பரப்பனங்காடி
பரப்பனங்காடி, (Parappanangadi) என்பது இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தின் திரூரங்காடி வட்டத்திலுள்ள ஓர் முக்கிய நகரமும், நகராட்சியுமாகும். இது அரபிக் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. பரப்பனங்காடி தொடருந்து நிலையம் கேரளத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது கேரளாவின் முதல் தொடருந்துப் பாதையின் ( திரூர் - சாலியம்) ஓர் பகுதியாகும். [2] திரூர்-கடலுண்டி திப்பு சுல்தான் சாலையில் தானூருக்கு வடக்கே 9 கி.மீ. தொலைவில் கடலுண்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[3] கடலுண்டி ஆற்றின் கிளை நதியான பூரப்புழா ஆற்றுக்கு வடக்கேயும், வள்ளிக்குன்னுவிற்கும் தெற்கேயும் நகரம் அமைந்துள்ளது. இது இடைக்காலத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்துள்ளது. இது கோழிக்கோட்டின் சாமோரியன்களுக்கு ஆட்சியாளர்களாக இருந்த பரப்பநாடு இராச்சியத்தால் ஆளப்பட்டது. மேலும் வடக்கே பேப்பூர் துறைமுகம் வரை அதிகார வரம்பைக் கொண்டிருந்தது. இடைக்காலத்தின் ஆரம்பத்தில், கோழிக்கோடு, பரப்பனங்காடி ஆட்சியாளர்களின் கீழ், மலபார் கடற்கரையில் ஒரு முக்கியமான கடல் வர்த்தக மையமாக வளர்ந்தது. பின்னர் இது பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் மலபார் மாவட்டத்தில் ஏறநாடு வட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.
பரப்பனங்காடி
பரப்பநாடு | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 11°02′59″N 75°51′27″E / 11.04972°N 75.85750°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
அரசு | |
• நிர்வாகம் | பரப்பனங்காடி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 22.5 km2 (8.7 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 71,239 |
• அடர்த்தி | 3,200/km2 (8,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676 303 |
தொலைபேசி இணைப்பு எண் | 0494 |
வாகனப் பதிவு | கே.எல்.-55, கே.எல்.-65, கே.எல்.-10 |
அருகிலுள்ள நகரம் | மலப்புறம் |
கல்வியறிவு | 100%[சான்று தேவை] |
மக்களவைத் தொகுதி | பொன்னானி |
நிர்வாகம் | பரப்பனங்காடி நகராட்சி |
தட்பவெப்ப நிலை | சாதாரண நிலை (கோப்பென்) |
இணையதளம் | parappanangadimunicipality |
நடுகாணி-பரப்பனங்காடி சாலை மலப்புறம் மாவட்டத்தின் கரையோரப் பகுதியை கிழக்கு மலைப்பாங்கான எல்லையுடன் இணைக்கிறது. இது நிலம்பூருக்கு அருகிலுள்ள தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் எல்லையான நடுகாணி சூரத்தில் உள்ளது. [4] இது நடுகாணி மலைச்சாலையை அடைவதற்கு முன்பு திரூரங்காடி, மலப்புறம், மஞ்சேரி, நிலம்பூர் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது. திருவிதாங்கூரின் கோயி தம்புரான்கள் பறப்பநாடு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வரலாறு
தொகுஇந்த நகரம் இடைக்காலத்தில் பறப்பநாடு இராச்சியத்தின் தலைமையகமாக இருந்தது. [5] அப்போது வர்த்தகத்தின் முக்கியமான மையமாக இருந்த இது, அரேபியர்களால் "பார்புரன்காட்" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. [6] பரப்பநாடு இராச்சியம் வள்ளிக்குன்னு-கடலுண்டி-சாலியம்-பேப்பூர் பிராந்தியத்தின் மீது உரிமை கொண்டிருந்தது. இது பெரும்பாலும் பண்டைய கடல் வர்த்தக துறைமுகமான தொண்டியுடன் அடையாளம் காணப்படுகிறது. தொண்டி, சங்கம் காலத்தில் (பொ.ச. 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு சேரர்களுக்கும் உரோமைப் பேரரசுக்கும் இடையில் முசிறித் துறைமுகத்துக்கு அடுத்தபடியாக ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது.[7]
