கடலுண்டி ஆறு

மலப்புறம் மாவட்டத்தில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்று

கடலுண்டி ஆறு (Kadalundi_river) ( கடலுண்டிபுழா ) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் மலப்புறம் மாவட்டம் வழியாக பாயும் நான்கு முக்கிய நதிகளில் ஒன்றாகும். காளியாறு, பாரதப்புழா, திரூர் ஆறு ஆகியவை மற்ற மூன்று ஆறுகளாகும்.[1] மழையால் நீர்பெறும் இந்த ஆறு 130 கிலோமீட்டர் (81 மைல்) நீளம் கொண்டது. மேலும், மாவட்டத்தின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றாகும்.. [2]

கடலுண்டி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம்
கடலுண்டி ஆற்றின் இரவுக்காட்சி

கடலுண்டி ஆறு கேரளாவின் ஐந்தாவது நீளமான ஆறாகும். கடலுண்டி ஆறு மேலாற்றூர், பாண்டிக்காடு, மஞ்சேரி, மலப்புறம், பாணக்காடு, பாரப்பூர், வேங்கரா, திரூரங்காடி, பறப்பனங்காடி, வள்ளிக்குன்னு வழியாகப் பாய்ந்து கடலுண்டியில் அரபிக்கடலில் கலக்கிறது [3] இது ஒலிப்புழா ஆறும் வேலியாறும் சங்கமத்தால் உருவாகிறது. இது அமைதி பள்ளத்தாக்கின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தோன்றி மலப்புறம் மாவட்டம் வழியாகப் பாய்கிறது. இதற்கு ஓலிபுழா மற்றும் வேலியாறு என்ற இரண்டு முக்கிய துணையாறுகள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றிணைந்து மேலாற்றூருக்கு அருகிலுள்ள கடலுண்டி ஆறாக மாறுகிறது. கடலுண்டி ஆறு வரலாற்றுப் பகுதிகளான ஏறநாடு , வள்ளுவநாடு வழியாகச் செல்கிறது. கடலுண்டி ஆறு 1274 கிமீ² பரப்பளவை வடிகட்டுகிறது. மேலும், 120 கிமீ நீளம் கொண்டது. [4] கடலுண்டி பறவைகள் சரணாலயம் ஆறு அரபிக்கடலில் பாயுமிடத்தில் பரவியிருக்கிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டுப் பறவைகளும், சுமார் 60 வகையான புலம்பெயர்ந்த பறவைகளும் இங்கு வருகின்றன. [5]

கடலுண்டி ஆற்றின் ஒரு பரந்த பார்வை

கலாச்சார முக்கியத்துவம்

தொகு
 
கடலுண்டிப்புழா மீது மேலாற்றூர் பாலம்
 
வெள்ளியாறு ( அமைதி பள்ளத்தாக்கில் மேலாற்றூரிலிருந்து உருவாகி ஓலிப்புழாவுடன் ஒன்றிணைந்து கடலுண்டி ஆற்றை உருவாக்குகிறது

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Malappuram District Rivers". Malappuram.net. பார்க்கப்பட்ட நாள் 13 October 2006.
  2. "Kerala Government - General Features". Official Website of Kerala Government. Archived from the original on 2 November 2006. பார்க்கப்பட்ட நாள் 13 October 2006.
  3. "Rivers in Malappuram district". malappuram.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 November 2019.
  4. NIC Malappuram website
  5. "Wild Life Tourism in Kerala". keralaeverything.com. Archived from the original on 1 நவம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 13 October 2006.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kadalundi River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலுண்டி_ஆறு&oldid=4056702" இலிருந்து மீள்விக்கப்பட்டது