சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்

சேரமன்

சேரமான் பெருமாள் தொன்மக் கதைகள் (Cheraman Perumal myths) என்பன மர்மமாக மறைந்துபோன கேரளத்தை ஆண்ட சேரமான் பெருமாள் மரபின் கடைசி அரசனைப்பற்றி வழங்கி வரும் கதைகளாகும். இக்கதைகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மரபுவழிக் கதைதொகு

சேரமான் பெருமாள் யார் என்பதே விவாததுக்குள்ளானதாக உள்ளது. மகோதயபுரத்தை ஆண்ட பிற்காலச் சேர அரசர்களில் முதலாவது அல்லது கடைசி அரசனாக இருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளின் வரலாற்றில் பல்வேறு சேரமான் பெருமாள்கள் குறித்த குறிப்புகள் காணப்படுவதால் இச்சேரமான் பெருமாள் உண்மையில் யார் என்பதை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இவன் ஆண்ட காலம் 12 ஆண்டுகள் (சில கதைகளில் 20 ஆண்டுகள்) என நம்பப்படுகிறது.[1]

மக்களிடையே தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டும்வகையில், கேரள நம்பூதிரிகளால் சேரமான் பெருமாள் மரபுவழிக்கதைகள் உண்டாக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.[1] பிராமண மரபுவழிக் கதைகள் ஒன்றில், உள்ளூர் கிராமக் குழுவினர் திறமையாக செயல்படாமையால், ஆட்சி செய்வதற்காக கேரளத்துக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் சேர மரபினர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அரசர்கள் சேரமான் என்று அழைக்கப்பட்டனர்; அவர்களை உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காக, அவர்கள் பெயருடன் பெருமாள் (கடவுள்) என்ற பட்டமும் சேர்க்கப்பட்டது என்பது இக்கதையின் கூற்று. மேலும் சேரமான் பெருமாள் அரசர்கள் பன்னிருவர் என்றும் கூறுகிறது. ஆனால் கேரளோல்பத்தியின்படி, இவ்வரசர்களின் எண்ணிக்கை 20 ஆகும்.

கேரளத்தில் புத்தம் அதிகம் பரவியிருந்ததால், பெருமாள் என்பது புத்தர் என்பதன் ஒத்த பெயராக இருந்திருக்கவேண்டும் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.[1] பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும் அரச துறவியுமான குலசேகர ஆழ்வாரின் பெயரிலிருந்து பெருமாள் என்ற பட்டப்பெயர் பெறப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இராமரின் சிறந்த பக்தராக இருந்தவர் குலசேகர ஆழ்வார். இவருக்கு பெருமாள் என்ற பட்டப்பெயர் உண்டு. மேலும் இவரது இன்றைய சீடர்களும் இதே பட்டப்பெயரை பயன்படுத்துகின்றனர். மார்த்தாண்ட வர்மர் என்ற பெயருடன் "பத்மநாபதாசர்" என்ற பெயரையும் கொண்ட திருவிதாங்கூர் அரசர்களும்[2] குலசேகராழ்வாரின் சீடர்களாவர்.

சேரமான் பெருமாளின் மர்ம மறைவுதொகு

தனது ஆட்சியின் இறுதிகாலத்தில் சேரமான் பெருமாள் கடைசியாக எங்கு சென்று மறைந்தான் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன:

ஆனால் இவற்றுக்கான சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவர் சென்று மறைந்த இடம் எதுவென்பது புதிராகவே உள்ளது

சேரமான் பெருமாளை பல்வேறு ஆட்களாக அடையாளப்படுத்தும் கதைகளும் உள்ளன:

 • கேரளத்தின் அரச பரம்பரையைத் தோற்றுவித்தவன் மற்றும் ஒரு சத்திரிய குலப்பெண் மற்றும் மூன்று சூத்திர குலப் பெண்களின் கணவன்.[1]
 • ஈழவர்களின் பாதுக்காப்பின்கீழ் தச்சர்களைத் திருப்பிக் கொண்டுவருமாறு ஈழத்துக்குச் செய்தியனுப்பிய அரசன்.[1]
 • கிபி 628 இல் மெக்காவிற்குச் சென்று இசுலாமிய சமயத்தில் இணைந்து அப்துல் ரஹ்மான் சமிரி எனப் பெயர் மாற்றியவர்.[1]
 • இசுலாமிய வட்டங்களில் நிலவும் கதைப்படி, நிலவின் பிளப்பைக் கண்டவர்; முகம்மது நபியால் தியாஜுதீன் என்ற பெயரில் இசுலாமியத்திற்கு மாற்றப்பட்டவர்.[1]
 • நாயர் தலைவருக்கு வாளைப் பரிசளித்து அவரை கோழிக்கோட்டின் சாமூத்திரி ஆக்கியவர்.[1]
 • இரு சிரியன் கிறித்துவ வணிகர்களுக்கு (Mar Sabor, Mar Proth) வணிகம் செய்ய உரிமையை வழங்கியவர்.[1]
 • ஆயிக்கார எஜமானனுக்கு அவன் அதிகாரத்தை ஆதரிக்கும்வகையில் தனது தலைப்பாகையைத் தந்தவர்.[1]
 • சைவத் துறவியாகி, சுந்தரருடன் சேர்ந்து தென்னிந்திய சிவத்தலங்களுக்குப் பயணம் சென்று, பின்னர் சிவனின் தொண்டராகக் கயிலைமலையை அடைந்தவர்.[3]
 • புத்தசமயத்தைத் தழுவியவர்.[1]

திரைப்படத்தில்தொகு

சேரமான் பெருமாள் அல்லது தாஜிதீன் வாழ்க்கையை மையப்படுத்தி, சேரமான் கதாபாத்திரத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் மலையாளத் திரைப்படம், இந்தியா மற்றும் ஓமான் கூட்டுத்தயாரிப்பாகத் தயாரிக்கப்படவுள்ளது.[4]

மேற்கோள்கள்தொகு

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 S.N., Sadasivan (Jan 2000), "Caste Invades Kerala", A Social History of India, APH Publishing, p. 303,304,305, ISBN 817648170X
 2. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்
 3. Wentworth, Blake(2013-04-24). "Bhakti Demands Biography: Crafting the Life of a Tamil Saint". {{{booktitle}}}. பரணிடப்பட்டது 2013-05-08 at the வந்தவழி இயந்திரம்
 4. "Mammootty to star in film on Kerala ruler Cheraman Perumal". Bollywoodlife.com. 8 May 2015 அன்று பார்க்கப்பட்டது.