தொண்டித் துறைமுகம் கெப்ரோபோடோசின் ( சேரப் பேரரசு ) வடமேற்கு எல்லையில் அமைந்திருந்ததாக உரோம எழுத்தாளரும், வரலாற்றாளருமான மூத்த பிளினி (பொ.ச. 1 ஆம் நூற்றாண்டு) கூறுகிறார்.[8] தொண்டியில் துறைமுகத்திற்கு வடக்கே அமைந்துள்ள வடக்கு மலபார் பகுதி, சங்க காலத்தில் எழிமலை இராச்சியத்தால் ஆளப்பட்டது.[9] செங்கடல் செலவின் கூற்றுப்படி, இலிமிரிக் எனப்படும் ஒரு பகுதி நௌராவிலும் (கண்ணூர்), தொண்டியிலும் தொடங்கியது எனத் தெரிகிறது. இருப்பினும் உரோமைச் சேர்ந்த புவியியலாளரான தொலெமி இலிமிரிக்கின் தொடக்க புள்ளியாக தொண்டியை மட்டுமே குறிப்பிடுகிறார். இப்பகுதி அநேகமாக கன்னியாகுமரியில் முடிந்திருக்கலாம்; இது இன்றைய மலபார் கடற்கரையை ஒத்திருக்கிறது. இப்பகுதியுடன் உரோமின் வருடாந்திர வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 50,000,000 செஸ்டெர்ஸ்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. [10] இலிமிரிக் கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்படுவதாக மூத்த பிளினி குறிப்பிட்டுள்ளார். [11] இலிமிரிக் , மிளகுத்தூளின் மூலமாக இருப்பதாக காஸ்மாஸ் இண்டிகோபுலஸ்டஸ் என்ற கிரேக்க வணிகர் குறிப்பிட்டுள்ளார். [12] [13]
சேரமான் பெருமாள்களின் தொன்மக்கதைகளின்படி, இந்தியாவின் முதல் பள்ளிவாசல் பொ.ச. 624 இல் கொடுங்கல்லூரில் கட்டப்பட்டது. நபிகள் நாயகத்தின் வாழ்நாளில் இஸ்லாத்திற்கு மாறிய (சி. 570). –632) சேர வம்சத்தின் கடைசி ஆட்சியாளரின் (சேரமான் பெருமாள்) ஆணையில் இதைப் பற்றிய விவரம் காணப்படுகிறது. [14] [15] [16] [17] சேரச் சக்கரவர்த்திகளின் கதை என்ற நூலின் கூற்றுப்படி, கொடுங்கல்லூர், கொல்லம், மடாய், பர்கூர், மங்களூர், காசர்கோடு, கண்ணூர், தர்மடம், கொயிலாண்டி, சாலியம் (சாலியம் பரப்பநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது) ஆகிய இடங்களில் காணப்படும் பள்ளிவாசல்கள் மாலிக் தினாரின் காலத்தில் கட்டப்பட்டவை. மேலும், இந்தியத் துணைக்கண்டத்தின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று.[18] காசர்கோடு நகரிலுள்ள தளங்கரையில் மாலிக் தினார் இறந்தார் என்று நம்பப்படுகிறது. [19]
பறப்பநாடு அரசர்களின் சத்திரியக் குடும்பத்தின் அரண்மனை பரப்பனங்காடி தொடருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் குடும்பத்திலிருந்தே வழக்கமாக இராணியின் திருவிதாங்கூர் குடும்பத்தின் துணைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1425 ஆம் ஆண்டில், நாடு வடக்கு பரப்பநாடு (பேப்பூர் சொரூபம்) எனவும் தெற்கு பரப்பநாடு (பரப்பூர் சொரூபம்) என பிரிக்கப்பட்டது. பரப்பநாடு சொரூபத்தின் ஆட்சியாளர்கள் கோழிக்கோட்டின் சாமோரியன்களுக்கு அடிமைகளாக இருந்தனர். பரப்பநாட்டின் ஆட்சியாளர்களான சத்திரியர்களில் ஒருவரான வேட்டத்துநாடு ஆட்சியாளர்களும் கொச்சி அரச குடும்பத்தில் ஒருவராக இருந்தனர். [20] பரபனங்காடி சாமோரியன்களின் ஆட்சியின் கீழ் முக்கியமான கடற்கரை நகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மேலும் இது இடைக்கால கேரளக் கடற்கரையின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும்.[21] அராபிய வர்த்தகர்கள் பொ.ச. 15 ஆம் நூற்றாண்டு வரை வர்த்தகத்தின் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தனர். 1573ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் இந்த நகரத்தை எரித்ததாக தெரிகிறது.
