கடக்காடு பத்ரகாளி கோயில்
கடக்காடு பத்ரகாளி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பந்தலத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும் [1]. இது கடக்காட்டின் வடக்கில் பத்தனம்திட்டா எம்.சி.சாலையில் அமைந்துள்ளது.
கோயில் வளாகம்
தொகுகோயில் வளாகத்தில் ஒரு ஆணைக்கொட்டில், அலுவலக அறை ஆகியவை உள்ளன. கோவிலில் இந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள், விருந்து மண்டபம், உடை மாற்றும் அறைகள், கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கான மேடை ஆகியவை உள்ளன.
மூலவர்
தொகுகோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார். இங்கு பிரம்மராட்சஸ், யக்ஷி, நாகா போன்ற பிற துணைத்தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.
திருவிழாக்கள்
தொகுஆண்டுதோறும் நடைபெறுகின்ற பொங்கல் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். [2] தெய்வத்திற்காக பொங்கல் தயாரிக்கப்படுகின்ற சடங்கு கோயிலுக்கு வெளியில் மேற்கொள்ளப்படுகிறது. சன்னதிக்கு வெளியில் பெண்கள் மண் பானைகளில் அரிசியையும் வெல்லத்தையும் கலந்து சமைத்து,ம்அம்மனுக்கு சமர்பிப்பர். அத்துடன் அரிசி, வெல்லத்தால் செய்யப்பட்டபிற வகையான இனிப்புப்பலகாரங்களான மண்டப்புட்டு, அப்பம், தேரளி ஆகியவற்றையும் சமைப்பர். பிரசாதம் சமைக்க தேங்காய் சில்லுகளையும் பயன்படுத்துவர். விழாவின்போது இயற்கைப் பொருள்களைக்கொண்டு கோயில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பொங்கல் தயாரிப்பதற்காக புனிதத்தீயானது கோயிலிலிருந்து எடுத்துவரப்படும்.
மேலும் பார்க்கவும்
தொகு- கடக்காடு