கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்பது என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 1 ஏப்ரல் 2019 முதல் 31 சூலை 2020 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் கிருஷ்ண பிரியா, விஷ்ணு உன்னிகிருஷ்ண, சீமா, அனு ஆகியோர் நடித்துள்ளார். இத்தொடர் கொரோனா தொற்றுநோய் காரணமாக 31 சூலை 2020 அன்று 258 அத்தியாயங்களுடன் முடிவடைந்தது.[1]

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
வகை
இயக்கம்ராம் குமாரதாஸ் கே. சுலைமான்
நடிப்பு
  • கிருஷ்ண பிரியா
  • விஷ்ணு உன்னிகிருஷ்ணன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்258
தயாரிப்பு
தொகுப்புசி. சஜின்
எம்.டி. பிரபாகரன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்1 ஏப்ரல் 2019 (2019-04-01) –
31 சூலை 2020 (2020-07-31)

கதை சுருக்கம் தொகு

பிரீத்தி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள், விக்ரம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் இவர்கள் சேர்ந்தால் விக்ரம் குடும்பத்தின் சாபத்தின் படி விக்ரம் இறந்து விடுவான். சாபத்தை மீறி இவர்கள் எப்படி வாழ்வில் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

  • கிருஷ்ண பிரியா - பிரீத்தி[2]
  • விஷ்ணு உண்ணிகிருஷ்ணன் - விக்ரம்
  • சீமா[3] - அஞ்சனா தேவி (விக்ரமின் பாட்டி)

துணை கதாபாத்திரம் தொகு

  • அனு - கிருபா
  • அன்பழகன் - ராம்கி
  • அமிர்தா வர்மன் - சந்திரிகா
  • சரவணன் - வீரபாகு
  • பிரேமலதா - விக்ரமின் அத்தை
  • மது மோஹன் - விக்ரமின் மாமா
  • மதுமிதா - ஸ்ரீஜா

நடிகர்களின் தேர்வு தொகு

இந்த தொடரில் புதுமுக நடிகை கிருஷ்ணா பிரியா, பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக டிக் டாக், சரவணன் மீனாட்சி (பகுதி 3), அரண்மனை கிளி போன்ற தொடர்களில் நடித்த விஷ்ணு உண்ணிகிருஷ்ணன், விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் பிரபல நடிகை சீமா, அன்பழகன், அமிர்தா வர்மன் போன்ற பலர் நடித்துள்ளனர்.[4][5]

ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொகு

இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 1, 2019 முதல் சூலை 5, 2019 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. சூலை 8, 2019 முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பூவே பூச்சூடவா என்ற தொடர் ஒளிபரப்பானது. அதன் பிறகு நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி, பிப்ரவரி 24, 2020 முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, சூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி முடிவடைந்தது.

மதிப்பீடுகள் தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 3.66% 4.66%
2020 3.11% 3.64%
2.23% 3.44%

மேற்கோள்கள் தொகு

  1. "தொலைக்காட்சித் தொடர்கள் கொரோனா தொற்றுநோய் மூலம் முடிவடைகிறது". tamil.news18.com.
  2. "ஐந்தடி அழகே.. அக்டோபர் எழிலே.. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கிருஷ்ண பிரியா!". Filmibeat.
  3. "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்-தொடரில் நடிக்கும் சீமா". tamil.thehindu.com.
  4. "New show Kandukonden Kandukonden to premiere soon". timesofindia.com.
  5. "Kandukonden Kandukonden serial episodes". Filmbeat.com.

வெளி இணைப்புகள் தொகு

ஜீ தமிழ் திங்கள் - சனி இரவு 10:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அடுத்த நிகழ்ச்சி
இனிய இரு மலர்கள் இனிய இரு மலர்கள்
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி பகல் 1:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அடுத்த நிகழ்ச்சி
தேவதையை கண்டேன் இரட்டை ரோஜா
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி மாலை 6 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அடுத்த நிகழ்ச்சி
இனிய இரு மலர்கள் பிரியாத வரம் வேண்டும்
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அடுத்த நிகழ்ச்சி
சத்யா
மறுஒளிபரப்பு
பூவே பூச்சூடவா
ஜீ தமிழ் திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அடுத்த நிகழ்ச்சி
ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் பூவே பூச்சூடவா