொகு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் வால்டர் சுடர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
முதலமைச்சராக தொகு
இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார்
ஹைதராபாத் இணைப்பு தொகு
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாதுக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என படேலுக்கு ஒமந்தூரார் எச்சரிக்கை செய்தார். அதன் பின்னரே ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டது. இந்த அரும்பணிக்காக படேல் அவர்கள் ஒமந்தூராரை மனம் திறந்து பாராட்டினார். ஆனால் பின்நாளில் எழுதப்பட்ட வரலாற்றில் ஒமந்தூராரின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
இறுதி வாழ்வு தொகு
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஒமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மீகத்தின் பக்கம் சென்றது. அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். இவர் ஆகத்து 25, 1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
நினைவு தொகு
- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது.[1][2]
- இந்திய அஞ்சல் துறை ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.[3]
- மு.கருணாநிதி ஆட்சியில் இவர் நினைவாக 'ஓமந்தூரார் மாளிகை' புதிய தலைமை செயலகத்திற்காக சென்னை அண்ணாசாலையில் பிப்ரவரி 2014 கட்டிமுடிக்கப்பட்டது. பின் ஆட்சி பொறுப்பேற்ற ஜெ.ஜெயலலிதா 400 படுக்கை வசதி கொண்ட 'ஓமந்தூரார் பலதுறை மருத்துவமனை'யாக மாற்றினார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ http://dinamani.com/edition_chennai/chennai/article1472572.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140325230834/http://tndipr.gov.in/tamil/memorial_under_construction.aspx.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130814101038/http://www.indiapost.gov.in/Stamps2010.aspx.