கங்காரு (2015 திரைப்படம்)
கங்காரு (Kangaroo) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் மொழி அதிரடித் திரைப் படமாகும். இதை இயக்குநர் சாமி எழுதி இயக்கியிருந்தார். வி ஹவுஸ் புரொக்சன்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் புதுமுகங்களான அர்ச்சுனா, வர்சா அசுவதி மற்றும் ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாடகர் சீனிவாஸ் படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் 2015 ஏப்ரல் 24 அன்று வெளியிடப்பட்டது.
கங்காரு | |
---|---|
இயக்கம் | சாமி |
தயாரிப்பு | சுரேஷ் காமாட்சி எஸ். இரவிச்சந்திரன் |
கதை | சாமி |
இசை | சீனிவாசு |
நடிப்பு | அர்ச்சுனா வர்சா அசுவதி ஸ்ரீ பிரியங்கா |
ஒளிப்பதிவு | இராஜ ரத்தினம் |
படத்தொகுப்பு | மணி |
கலையகம் | வி ஹவுஸ் புரொக்சன்ஸ் |
விநியோகம் | வி ஹவுஸ் புரொக்சன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 24, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- முருகேசனாக (கங்காரு) அர்ச்சுனா
- செல்லமாக வர்சா அசுவதி
- அழகுவாக ஸ்ரீ பிரியங்கா
- கங்காருவின் நண்பராக கஞ்சா கருப்பு
- தகப்பன் சுவாமி நாடராக தம்பி ராமையா
- சாட்டையாக ஆர்.சுந்தர்ராஜன்
- டிக்கெட்டாக கலாபவன் மணி
- காவல் ஆய்வாளராக கஜினி
- காவலராக இயக்குநர் சாமி
தயாரிப்பு
தொகுகங்காரு அக்கறையுள்ள தாய்மார்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட படமாக இருக்கும் என்று இயக்குநர் சாமி வெளிப்படுத்தியதோடு, தனது முந்தைய மூன்று திட்டங்களின் சர்ச்சைக்குரிய கருப்பொருள்களிலிருந்து மாற்றத்தைக் குறிக்கும் வகையில் இது ஒரு குடும்பப் படமாக இருக்கும் என்றார். இந்த படத்திற்கான தயாரிப்பு ஏப்ரல் 2013 இல் தொடங்கியது.[1]
ஒலிப்பதிவு
தொகுபடத்தின் இசை ஒலிப்பதிவு 2013 திசம்பரில் வெளியிடப்பட்டதற்கு ஏ. ஆர். ரகுமான் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். பாடல்களுக்கு சீனிவாசு இசையமைத்தார். அவரது மகள் சரண்யா சீனிவாசு படத்தின் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.[2][3] வைரமுத்து இந்த படத்திற்கு பாடல் எழுதினார். ஒரு சிறிய செலவில் எடுக்கப்பட்ட படத்தில் பணிபுரிந்த போதிலும், இந்த திட்டத்தை நோக்கிய அவரது முயற்சிகள் அவரது மகத்தான முயற்சிகளுக்கு ஒத்தவை என்று கூறினார்.[4] ஒலிப்பதிவு நேர்மறையான மதிப்புரைகளைப் பெற்றது.[5]
விமர்சனம்
தொகுசிஃபி. “சாமியின் முந்தைய முயற்சிகளுடன் ஒப்பிடுகையில், கங்காரு ஒரு சிறந்த, குடும்ப நட்பு திரைப்படம், ஆனால் பொதுவான பார்வையில், இது ஒரு நடுநிலை!” என எழுதியது.[6] டெக்கான் குரோனிகள் இவ்வாறு எழுதியது “கதை சுவாரசுயமாகத் தெரிகிறது, ஆனால் 80களின் பாணியில் மென்மையான நடிப்பு மற்றும் தெளிவற்ற நகைச்சுவை மூலம் அது வெளிவருகிறது. முதல் பாதியில் வேகம் இல்லை. இருப்பினும், இடைவேளைக்குப் பின் சில எதிர்பாராத திருப்பங்கள் வேகத்தை அதிகரிக்கிறது”.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Samy back with his next". The Times of India. 20 April 2013. Archived from the original on 3 February 2014. பார்க்கப்பட்ட நாள் 1 February 2014.
- ↑ "AR Rahman launches Kangaroo audio". Sify. 28 December 2013. Archived from the original on 1 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 February 2014.
- ↑ "Kangaroo". Gaana. Archived from the original on 29 March 2020. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
- ↑ Subramanian, Anupama (28 December 2013). "A.R. Rahman unveils 'Kangaroo' audio". Deccan Chronicle (in ஆங்கிலம்). Archived from the original on 16 December 2024. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
- ↑ https://www.behindwoods.com/tamil-movies/kangaroo/kangaroo-songs-review.html
- ↑ "Kangaroo". Sify. Archived from the original on 24 April 2015. பார்க்கப்பட்ட நாள் 1 October 2022.
- ↑ Subramanian, Anupama (26 April 2015). "Movie Review ' Kangaroo': Interesting plot with unexpected twist and turns". Deccan Chronicle. Archived from the original on 29 March 2020. பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.