காலனித்துவ காலத்தில் பரப்பனங்காடியிலும், பொன்னானியிலும் கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் கட்டிய பள்ளிகள், கேரளாவின் பழமையான நவீன பள்ளிகளில் தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளன. [22] காலனித்துவ காலத்தில், பரப்பனங்காடி மலபார் மாவட்டத்தின் ஏறநாடு வட்டத்தின் கீழ் வைக்கப்பட்டது. [23] பின்னர் 1957ஆம் ஆண்டில், வட்டம் உருவானபோது, அது திரூர் வட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.[24] 1990களில் புதிதாக உருவான திரூரங்காடி வட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.[25]
போக்குவரத்து
தொகுகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ளது. பரப்பனங்காடியில் தொடருந்து நிலையமும் உள்ளது.[26] அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது .
நடுகாணி-பரப்பனங்காடி சாலை மலப்புறம் மாவட்டத்தின் கரையோரப் பகுதியை கிழக்கு மலைப்பாங்கான எல்லையுடன் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் எல்லையான நிலம்பூருக்கு அருகிலுள்ள நடுகாணி சூரத்தில் இணைக்கிறது. இது திரூரங்காடி, மலப்புறம், மஞ்சேரி மற்றும் நிலம்பூர் போன்ற முக்கிய நகரங்களை கடந்து செல்கிறது. [27]
பரப்பனங்காடி- மஞ்சேரி சாலையும் செட்டிப்பாடி- சம்ராவட்டம் சாலையும் பரப்பனங்காடியில் தொடங்கி முடிவடையும் இரண்டு முக்கியமான சாலைகளாகும். [28] திருர் - கடலுண்டி திப்பு சுல்தான் சாலை நகரம் வழியாக செல்கிறது.
பரப்பனங்காடியைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் (கேரள காளிதாசன்), இராஜராஜ வர்மா (கேரள பாணினி), ரவி வர்மா (பிரபல ஓவியர்) ஆகியோர் பரப்பநாடு அரச வம்சத்தின் வெவ்வேறு கிளைகளைச் சேர்ந்தவர்கள்.[29]
- தி இந்து (1898 முதல் 1905 வரை) நாளிதழின் தலைமை ஆசிரியரும், "தி இந்தியன் பேட்ரியாட்"டின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான திவான் பகதூர் கோழிச்சேரி கருணாகர மேனன் (1863-1922)[30]
- ஓ.சந்து மேனன் பரப்பனங்கடி நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது தனது "இந்துலேகா", "சாரதா" என்ற இரு புதினங்களை எழுதினார். இந்துலேகா மலையாள மொழியில் எழுதப்பட்ட முதல் பெரிய புதினாமாகும். இருபதாம் நூற்றாண்டின் இசுலாமிய அறிஞரும், கேரளாவில் இசுலாமிய கல்வியில் சீர்திருத்தவாதியும், கேரள ஜாமியத்துல் உலமாவின் நிறுவனரும்,[31] மதீனத்துல் உலூம் அரபு கல்லூரியின் நிறுவனருமான[32] எம்.சி.சி அப்துல் இரகுமான் மௌலவி (1906-1964) பரப்பனங்காடியைச் சேர்ந்தவர்.
- உம்மன் சாண்டி இரண்டாவது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த பி. கே. அப்து ரப்.
- முன்னாள் துணை முதல்வர் கே. அவுகாதர் குட்டி நகா.
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.பி. குஞ்ஞாலிக்குட்டி கீ
- பிரபல வரலாற்றாசிரியர்கள் முனைவர் எம். ஜி. எஸ் நாராயணன், முனைவர் எம். கங்காதரன், பிரபல இந்திய சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர்.
- பிரபல அறிஞர் என்.கே.முகம்மது மௌலவி (கேரள கேரள ஜாமியத்துல் உலமாவின் தற்போதைய தலைவர்) இவ்வூரில் வசிக்கிறார்.
- இசுலாமிய சொற்பொழிவார் எம். எம். அக்பர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Population of Parappanangadi". parappanangadimunicipality.lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
- ↑ "Kerala Travels". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
- ↑ "Physical divisions of Malappuram" (PDF). censusindia.gov.in. pp. 21–22. பார்க்கப்பட்ட நாள் 18 April 2020.
