எம். சி. ரோடு

முதன்மை நடுவண் சாலை அல்லது எம். சி. ரோடு கேரளத்தின் முதலாம் மாநில நெடுஞ்சாலை ஆகும். இது 240.6 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இதை கேரள அரசின் பொதுப்பணித் துறை மா.நெ 1 (SH 1) என்று நிர்வகிக்கிறது. இது திருவிதாங்கூரின் திவானாக இருந்த கேசவதாச இராசாவினால் கட்டமைக்கப்பட்டது.

இந்திய மாநில நெடுஞ்சாலை 1
1

கேரளத்தின் முதலாம் மாநில நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு கேரள அரசின் பொதுப்பணித் துறை
நெடுஞ்சாலை அமைப்பு

வழித்தடம்தொகு

 
செங்கன்னூர் அருகே இந்த நெடுஞ்சாலை

திருவனந்தபுரத்தின் கேசவதாசபுரத்தில் தொடங்கி வெம்பாயம், வெஞ்ஞாறமூடு, கிளிமானூர், நிலமேல், சடையமங்கலம், ஆயூர், கொட்டாரக்கரை, அடூர், பந்தளம், செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, , சிங்கவனம், கோட்டயம், ஏற்றுமானூர், குறவிலங்காடு,கூத்தாட்டுகுளம், மூவாற்றுப்புழை, கீழில்லம், பெரும்பாவூர், காலடி வழியாக அங்கமாலி வரை நீள்கிறது. இது அங்கமாலியில் 47 ஆவது தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. இது திருவனந்தபுரம், கொல்லம், பத்தனந்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், எறணாகுளம் ஆகிய மாவட்டங்களைக் கடக்கிறது.[1].

முதன்மைத்தன்மைதொகு

இது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைநகரை இராச்சியத்தின் பெரும்பாலான பெருநகரங்களுடன் இணைக்கும் முதன்மை நெடுஞ்சாலையாக அமைந்திருந்தது. சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் பலரும் இவ்வழியே உள்ள பல கோவில்களை வழிபட்ட வண்ணம் பயணிக்கின்றனர்.

வழியில் உள்ள நகரங்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. "கேரள பொதுப் பணித் துறை - மாநில நெடுஞ்சாலை". கேரள பொதுப் பணித் துறை. 2010-12-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 05 ஜனவரி 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சி._ரோடு&oldid=3236245" இருந்து மீள்விக்கப்பட்டது