ககனப்பள்ளி ராதா தேவி

ககனபள்ளி ராதா தேவி (Kagganapalli Radha Devi) இந்தியாவைச் சேர்ந்த ஆர்வலர் ஆவார். இந்துக் கோவில்களில் தலையை மொட்டியடிப்பதற்கு ஆண் முடிதிருத்தும் பணியாளர்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றி பெற்றார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெண் முடிதிருத்தும் பணியாளர்களை நியமிக்க ஒப்புக்கொண்டது. இவரது பணியினை அங்கீகரித்து நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

ககனப்பள்ளி ராதா தேவி
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஇந்துக் கோயில்களில் பின்பற்றப்படும்
பாலின
வித்தியாசத்தை எதிர்த்து வெற்றி பெற்றவர்

வாழ்க்கை

தொகு

இவர், ஆந்திரப் பிரதேச பெண்கள் முடிதிருத்தும் சங்கத்தின் தலைவராகவும்,[1] திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மகளிர் முடிதிருத்தும் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் என்பதால் இந்துக் கோயில்களில் தாங்கள் ஒதுக்கப்படுவதாக கோயிலில் முடிதிருத்தும் பெண்கள் இவரிடம் தெரிவித்தனர். இவர், அவர்களின் வழக்கை வென்றெடுக்க முடிவு செய்தார்.[2]

செயல்பாடுகள்

தொகு
 
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் பெண்கள் பகுதி 97 , 99 இல் பெண்களுக்கு முடி எடுக்கப்படுகிறது

ஆந்திராவின் திருமலையில் உள்ள [[வெங்கடாசலபதி கோயிலில் பல பக்தர்கள் தினமும் கடவுளுக்கு மொட்டையடித்துக் கொள்கிறார்கள்.[1] ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்ட முடியின் அளவு ஒரு டன்னுக்கு மேல் சேர்கிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் முடியானது பெரிய கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது. மேலும் இது சர்வதேச அளவில் விற்கப்படுகிறது, இது கோயிலுக்கு கணிசமான லாபத்தை உருவாக்குகிறது. முடி உயர் தரம் வாய்ந்தது. இந்தியாவுக்கு வெளியே செயற்கை முடி (விக்) தயாரிக்க பயன்படுவதால் அதன் விலை கிலோ $166 டாலர் வரை இருக்கும்.

2004ஆம் ஆண்டில் பழமைவாதிகளிடமிருந்து இதற்கு ஒரு எதிர்வினை ஏற்பட்டது. அவர்கள் சடங்கு முறையில் சேகரிக்கப்பட்ட தலைமுடியிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை முடியை அணிய முடியாது என்று கூறினர். பல விக்குகள் அழிக்கப்பட்டன. ஆனால் முடியின் விலை நிலையானதாகவே இருந்தது. இவ்வாறு மொட்டையடிக்கும் பாரம்பரியம் நயீ சமூகத்தைச் சேர்ந்த ஆண்களிடமே இருந்தது. இது சில பாகுபாடுகளையும் பெண்களிடமிருந்து கோரிக்கைகளையும் ஏற்படுத்தியது. இராதா தேவி தலைமையிலான ஆர்ப்பாட்டம் ஆட்சேபனைகளைத் தகர்த்ததுடன், இந்தியாவின் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கிய நாரி சக்தி விருதுடன் இவர் அங்கீகரிக்கப்பட்டார்.[3] அனைத்துலக பெண்கள் நாள் அன்று புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.[1] அப்போது அமைச்சர் மேனகா காந்தியையும், பின்னர் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 P, Ambika; Mar 8, it / TNN /; 2019; Ist, 23:03. "From masons, barbers to creators of forests and sustainable homes, nari shakti takes charge | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 January 2021. {{cite web}}: |last3= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  2. "Ms. Kagganapalli Radha Devi - #NariShakti Puraskar 2018 Awardee in Individual category". Ministry of WCD (India). 8 March 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  3. "Ms. Kagganapalli Radha Devi - #NariShakti Puraskar 2018 Awardee in Individual category". Ministry of WCD (India). 8 March 2019. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. Mohammed, Irfan (20 March 2019). "India president confers Manju with Nari Shakti Puraskar award". Saudigazette (in English). பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககனப்பள்ளி_ராதா_தேவி&oldid=3931164" இலிருந்து மீள்விக்கப்பட்டது