- ↑ Special Correspondent (12 February 2020). "നാടുകാണി–പരപ്പനങ്ങാടി റോഡ് ടാറിങ് തുടങ്ങി; വീതികൂട്ടലും ഓടനിർമാണവും പിന്നീട്". Manorama Online. https://www.manoramaonline.com/district-news/malappuram/2020/02/12/malappuram-tirurangadi-nadukani-parappanangadi-road-taring.amp.html.
- ↑ Devassy, M. K. (1965). District Census Handbook (2) - Kozhikode (1961) (PDF). Ernakulam: Government of Kerala.
- ↑ S. Muhammad Hussain Nainar (1942). Tuhfat-al-Mujahidin: An Historical Work in The Arabic Language. University of Madras.
- ↑ Coastal Histories: Society and Ecology in Pre-modern India, Yogesh Sharma, Primus Books 2010
- ↑ Gurukkal, R., & Whittaker, D. (2001).
- ↑ A. Shreedhara Menon, A Survey of Kerala History
- ↑ According to மூத்த பிளினி, goods from India were sold in the Empire at 100 times their original purchase price.
- ↑ Bostock, John (1855). "26 (Voyages to India)".
- ↑ Indicopleustes, Cosmas (1897).
- ↑ Das, Santosh Kumar (2006).
- ↑ Jonathan Goldstein (1999). The Jews of China. M. E. Sharpe. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780765601049.
- ↑ Edward Simpson (2008). Struggling with History: Islam and Cosmopolitanism in the Western Indian Ocean. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-70024-5.
- ↑ Uri M. Kupferschmidt (1987). The Supreme Muslim Council: Islam Under the British Mandate for Palestine. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-07929-8.
- ↑ Husain Raṇṭattāṇi (2007). Mappila Muslims: A Study on Society and Anti Colonial Struggles. Other Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903887-8-8.
- ↑ Prange, Sebastian R. Monsoon Islam: Trade and Faith on the Medieval Malabar Coast.
- ↑ Pg 58, Cultural heritage of கேரளம்: an introduction, A. Sreedhara Menon, East-West Publications, 1978
- ↑ Unni, K. Raman (1961-05-31). "Caste in south Malabar a study of social stratification in south Malabar" (in en). Maharaja Sayajirao University of Baroda: 108. http://shodhganga.inflibnet.ac.in:8080/jspui/handle/10603/60261.
- ↑ K. V. Krishna Iyer Zamorins of Calicut: From the Earliest Times to AD 1806.
- ↑ Leelakrishnan, Alamkode. "അമ്പതിന്റെ നിറവില് മലപ്പുറം; മലപ്പുറത്തിന്റെ മാനവിക മഹാപൈതൃകം".
- ↑ Logan, William (2010). Malabar Manual (Volume-I). New Delhi: Asian Educational Services. pp. 631–666. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120604476.Logan, William (2010).
- ↑ Devassy, M. K. (1965). District Census Handbook (2) - Kozhikode (1961). Ernakulam: Government of Kerala.Devassy, M. K. (1965).
- ↑ Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram. Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala.
- ↑ "ആ ചൂളംവിളി പിന്നെയും പിന്നെയും...". Mathrubhumi. 17 June 2019 இம் மூலத்தில் இருந்து 30 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201130082010/https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/kerala-first-railway-line-tirur-to-beypore-1.3880175."ആ ചൂളംവിളി പിന്നെയും പിന്നെയും. பரணிடப்பட்டது 2020-11-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "നാടുകാണി–പരപ്പനങ്ങാടി റോഡ് ടാറിങ് തുടങ്ങി; വീതികൂട്ടലും ഓടനിർമാണവും പിന്നീട്". 12 February 2020. https://www.manoramaonline.com/district-news/malappuram/2020/02/12/malappuram-tirurangadi-nadukani-parappanangadi-road-taring.amp.html.Special Correspondent (12 February 2020).
- ↑ "Parappanangadi PS". Kerala police. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
- ↑ Visakham thirunal. [Place of publication not identified]: Duc. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-613-9-12064-2. இணையக் கணினி நூலக மைய எண் 940373421.
- ↑ Some Madras Leaders. Allahabad Printed at Standard Press. 1922.
- ↑ Mohammed, U. (2007). Educational Empowerment of Kerala Muslims: A Socio-historical Perspective (in ஆங்கிலம்). Other Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903887-3-3.
- ↑ "Madeenathul Uloom Arabic College". www.muacollege.ac.in. Archived from the original on 2019-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.